பலாப்பழ கேக்

தேதி: April 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

பலாச்சுளைகள் - 6 (அரைக்க) + ஒன்று (நறுக்கிச் சேர்க்க)
மைதா மாவு - ஒரு கப்
சர்க்கரை - அரை கப்
எண்ணெய் - கால் கப்
பால் - கால் கப்
வெனிலா எசன்ஸ் - சில துளிகள்
மஞ்சள் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை (விரும்பினால்)
முட்டை - 2
பேக்கிங் பவுடர் - ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா - அரை தேக்கரண்டி


 

பலாச்சுளைகளுடன் சர்க்கரையைச் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். பேக்கிங் ட்ரேயைத் தயாராக வைக்கவும். அவனை 180 c’ல் முற்சூடு செய்யவும்.
மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து சலித்து வைக்கவும்.
பாத்திரத்தில் முட்டைகளை ஊற்றி நன்றாகக் கலந்து, பால் மற்றும் எண்ணெய் சேர்த்து கலக்கவும்.
அதனுடன் ஃபுட் கலர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்க்கவும்.
பிறகு அரைத்து வைத்துள்ளப் பலாச்சுளைக் கலவையை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அத்துடன் சலித்து வைத்துள்ள மாவைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கலக்கவும். விரும்பினால் கடைசியாக ஒரு பலாச்சுளையைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து கலந்துக் கொள்ளலாம்.
இந்தக் கலவையை பேக்கிங் ட்ரேயில் ஊற்றி ஒரு தட்டு தட்டி அவனில் வைத்து 30 - 40 நிமிடகள் வரை பேக் செய்து எடுக்கவும். (உங்களது அவனையும், பயன்படுத்தும் ட்ரேயையும் பொருத்து நேரம் மாறுபடும்). கேக்கின் நடுவில் டூத் பிக்கை விட்டு சுத்தமாக வெளியே வரும் போது எடுக்கவும்.
மிகவும் சாஃப்ட்டான, சுவையான பலாப்பழ கேக் தயார். நன்றாக ஆறியதும் ட்ரேயில் இருந்து எடுத்து துண்டுகள் போடவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பலாப்பழ கேக் சூப்பர். படங்களும் சூப்பர்.

சிம்ப்ளி வாஆஆஆஆஆஆஆஅவ்.
திரும்ப‌ திரும்ப‌ பார்க்கிறேன்.. நடு நடுவில் வாய்க்கு கிடைக்கும் ச்சூயி பலாபழ‌ துண்டுகள் யம்மியா இருக்கும் என கற்பனையும் வந்து போனது. கிளப்பி விட்டிட்டிங்க‌... :(

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

பலாபழ‌ம் கேக் சிம்பிளி சூப்பர்

சூப்பர்ப் கேக் வனிதா, முகப்புல இருக்கற போட்டோ ஹார்ட்ல இருந்து ஒரு பீஸ் வெளியில் வருவது சூப்பரா இருக்கு. கேக் எக்ஸ்பேர்ட்டா நீங்க? அசத்தல இருக்கு

ஆஹா வனி வாழ்த்துக்கள் பழாபழம் கேக் புதுசா இருக்கு அப்படியே பார்சல் அனுப்பிடுங்க

என்றும் அன்புடன்,
செய்யதுகதீஜா.

அன்பு வனி,
பலாப்பழத்தில் கேக்! வித்தியாசமா இருக்கு. செய்து பார்த்துடணும்.

அன்புடன்,
செல்வி.

கேக் சூப்பர், நான் பேகிங் பவுடர் மட்டும் தான் கேக்கிற்க்கு சேர்ப்பேன். அவசியம் சோடாவும் சேர்க்கணுமா வனி ??

பலாப்பழ‌ கேக் சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.நீங்க‌ கேக் ஸ்பெஷ‌லிஸ்ட்.உங்களை அடிச்சுக்க‌ ஆளே இல்லை.நான் ஊருக்கும் வரும் போதும் கேக் எப்படி செய்து என்று பார்க்கவும் சாப்பிடவும் உங்களை தேடி ஓடோடி வருவேன்.கடைசி படம் அழ‌கோ அழகு.போட்டோகிராபி உங்க‌ கிட்ட‌ தான் கத்துகணும்.அதுக்காகவும் வருவேன்.

Expectation lead to Disappointment

பலாப்பழ கேக் சூப்பர் வனி. வாழைப்பழ ராகி கேக்கோட சாயல் கொஞ்சம் தெரியுது. அதை வச்சு ட்ரை பண்ணிங்களா? இப்பதான் இங்க பலாபழ சீசன் ஆரம்பிக்குது. பழம் வாங்குற நேரம் கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பலாப்பழமே அதன் சுவை அருமை அதில் கேக் என்றால் ஸ்ஸ் யம்மி.

Jaleelakamal

வனி அக்கா கேக் செம்மாய இருக்கு ஸூபர்

பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு. நிட்சயமா செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

அருமை அருமை... பார்க்கவே வாய் ஊறுது...

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பழாப்பலம் கிடைக்கும் போது செய்து பார்க்கிறேன்.சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வனி, மீண்டும் ஒரு அசத்தல் கேக் :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழ்வினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

கிளப்பி விட்டா செய்து சாப்பிடனும்... ;) செய்து சாப்பிடுங்க ரம்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) எக்ஸ்பர்ட் எல்லாம் இல்லைங்க... பீட்டர் இல்லாம செய்யக்கூடிய வகை எல்லாம் முயற்சி செய்வேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வெகு நாட்களுக்கு (மாதங்களுக்கு) பின் உங்க பதிவை என் குறிப்பில் பார்ப்பது மகிழ்ச்சி :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) சோடா இல்லாமல் எப்படி வரக்கூடும்னு தெரியல வாணி. ஏற்கனவே உமா அப்படி ஒரு ரெசிபி ட்ரை பண்ணாங்க. ஒரு முறை அவங்களை கேட்டுடுவோம் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ஸ்பெஷலிஸ்ட் எல்லாம் நிச்சயம் இல்லை மீனாள்... ரம்யா செய்யும் அளவுக்கு எல்லாம் நான் இதுவரி முயற்சி பண்ணது கூட இல்லைங்க. வாங்க... செய்ய தெரிஞ்ச வகைகள் நிச்சயம் செய்து கொடுக்கறேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆல்மோஸ்ட் என் கேக் வகைகள் எல்லாம் சாயல் ஒரே போல தான் இருக்கும். நீர் அளவுக்கு ஏற்ப அது மட்டும் தான் மாறும். ;) உமா.. சோடா இல்லாம ஒரு கேக் செய்தீங்களே... சரிய வந்ததா? சொல்லுங்க வாணிக்கு ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நலமா?? எப்போதேனும் இமா இழைகளில் அல்லது பாபு அண்ணா இழைகளில் உங்க பதிவை பார்ப்பேன்... இன்று என் குறிப்பில் கண்டது ஆச்சர்யம் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எப்போழுதுமே எங்க வீட்ல அம்மா, பெரியம்மா,நாங்க எல்லோருமே கேக்கிற்க்கு பேகிங் பவுடர் மட்டும் தான் பயன் படுத்துவோம்,பெரியம்மா புரொஃபஷனல் கேக் பேக்கர்,அவங்ககிட்டத்தான் பேக்கிங்க் படிச்சேன். உங்களோட எல்லா கேக்கிலும் சோடாவும் கலந்துள்ளதே, ஏதாவது காரணம் இருக்கா என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்டேன். தோழி வீட்டில் ஒருமுறை சோடா சேர்த்து சுவைத்த போது கொஞ்சம் உப்பு சுவை தெரிந்தது.அது சோடாவினால் வந்ததா என்று தெரியவில்லை

ஆத்தி!!! நீங்க எல்லாம் ப்ரொஃபஷனலா!!! நமக்கு அந்த அளவுக்கு எல்லாம் கேக் வராது வாணி. எல்லாம் மனம் போன போக்கில் முயற்சிப்பவை தான், எங்கும் படிக்கல. நான் செய்வதெல்லாம் ரொம்ப சிம்பிள் கேக் வகைகள். எல்லாமே பார்த்தீங்கன்னா ஏறக்குறைய மஃபின் வகை பேட்டரா தான் இருக்கும். அதிகமா ஃப்ரூட் கேக்ஸ் செய்வதால் எப்போதும் பேக்கிங் சோடாவும் சேர்ப்பது வழக்கம். பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா இரண்டுமே மாவை உப்ப செய்ய தான், ஆனால் அதிகம் பேக்கிங் பவுடர் சேர்த்தால் வெளியே எடுத்ததும் அழுந்திப்போகும்... அப்படி அழுந்தாமல் இருக்க பேக்கிங் சோடா சேர்ப்பது நல்லதுன்னும், பழ வகை கேக் அல்லது தயிர் சேர்க்கும் சைவ கேக் வகைகளுக்கு பேக்கிங் சோடா சேர்த்தால் நன்றாக உப்பி வரும் என்றும் கேட்டிருக்கேன் (மாலேவில் ஒரு குக் சொன்னாங்க). அந்த காம்பினேஷனில் தான் பயன்படுத்தறேன். நீங்க ப்ரொஃபஷனலா செய்து பழக்கம் உள்ளவர் தானே... இல்லாமல் தான் ட்ரை பண்ணிப்பாருங்க. எனக்கு அந்த அளவு இதுல எல்லாம் விஷய நியானம் இல்லை வாணி... அதனால் இல்லாம நல்லா வருமா என்று யோசிக்கவே தெரியல. நீங்க சொன்ன உப்பு சுவை... பேக்கிங் பவுடர் அதிகமானால் வரும் என நினைக்கிறேன்... அதுவும் சரியா தெரியல. கடவுள் புன்னியத்தில் இதுவரை ஒரு கேக்கும் சொதப்பல.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

புது புது கேக்கா கொடுத்து அசத்துறீங்க‌... அதுலயும் செய்யும் பொருளிலேயே பூவும்... அழகு அந்த‌ பூ....

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா