பட்டர் பிஸ்கட்

தேதி: April 10, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

வெண்ணெய் - 100 கிராம்
மைதா மாவு - 140 கிராம்
பொடி செய்த சீனி (அ) ஐசிங் சுகர் - 40 கிராம்
முட்டையின் மஞ்சள் கரு - 3
வெனிலா சுகர் பவுடர் (அ) வெனிலா எசன்ஸ் - அரை தேக்கரண்டி
முந்திரி - அலங்கரிக்க


 

வெண்ணெயை உருக்கி, அத்துடன் பொடி செய்த சீனியைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.
அதனுடன் முட்டையின் மஞ்சள் கரு மற்றும் வெனிலா சுகர் பவுடர் சேர்த்து நன்கு கலக்கவும்.
பிறகு மைதா மாவைச் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
மெல்லியதான ட்ரேயில் எண்ணெய் தடவி, அதில் பிசைந்த மாவைச் சிறிய வட்ட வடிவ பிஸ்கட்டுகளாகத் தட்டி இடைவெளிவிட்டு வைக்கவும். நடுவில் முந்திரி வைத்து அலங்கரிக்கவும்.
180 டிகிரியில் முற்சூடு செய்யப்பட்ட அவனில் 10 நிமிடங்கள் வரை வைத்து எடுக்கவும். சுவையான பட்டர் பிஸ்கட் ரெடி. டீ, காபியுடன் பரிமாறவும்.

இதில் குறிப்பிட்டுள்ள அளவில் 20 பிஸ்கட்டுகள் வரை செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்குங்க. பிஸ்கட் லிஸ்ட்டில் ஏற்கனவே ரேணுவுடையது பெண்டிங்... அதை செய்து முடிச்சுட்டு இதையும் ட்ரை பண்றேன். ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சுலபமான சுவையான பிஸ்கட்.நானும் இதே போல நெய் சேர்த்து செய்வேன் முசி, ரெஸிப்பி வரும்
பிரஸண்டேசன் சூப்பர்.
உங்க தேங்காய் பிஸ்கட் செய்தேன்,பின்னூட்டம் கொடுத்துள்ளேன்

பிஸ்கட் அருமை முசி. பிரசண்டேஷன் நல்லாருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் § டீமிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

செய்து பாருங்க‌,பேக்கரியில் வாங்குவது போலவே டேஸ்டா இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு நன்றி,தேங்காய் பிஸ்கட் செய்து பார்த்து பதிவிட்டமைக்கும் நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,உமா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

பட்டர் பிஸ்கட் ரொம்ப நல்லாருக்கு முசி. கடைசிப்படம் அருமை! அவசியம் செய்துப்பார்க்கிறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

அருமையான பிஸ்கட் சூப்பர். அழகா இருக்கு.

அன்பு முசி,
நான் முட்டை சேர்க்காமல் செய்வேன். பிஸ்கட் அழகா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

பட்டர் பிஸ்கட் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் பிடித்த‌ ஓன்று.எனக்கு தான் ஓவன் பயன்படுத்துவதில் கொஞ்சம் பயம்,சொதப்பி விடுமோ என்று.செய்முறை எளிது.முற்சூடு 180 டிகிரி என்பது எவ்வளவு நிமிஷம் வைக்க‌ வேண்டும்.என்னுடைய‌ ஓவனில் டிகிரி எல்லாம் இல்லை.படங்கள் அழகு..வாழ்த்துக்கள் முசி.

Expectation lead to Disappointment

முசி பிஸ்கட் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு 50 கிராம் கணக்கு சொல்லுறீங்களா நான் இப்பதான் ஓவன் வாங்கி இருக்கேன் எப்படி யூஸ் பண்ணுறதுனு தெரியல180 டிகிரின எவளவு நேரம் வைக்கணும் என்னுடைய ஓவன்ல கிரில்+கன்வேக்சன் எல்லாம் இருக்கு எப்படி பயன் படுத்தனும்னு சொன்னிங்கன ரொம்ப ஹெல்பா இருக்கும்

நன்றி,அவசியம் செய்து பாருங்க‌.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி அக்கா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வாழ்த்திர்க்கு மிக்க‌ நன்றி.ஓவனை ஆன் செய்து 3 நிமிடத்திர்க்கு பின் பிஸ்கட்டை வைத்து 5 கழித்த‌ பின் நிற‌ம் வந்த‌ உடன் பிஸ்கட்டை வெளியே எடுக்கலாம்.பிஸ்கட்டை பார்க்கும் போதே ஒரலவிர்க்கு புறியும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இதன் அளவிலேயெ பாதியாக‌ குறைத்து செய்து பாருங்கள்.தெர்மொஸ்டா நம்பர் 6 அள‌வில் 10 நிமிடம் வைத்தால் சரியாக‌ வரும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

nice...
indha biscut egg ilamalm panalama..
egg smell pidkadunu ninaipavangha

//egg smell pidkadunu ninaipavangha// வனிலா போட்டிருக்காங்க சுல்தானியா. இதுல முட்டை வாசனையே வராது. பயமில்லாமல் ட்ரை பண்ணுங்க.

குறிப்பு சூப்பர் மூஸி. கடைசி படம்.... ஆஹா! அருமை.

‍- இமா க்றிஸ்

கொஞ்சம் சுகர் கூட சேர்த்து செய்யலாமா யாராவது டவுட் கிளியர் பண்ணுங்க ப்ளீஸ்

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி

நன்றி சுல்தானிய்யா.
நன்றி இமாம்மா;டவுட் கிளியர் செய்ததர்க்கும்.

அபிராஜசேகர் ;சுகர் அளவை கூட்ட‌ தேவைஇல்லை.இந்த‌ அளவே போதுமானது.(கூட்டினால் பதம் பமாரிவிடும்,மாவு அதிகம் சேர்க்கும் படி ஆகிவிட்டும்).

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

இவ்வளோ சீக்கிரமா பதில் சொன்னதற்கு ரொம்ப நன்றிங்க.. ஹி ஹி அதுக்கு இடையே இதே பிஸ்கட், உங்க தேங்காய் பிஸ்கட் எல்லாம் செய்தாச்சு.. என் முகநூலில் போட்டுருக்கேன்.நம் தோழிகள் பார்த்தாங்க.. நன்றிங்க..

மாற்றம் ஒன்றே மாறாதது

அபி