முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு

தேதி: April 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.7 (3 votes)

 

முருங்கைக்கீரை - ஒரு சிறு கட்டு
உப்பு - சிறிது
மஞ்சள் தூள் - சிறிது
சிறு பருப்பு - அரை கப்
கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
வறுத்து அரைக்க:
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 3 கொத்து
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி


 

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் உளுந்து, மிளகாய் வற்றல், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
அத்துடன் தேங்காய் துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி எடுத்து ஆறவிடவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுத்து வைக்கவும்.
சிறு பருப்பில் நீர் விட்டு வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும். முருங்கைக்கீரையை சுத்தம் செய்து அரை கப் நீர் விட்டு மூடி வேகவிடவும்.
முருங்கைக்கீரை வெந்ததும் வேகவைத்த பருப்பு மற்றும் வறுத்து அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
பிறகு தேவையான நீர் விட்டு, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றை தாளித்து குழம்பில் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
சுவையான முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு தயார். விரும்பினால் கடைசியாக சிறிது எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி துருவிய வெல்லம் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

குறிப்பும் படமும் சூப்பர்

பொரிச்ச குழம்பு செய்திருக்கேன் முருங்கைக்கீரையில் இதுப் போல குறிப்பு கேள்விபடாததா இருக்கே. நிச்சயம் செய்து பார்த்துட்டு சொல்றேன் வனிதா அரைச்சு ஊற்றி செய்தாலே எனக்கு ரொம்ப பிடிக்கும்.

முருங்கைக்கீரையில் எனக்கு அவியல் மட்டும் தான் செய்ய தெரியும். எனக்கு முருங்கைகீரையில் குழம்பு வைக்க தெரியாது. உங்க குறிப்பு மூலமா தெரிஞ்சுகிட்டேன். மிகவும் எளிமையாக இருக்கு நன்றி வனிதா.

பொரிச்ச குழம்பு அருமை வனி. கீரை கிடைக்கும்போது ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வனி,
முருங்கைக் கீரையில் பொரியல், கூட்டு, சாம்பார், அரைச்ச‌ குழம்பு இதெல்லாம் தான் செய்வோம். இது புதுசா இருக்கு. புளிப்பு சேர்த்தால் தான் ருசி கூட‌ இருக்கும்னு நினைக்கிறேன். சரியா?

அன்புடன்,
செல்வி.

முருங்கை கீரை எனக்கு மிகவும் பிடிக்கும், அரிதாக கிடைத்தது, போன வாரம் தான் பொரியல் செய்தேன். மீண்டும் எப்போ கிடைக்கும்ன்னு தெரியவில்லை, அடுத்து கிடைக்கும் போது உங்க ரெசிப்பி டிரை பண்ரேன். தக்காளி எதுவும் சேர்க்க வேண்டாமா வனி?

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஏறக்குறைய ஒரே போல புடலங்காயும், கீரையும் செய்வேன். ட்ரை பண்ணிப்பாருங்க தேவி. நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அவியல் எனக்கு செய்ய தெரியாதே பாரதி... படத்தோடு குறிப்பு அனுப்பறீங்களா ப்ளீஸ் :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்துட்டு சொல்லுங்க உமா :) நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்த குறிப்பு எனக்கு புதுமையாக உள்ளது. முருங்கை கீரை இங்கே கிடைக்காது. ஊருக்கு போய் நிட்சயம் செய்து பார்க்கிறேன். வாழ்த்துக்கள்.

புளிப்பு சேர்த்தால் எனக்கு பிடிக்கும்... அதனால் தான் கடைசியில் விரும்பினா எலுமிச்சை சாறு சேர்க்க சொல்லிருக்கேன். ட்ரை பண்ணிப்பாருங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கும் இங்கே அதிகம் கிடைக்காது வாணி, அண்ணி கொடுத்தாங்க, செய்தேன் :) அவசியம் செய்துட்டு சொல்லுங்க. நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணிட்டு சொல்லுங்க பார்வதி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்படி எல்லாம் ஆசை காட்டறீங்களே வனி, நான் எங்கே போவேன் இப்ப‌ முருங்கைக்கீரைக்கு?! :‍)

எனக்கு முருங்கைக்கீரை என்றால் அவ்வளவு பிடிக்கும். நான் இங்க‌ இதுவரை முருங்கைக்கீரை பார்த்ததும் இல்லை, வாங்கியதும் இல்லை. அதிசயமா கிடைச்சா கண்டிப்பா செய்திட்டு சொல்றேன். இல்லன்னா, ஊருக்கு போகும்போதுதான். குறிப்பும் படங்களும் ரொம்ப‌ நல்லாருக்கு, சூப்பர்!.

அன்புடன்
சுஸ்ரீ

குழம்பு சூப்பரா இருக்கு அக்கா....... நான் பருப்பு அரைத்து வைக்கும் குழம்பு இல்லைனா சாம்பார், பொரியல் தான் செய்வேன்... இது நல்லா இருக்கு ....

மிக்க நன்றி :) கிடைச்சா செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Hi vanitha sister....
I tried ur receipe. It was very nice. My husband also likes it. Thanks a lot....

செய்து பார்த்து பதிவிட்டமைக்க்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

good preparation. Today I am going to try this.Thanks.

வனி, போன வாரம் இந்த குழம்பு செய்தேன், ரொம்பவும் நல்லா இருந்தது, சூப் மாதிரி குடிக்கவும் நல்லா இருந்துச்சு. நன்றி

எனக்குப் பிடித்த முருங்கைக்காய் குழம்பு. நன்றி சகோதரி.

தங்கவேல் மாணிக்கதேவர்
கோயமுத்தூர்

செய்தீங்களா? எப்படி வந்தது? மிக்க நன்றி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி... இது முருங்கைக்காய் அல்ல, கீரை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா