சிக்கன் வடை

தேதி: April 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - 100 கிராம்
பச்சை மிளகாய் - ஒன்று
பூண்டு - 3 பல்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 2 தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - பாதி
பட்டை - சிறிது
கிராம்பு - 2
புதினா - 5 இலைகள்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு


 

புதினா மற்றும் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கனை எலும்பில்லாமல் சிறு துண்டுகளாக நறுக்கிக் கழுவி தண்ணீரைப் பிழிந்து வைக்கவும். சிக்கனுடன் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, உப்பு, சோம்பு, பட்டை, கிராம்பு மற்றும் சிறிது புதினா சேர்த்து தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த சிக்கனுடன் கார்ன் ஃப்ளார், வெங்காயம் மற்றும் சிறிது புதினா சேர்த்துப் பிசையவும்.
சிறிய மூடியில் எண்ணெய் தடவி சிக்கன் கலவையை சிறு உருண்டைகளாக வைத்து அழுத்தி எடுக்கவும். (கையில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு வடைகளாகத் தட்டலாம்). வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 4, 5 வடைகளாகப் போட்டு இருபுறமும் சிவக்க வெந்தவுடன் எடுக்கவும்.
குழந்தைகள் விரும்பும் சுவையான சிக்கன் வடை ரெடி.

சிக்கன் வடை ஆறியதும் மெத்தென இருக்கும். சிக்கன் கலவை உதிர்ந்து விடாமல் ஒன்று சேர்ந்து இருப்பதற்காகவே கார்ன் ஃப்ளாரை சேர்க்கிறோம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப நல்லா இருக்கு. இது போல மீனில் செய்தது உண்டு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிக்கன் வடை சூப்பர், பார்க்கவும் சூப்பரா இருக்கு, குறிப்பும் எளிமையாக உள்ளது.

வடை ஈசி & சூப்பர் அக்கா. விருப்பபட்டியலில் சேர்த்துருக்கேன். இப்ப கொஞ்சம் பிஸி. டைம் கிடைக்கும்போது செய்து பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வனி,
மீன் நான் சாப்பிடுவது இல்லைங்கிறதால‌, அதை நான் முயற்சிப்பது இல்லை. நன்றி வனி.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
ருசியும் நல்ல‌ இருக்கும். நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
ரொம்ப‌ சந்தோஷம். செய்து பாருங்க‌. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

கறி வடை கேள்விப் பட்டிருக்கேன், சிக்கன்ல வடை இப்பத்தான் முதல் முறை, பார்க்கவே நல்லா இருக்கு மேடம். அவசியம் செய்துப் பார்க்கிறேன்.

அன்பு வாணி,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. சூடா சாப்பிட்டா ஒரு டேஸ்ட்டும், ஆறினா ஒரு டேஸ்ட்டும் இருக்கும்.

அன்புடன்,
செல்வி.