பெளன்டி சாக்லெட்

தேதி: April 8, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

சாக்லெட் சிப் - அரை கப்
உலர்ந்த தேங்காய் - ஒரு கப்
கன்டண்ஸ்ட் மில்க் - அரை டின்
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பவுலில் உலர்ந்த தேங்காயுடன் கன்டண்ஸ்ட் மில்க்கைச் சேர்த்து நன்கு கலந்து, அத்துடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து மீண்டும் ஒரு முறை கலந்து கொள்ளவும்.
இந்த தேங்காய் கலவையை உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
சாக்லெட் சிப்பை மைக்ரோவேவில் ஒரு நிமிடம் வைத்து உருக்கிக் எடுத்துக் கொள்ளவும். (நான் டார்க் சாக்லெட் சிப் உபயோகித்துள்ளேன்).
உருக்கிய சாக்லெட் கலவையில் தேங்காய் உருண்டைகளைப் பிரட்டி எடுக்கவும்.
சாக்லெட் கலவையில் பிரட்டியெடுத்த உருண்டைகளை ஒரு தட்டில் அடுக்கி ஃப்ரிட்ஜில் 2 - 3 மணி நேரங்கள் வைத்தெடுக்கவும்.
சுலபமாக வீட்டில் செய்யக் கூடிய பெளன்டி சாக்லெட் தயார். உள்ளே தேங்காய் கலவையுடன் வெளியே சாக்லேட் ஷெல் போன்றிருக்கும்.

இதில் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களும் வீட்டில் இருக்கும் பட்சத்தில் 5 நிமிடங்களில் செய்துவிடலாம். குளிரூட்ட மட்டும் தான் நேரம் எடுக்கும்.

உலர்ந்த தேங்காய் இல்லாதவர்கள் துருவிய தேங்காயை 1 - 2 மணி நேரம் ஃப்ரீஸரில் வைத்தெடுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து பயன்படுத்தவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹே நான் தான் பர்ஸ்ட், எனக்கு தான் எல்லா சாக்லேட்டும், வாணி யம்மி சாக்லேட்ஸ். ச்ச்சஹாஹா சப்புக்கொட்டுது நாக்கு. உலர்ந்த தேங்காய்க்கும் வழி சொல்லிட்டீங்க இன்னக்கே செய்து பசங்கள அசத்த வேண்டியதுதான். நன்றி வாணி

வனி அக்கா : பெளன்டி சாக்லெட் செம யம்மி ரெசிபி.. கடைசி ப்ளேட் ல் இருக்குறதுல 2 பார்சல் ப்ளீஸ்.... இந்த சண்டே செய்துட்டு சொல்லுறேன்... டெடி சோ சோ சோ கியூட் லவ் யூ டெடி பியர்.... :)

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

Dear Vani,

Very nice receipe will try at home for sure!!!!!!! Thanks a lot

வாவ்!! சூப்பர்! எனக்கு பௌன்டி ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ட்ரை பண்றேன் வாணி.

‍- இமா க்றிஸ்

பெளன்டி சாக்லெட் பென்டாஸ்டிக், சூப்பர் யாரும் பிடிக்காதுனு சொல்ல முடியாத ஒரே ரெசிபி சாக்லெட் தான் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர். இது பார்க்க ஃப்பாரின் சாக்லெட் போல இருக்கு இப்பவே சாப்பிடனும் பா.

இதே இங்ரெடியண்ட்ஸ்... ஆனா தேங்காய் சாக்லேட் லட்டுன்னு செய்வேன். சாக்லேட், கண்டன்ஸ்டு மில்கை தேங்காயோடு ஒன்றா கலந்துருவேன். அது வித்தியாசமா இருக்கும்... உங்களோடது வெகு அழகா, சிம்பிளா இருக்கு. அட்ராக்டிவ் டூ. உங்களுடையதை நடுவில் பாதியா வெட்டி ஒரு படம் போட்டிருக்கலாம் வாணி... ப்ரவுன் கோட்டிங், வெள்ளை நடு பகுதி... ரொம்ப அழகா இருந்திருக்கும். :) சூப்பரா இருக்கு வாணி... வித்தியாசமான சிம்பிளான குறிப்புகளா கொடுத்து அசத்துறீங்க, படத்தை வெச்ச கண் வாங்காம பார்த்தேன், சுத்திப் போடுங்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு சாக்லேட்ல புடிச்சது பௌன்டி சாக்லேட்தான். கடைக்கு போனா சாக்லேட் செக்‌ஷன்ல இதைத்தான் தேடுவேன். இங்க இது விலை ஜாஸ்தி. அடிக்கடி வாங்க முடியாது. இனி நானே செய்துருவேன். படங்களும் சாக்லேட்டும் சூப்பர் வாணி. அசத்துங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,
சூப்பரா இருக்கு. பார்க்கவே அழகா இருக்கு.எங்க‌ வீட்டில் ஸ்வீட்டுக்குத்தான்
தடா:(
சாக்லேட் சிப் தேடணும். நீல்கிரிஸில் பார்க்கணும். மகனும், நானும் மட்டுமாவது செய்து சாப்பிட்டுடணும். யம்மி!

வனி சொன்ன‌ மாதிரி வெட்டி வைத்திருந்தால் இன்னும் அழகா இருந்திருக்கும். படங்கள் அழகு.

அன்புடன்,
செல்வி.

வனி நீங்க சொன்னது போலவே இரண்டு சாக்லேட் உருண்டைகளை சரி பாதியாக வெட்டி ஒரு தட்டில் வைத்து படம் பிடித்து அனுப்பினேன்.கடைசி படத்திற்க்கு முந்தின படம், வருமென்று நினைத்தேன்,ஏனோ தெரியவில்லை அந்த படத்தை போடவில்லை. நீங்களும் சொல்லி வைத்தாற்ப் போன்று கேட்டு விட்டீர்கள். ஒரு வேளை அட்மின் அல்லது டீம் யாராவது இதைப் பார்த்து விட்டால் இணைத்து விடுவார்களென்று நினைக்கிறேன்.

செய்துப் பார்த்துட்டு பதில் போடுங்கள், நன்றி

என் பெயர் வாணி. செய்துப் பார்த்துட்டு பதில் போடுங்கள். அப்புறம் நாய்க்குட்டி என் மகளோடது ,சாக்லேட்டுகளை படம் எடுக்கும் போது அவள் தான் இந்த பப்பி வாயில் சாக்லேட் கவ்விக் கொண்டிருக்கிறது என்று சொல்லி சாக்லேட் தட்டு பக்கத்தில் வைத்தாள்.
நன்றி

செய்துப் பார்த்துட்டு பதில் போடுங்கள் வித்யா, நன்றி

டிரை பண்ணிட்டு அவசியம் சொல்லுங்க இமா, நன்றி

வருகைக்கும்,பதிவிற்க்கும் நன்றி பாலபாரதி , இது சுலபமா வீட்டிலே செய்துடலாம்.

ஊக்கமளிக்கும் பதிவிற்க்கும், பாராட்டிற்க்கும் நன்றி வனி.

உங்களுக்குப் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி உமா, அவசியம் செய்துப் பாருங்க.
நன்றி

அவசியம் செய்து பாருங்க செல்வி மேடம்,உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு கூட செய்துக் கொடுத்து அசத்தலாம்.
நன்றி

வாணி நாளையோட என் மகளுக்கு எக்ஸாம் முடிது, இங்க இருக்கும் குறிப்புகள் செலக்ட் பண்ணி செய்து பார்க்கலாம்னு இருக்கேன். அதில உங்க முட்டாய் கண்டிப்பா செய்வேன் :) படம் ரொம்ப அழகா இருக்கு, நாய்க்குட்டி செமஷோக்காகீறார் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

கலக்கிபுட்டீங்க... கேட்டதும் படத்தை போட்டு அசத்திபுட்டீங்க. தேன்க்யூ டீம், சூப்பர் வாணி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவசியம் செய்து பாருங்கள் அருள்,என் மகளுக்கும் இப்போ 2 வாரம் விடுமுறதான், நானும் அறுசுவையில் தான் புதுசு புதுசா பார்த்து சமைத்துக் கொண்டிருக்கிறேன். நன்றி

அப்புறம் கேட்ட இருவரும் அண்ணனோட உடன்பிறவா சகோதிரிகளாச்சே வனி :))
மிக்க நன்றி டீம்

சூப்பராக இருக்கு வாணி.எங்க வீட்டில் எல்லோருக்கும் பெளன்டி சாக்லேட் ரொம்ப பிடிக்கும்.சாக்லேட் சிப்ஸ் கெல்லாக்ஸ் யூஸ் பண்ணலாமா.இன்னொரு சந்தேகம் ஃப்ரிட்ஜ் ல வைக்க வா இல்ல ஃப்ரீசர் ல வைக்கணுமா.டெடி சூப்பர் என்று குட்டி செல்லதிற்கு சொல்லுங்க.வாழ்த்துக்கள்.

Expectation lead to Disappointment

வாணி இந்த சாக்லேட் எனக்கும் பிடிக்கும் ஹஸ்ஸுக்கும் ரெம்ப பிடிக்கும் சூப்பர் குறிப்பு தந்ததுக்கு நன்றி செய்துட்டு சொல்றேன்பா

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

சாக்லேட் சிப்ஸ் கெல்லாக்ஸ் என்பது என்னவென்று என்னால் புரிந்து கொல முடியவில்லை மீனாள். நான் அது உபயோகித்ததும் இல்லை. ஃப்ரிட்ஜில் வைத்தால் போதும்.
செய்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் தோழி
நன்றி

செய்துப் பார்த்துவிட்டு சொல்லுங்கள் நன்றி கதீஜா

வாவ்... பெளன்டி சாக்லெட் யம்மியா இருக்கு வாணி. இதில் குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களும் வீட்டில ரெடியா இருக்கு, நாளைக்கே செய்துபார்த்துவிடுகிறேன். அப்புறம் அந்த காது வைத்த வெள்ளைநிற குட்டி கிண்ணங்கள் செம க்யூட்டா இருக்கு!

அன்புடன்
சுஸ்ரீ

செய்து பார்த்துட்டு எப்படியிருந்ததென்று பதிவிடுங்கள் சுஸ்ரீ.
அப்படியா !! அருள் போலவே உவமையெல்லாம் எடுத்து விடறீங்க. :))
நன்றி