ஜாப்பனீஸ் சீஸ் கேக்

தேதி: April 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

க்ரீம் சீஸ் - அரை கிலோ
முட்டை - 5
சீனி - 3 கப்
பால் - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
புளிப்பில்லாத கெட்டித் தயிர் - ஒரு கப்
வெனிலா எசன்ஸ் - 2 தேக்கரண்டி
கேக் பாத்திரத்தில் பூசுவதற்கு:
பட்டர்
மைதா மாவு - 2 தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும். ஓவனை முற்சூடு செய்து கொள்ளவும்.
க்ரீம் சீஸுடன் சீனியைச் சேர்த்து எலக்ட்ரானிக் ப்ளெண்டரால் 5 நிமிடங்கள் அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் பால் சேர்த்து அடிக்கவும். நன்கு க்ரீம் பதம் வந்ததும் முட்டைகளை உடைத்து ஊற்றி அடித்துக் கொள்ளவும்.
பிறகு தயிரைச் சேர்த்து ஸ்லோ மோடில் வைத்து அடித்து, எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
அத்துடன் மைதா மாவை சலித்துச் சேர்க்கவும்.
இந்தக் கலவையை ஸ்பேட்சுலாவால் கட்டிகளில்லாமல் நன்கு கலந்து வைக்கவும்.
கேக் பாத்திரத்தில் பட்டர் பூசி, மைதா மாவை பரவலாகத் தூவி கேக் கலவையை ஊற்றவும். பிறகு மைக்ரோவேவ் தட்டில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கேக் பாத்திரத்தை வைத்து 180 டிகிரியில் ஒரு மணி நேரம் பேக் செய்து எடுக்கவும். ஒரு டூத் பிக் கொண்டு கேக் வெந்துவிட்டதா என்று பார்த்துவிட்டு, வேகவில்லையெனில் மேலும் 10 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கலாம்.
டேஸ்டி ஜாப்பனீஸ் சீஸ் கேக் ரெடி. இந்த கேக் செய்வதற்கு எனக்கு சரியாக ஒரு மணி நேரமானது. அவரவர் உபயோகிக்கும் ஓவனைப் பொருத்து நேரம் மாறுபடும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கல் ரெசிபி ஜாப்பனீஸ் சீஸ் கேக் செம டெம்பிடிங் ஆ இருக்கு... சூப்பர் ரெசிபி :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

கதீஜா உங்க கேக் அப்படியே வெண்ணெய வெட்டி வச்சது போல இருக்கே, அப்படியே எடுத்துக்கவா? குக்கரில் செய்ய முடியுமா கதீஜா? செய்யனும் போல இருக்கு. பொருட்கள் எல்லாமே இருக்கு.

ஜாப்பனீஸ் சீஸ் கேக் சூப்பர். குறிப்பும் எளிமையாக உள்ளது. புகைபடமும் தெளிவாக உள்ளது.

வெகு நாட்களுக்கு பின் உங்க குறிப்பு வருகிறதோ?? மகிழ்ச்சி :) ரொம்ப அருமையா செய்திருக்கீங்க. வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கேக் அருமையா இருக்கு. செய்து பார்க்க ஆசை. முடிஞ்சா ட்ரை பண்ணி பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நீண்ட நாள்க்கு பிறகு சூப்ப்ர் கேக்கோட சூப்பர் எண்ட் ரி.கேக்பார்க்கும்போதே சாபிடனும் போல இருக்கு

Be simple be sample

அன்பு கதீஜா,
நலமா? எத்தனை நாளாச்சு பேசி? குழந்தைகள் நலமா? முகநூலில் பையன் பிறந்தநாள் போட்டோ காண்பித்தார். ஸ்கூல் போறாரா? தங்கை, அம்மா நலமா?

சாரி, சாரி. நிறைய‌ நாள் ஆனதால் ஆர்வக் கோளாறு.
நல்ல‌ குறிப்பு. செய்து பார்க்கிறேன்.கதீஜா போட்டோவுக்கு சொல்லவா வேணும்? இனி ரெகுலரா வருவே, இல்ல‌? வரணும். சரியா?

/பிறகு மைக்ரோவேவ் தட்டில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி கேக் பாத்திரத்தை வைத்து/
இது எனக்கு புரியலை.

அன்புடன்,
செல்வி.

உங்களின் பழைய குறிப்புகளை அறுசுவையில் பார்த்திருக்கிறேன் கதீஜா, மைதா மாவு சேர்த்து சீஸ் கேக்கா? வித்தியாசமாக இருக்கு. பார்க்கவே சாப்பிடணும் போலுள்ளது. மேலும் பல குறிப்புகள் கொடுங்கள்.

என்னுடைய குறிப்பு நீண்ட வருடங்கள் கழித்து அறுசுவையில் இடம் பெறுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என் குறிப்பை வெளியிட்ட அறுசுவை அட்மின் பாபு அண்ணன், மற்றும் அறுசுவை டீமிற்க்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
செய்யது கதீஜா.

உங்களுடைய கருத்துக்கு நன்றிங்க.

உங்களுடைய வாசகம் அருமையா இருக்கு

என்றும் அன்புடன்,
செய்யது கதீஜா.

கதீஜா கேக் அருமையா இருக்கு, வாழ்த்துக்கள் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சாப்டான சாப்ஞ்சி கேக்.ஜப்பான் ரெசிபி நல்லா இருக்கு.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

உங்க கருத்துக்கு நன்றிங்க. உங்களுக்குதான் எடுத்துக்கோங்க.ரைஸ்குக்கரில் செய்யலாம் நீங்க அப்படி செய்யும் போது குக்கர் பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி இந்த கேக் கலவை ஊற்றிய பாத்திரத்தை வைத்து மேலே ஒரு மூடி போட்டுடுங்க. தண்ணீர் கேக் பாத்திரத்தில் வராமல் இருப்பதற்க்கு.கேக் கீழே ப்ரவுன் ஆகாமல் வெண்மையாகவே கிடைக்கும்.

என்றும் அன்புடன்,
செய்யது கதீஜா

உங்கள் கருத்துக்கு நன்றிங்க.

என்றும் அன்புடன்,
செய்யது கதீஜா

நன்றி வனி. உங்கள் அளவுக்கு எல்லாம் இல்லைப்பா நீங்க கலக்கல் குறிப்பா கொடுத்து அசத்துறீங்க வாழ்த்துக்கள் வனி

என்றும் அன்புடன்,
செய்யது கதிஜா.

உங்க கருத்துக்கு நன்றிப்பா. செய்து பாருங்க பிள்ளைங்களுக்கு ரெம்ப பிடிக்கும்.

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

நன்றிப்பா உங்க கருத்துக்கு. சாப்பிட்டால் போச்சு இங்க வாங்க செய்து தர்றேன்.

என்றும் அன்புடன்,
செய்யது கதிஜா.

நான் நலம். மற்றும் வீட்டில் உள்ள அனைவரும் நலம். நீங்க எப்படி இருக்கீங்க? வீட்டில் அனைவரும் நலமா? சாரி அக்கா பதில் தர தாமதம் ஆனதுக்கு பொண்ணு ஸ்கூல் சேர்ந்து 2 நாள் ஆகுது அதனால ரெம்பவே பிஸி. உங்க கருத்துக்கு ரெம்ப நன்றி அக்கா நான் நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக வருகிறேன். நீங்க அறுசுவைக்கு முன்னாடி மாதிரி வர்றீங்களா?
அக்கா மைக்ரோவேவ் கன்வெக்‌ஷனில் செராமிக் ப்ளேட்தான் கொடுத்திருக்காங்க அதனால ஒரு டம்ளர் தண்ணீர் அதில் ஊற்றிவிட்டு கேக் பாத்திரத்தை வைப்பேன் கீழே ப்ரவுன் ஆகாமல் கேக் வெண்மையாக கிடைக்கும். செய்து பார்த்துட்டு சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

ரெம்ப நன்றிப்பா உங்க கருத்துக்கு செய்து பாருங்க நல்ல சாஃப்டாக இருக்கும். முடியும் சமயம் குறிப்பு கொடுக்கிறேன்பா.

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

உங்க கருத்துக்கு நன்றிங்க.

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

உங்க கருத்துக்கு நன்றிப்பா மீனல்

வாழ்த்துக்கள் கதீஜா, பார்க்கவே மெத்துன்னு சூப்பராக இருக்கு

Jaleelakamal

உங்கள் கருத்துக்கு நன்றி ஜலீலா அக்கா

அன்புடன் கதீஜா