தாளித்த இட்லி

தேதி: December 5, 2006

பரிமாறும் அளவு: 8 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

இட்லி அரிசி - நான்கு கோப்பை
உளுத்தம் பருப்பு - ஒரு கோப்பை
உப்புத்தூள் - இரண்டு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - இரண்டு தேக்கரண்டி
கடலைப்பருப்பு - மூன்று தேக்கரண்டி
காய்ந்தமிளகாய் - ஐந்து
எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - இரண்டு கொத்து


 

அரிசியையும் உளுத்தம்பருப்பையும் கழுவி குறைந்தது நான்கு மணிநேரம் ஊறவைத்து தனித்தனியாக அரைத்து கொள்ளவும்.
பிறகு உப்பைச் சேர்த்து இரண்டையும் கலக்கி இரவு முழுவதும் புளிக்க விடவும்.
பிறகு ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை காயவைத்து முதலில் கடுகைப் போட்டு பொரியவிட்டு தொடர்ந்து மற்ற எல்லாப் பொருட்களையும் போட்டு வறுத்து மாவில் கொட்டி கலக்கவும்.
கலக்கிய மாவை அரைமணி நேரம் ஊறவைத்த பிறகு இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.
இந்த தாளித்த இட்லிக்கு காரகுழம்பு போன்ற தேங்காய் அரைத்துவிட்ட குழம்பு வகைகள் பொருத்தமாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

மனோகரி ஆன்ரி,
உங்கள் இட்லி செய்தேன். 2 கிழமைக்கு முன். அப்ப தொடங்கி பதில் போட்டால் இதில் மட்டும் வர மறுத்துக்கொண்டே இருந்தது. ஒரு தடவை நீங்கள் ஓன் - லைன் ல் இருப்பதை அறிந்துகூட அனுப்ப முயன்றேன் முடியவில்லை.இன்று அனுப்பியே தீருவது என்ற முடிவுடன் எழுதுகிறேன்.

எனக்கு ரவை இட்லி தான் கொஞ்சம் சரி வரும் ஆனால் முதல்தடவை இந்த அரிசி இட்லி செய்தேன்.சுவை நன்றாக இருந்தது ஆனால் பூர்க்கவில்லை. அதற்கு காரணம். நான் அவதிப்பட்டுவிட்டேனோ தெரியவில்லை. உங்களைக் கேட்டிருக்க வேண்டும். நானே அரைக்கிறபோது அரிசியை குருணல் பதமாக அரைத்தேன் இது தப்பா? ஏனெனில் ரவை போட்டால் குருணல் மாதிரி தானே இருக்கும் என நினைத்தேன்.
இங்கு வின்ரர் காலத்தில் எதுவுமே எனக்கு புளிப்பதில்லை. தனிவீடென்பதாலோ என்னவோ. ஒரு நாள் முளுவதும் ஊறவைத்தேன். 3 நாட்கள் வெளியில் புளிக்க வைத்தேன். அதன் பின்னர் தான் பொங்கி நன்றாக வந்தது. ஆனால் இட்லி கார்ட் ஆக இருந்தது. உங்கள் இட்லியின் ராசி திடீர் விருந்தினர் வந்துவிட்டார்கள். எனக்கு ஒரே சந்தோசம்.. உங்களைத்தான் மனதில் நினைத்தேன்.அவர்கள் இதுவல்லவா இட்லி என்று புகழ்ந்து சாப்பிட்டார்கள். வந்தவர்களுக்கு எம்மை விட அதிக விருப்பம் இட்லி, தோசை. இங்கு தமிழ்க் கடைகள் இல்லை. அதனால் சமைத்தால்தான் எமது உணவுகள் உண்ணலாம்.

முடிந்தால் அரிசியை நன்றாக அரைக்க வேண்டுமா என்று கூறுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்