காளான் குழம்பு

தேதி: April 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

 

காளான் - 2 பாக்கெட்
பூண்டு - 5 பற்கள்
இஞ்சி - சிறு துண்டு
சின்ன வெங்காயம் - 5
கறிவேப்பிலை - 5 இணுக்கு
தக்காளி - ஒன்று
தேங்காய் - 2 துண்டுகள்
பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப
எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப
கடுகு - சிறிது
மஞ்சள் தூள்- அரை தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
வறுத்து அரைக்க:
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - அரை தேக்கரண்டி
மல்லி விதை - ஒரு தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை - ஒரு தேக்கரண்டி
அரிசி - ஒரு தேக்கரண்டி
சோம்பு - சிறிது
கறிவேப்பிலை - 4 இணுக்கு
சின்ன வெங்காயம் - கைப்பிடி அளவு.


 

வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும். காளானை சுத்தமாகக் கழுவி துடைத்து நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டை நசுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்துள்ளவற்றை வறுத்து ஆறவைக்கவும்.
ஆறியதும் அதனுடன் தேங்காய் சேர்த்து நைசாக அரைத்து வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலைப் போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து வாசனை வரும் வரை வதக்கவும்.
அதனுடன் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி குழைய வதங்கியதும் காளானைச் சேர்த்து வதக்கி, மல்லித் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும்.
காளான் நீர்விடத் தொடங்கியதும் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு பிரட்டவும்.
பச்சை வாசனை போனதும் தேவையான அளவு நீர் ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கவும்.
சுவையான காளான் குழம்பு தயார். மல்லித் தழை தூவி பரிமாறவும். இட்லி, தோசை, சாதத்திற்கு மிகவும் ருசியாக இருக்கும்.

இந்த குறிப்பு ரம்யா கார்த்திக் அவர்களின் கோழி குழம்பு குறிப்பைப் பார்த்துச் செய்தது. கோழிக்கு பதிலாக காளான் சேர்த்து செய்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

செல்வி குழம்பு சூப்பர். அப்படியே நாலு இட்லி காளான் குழம்பு பார்சல் பண்ணிடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

காளான் குழம்பு சூப்பர் அருள்.எங்க வீட்ல காளான் வாங்குவதில்லை, சிக்கன் வைத்து இன்றைக்கே டிரை பண்ணிடரேன்.

ரொம்ப நல்லா இருக்குங்க... :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உமா அனுப்பிட்டா போச்சு, உங்களுக்கு இல்லாத்தா?:) மிக்க‌ நன்றி .

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வாணி சிக்கன்ல‌ ரம்யா பண்ணி இருந்தது, ரொம்ப‌ சுவையா இருந்துச்சு, அதைய‌ நிறையமுறை செய்துட்டேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க‌, மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

Selvi akka
appadiyae parcel anupuga akka.....
kuzlambu coloura parkumbothaye sapitanumnu thonuthu...

மெய்ச்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
திவ்யா

அன்பு அருட்செல்வி,
குழம்பு வித்தியாசமாக‌ இருக்கு. ஒரு நாள் முயற்சி பண்ணி பார்ப்போம்.

அன்புடன்,
செல்வி.

சனிக்கிழமை டின்னருக்கு சிக்கன்ல இதை செய்தேன், ரொம்ப சுவையாக இருந்தது அருள்

intha dish na veetla en husbandku senji kuduthen.differenta irukunu sonnanga.en anniyum enna itha senji thara sollirukanga.thanks for ur dish akka.Happy to meet u akka