அதிகப்படியான வாந்தி

அறுசுவையின் தோழிகளுக்கு,

அன்பு வணக்கம்.
எனது தோழி ஒருத்தி கர்ப்பமாக இருகின்றாள். 2 மாதங்கள் ஆகின்றது.
அவள் எந்த உணவு எடுத்து கொண்டாலும் உடனேயோ அல்லது அரை மணி நேரத்திற்க்கு உள்ளாகவோ , வாந்தி மூலமாக வெளியே வந்து விடுகிறது. மேலும் அவள் உடல் நிலையும் பலவீனமாக இருப்பதாக மருத்துவரும் தெரிவித்து உள்ளார்.அவள் எந்த உணவை எடுத்து கொள்ளலாம். எந்த உணவினை எடுத்து கொண்டால் வாந்தி வருவது சற்று குறையும் என்று கூருங்கள தோழிகளே..

மிக்க நன்றி..

காலையில் வெறும் வயிற்றில் நீர் குடிக்க சொல்லுங்க... நிச்சயம் வெளிய வந்துடும். அதன் பின் சாப்பிடும் முதல் உணவு நிச்சயம் வயிற்றில் நிக்கும். உணவு முடிந்ததும் தண்ணி அதிகம் எடுக்க வேண்டாம். தண்ணி அடிக்கடி சிப் சிப்பா குடிக்க வேண்டும். கொழ கொழப்பாக உள்ள உணவு, நீர்க்க உள்ள உணவுகள் உடனே வெளிய வரும். அதனால் நீர் மட்டும் அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமா எடுக்க சொல்லுங்க. சாப்பிட்டதும் படுக்க வேண்டாம். கெட்டியான குழம்பு வகை பிசைந்து சாப்பிட நல்லா இருக்கும். தயிரில் உப்பு சர்க்கரை சேர்த்து கலந்து மெதுவாக அப்பப்ப கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட சொல்லுங்க. இப்போ சத்து கிடைக்க உதவும். வாந்தியு வராது இதை சாப்பிட்டா. எனக்கு டெலிவரிக்கு 2 வாரம் முன் வரை வாந்தி இருந்தது. இப்படி தான் எதையாவது உள்ள தள்ளிகிட்டு இருந்தேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் தோழி வனிதா கொடுத்த‌ ஆலோசனையை பின்பற்றுங்கள்.

எங்கள் குடும்ப‌ நண்பர் ஒருவரின் மகளுக்கு அட்மிட் ஆகும் அளவுக்கு இப்படித்தான் இருந்தது. அங்கு யாரோ ஒருவர் 'ஆல்பகோடா' பழம் சாப்பிட‌ சொல்லி ஆலோசனை தந்ததால் அதை பயன்படுத்தியிருக்கிறார்கள். பிறகு எந்த‌ பிரச்னையுமில்லையாம். நீங்கள் இதுபற்றி யாரிடமாவது கேட்டு இதையும் பயன்படுத்தி பாருங்கள்.

அன்புடன்
ஜெயா

அதிகபடியான‌ வாந்தி இருந்தால், டாக்டரிடம் சொல்லி வாந்தியை கன்ட்ரோல் செய்ய‌ மருந்து வாங்கி சாப்பிட‌ சொல்லுங்கள். ப்ரக்னன்சி சேஃப்டி மருந்தை தான் பரிந்துரைப்பார்கள்.சிலருக்கு எது சாப்பிட்டாலும் வரும்.. எது சாப்பிட்டால் வராது என்பதை உங்கள் தோழியே தான் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு கண்டுபிடிக்க‌ வேண்டும், மற்றவருக்கு ஒத்து போன‌ உணவுகள் அவருக்கு ஒத்து போகும் என‌ சொல்லவே முடியாது.. தோழிகள் சொன்னதையும் கடைபிடித்து பார்க்க‌ சொல்லுங்கள்.

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

மேலும் சில பதிவுகள்