உளுந்து களி

தேதி: April 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

அரிசி மாவு - ஒரு கப்
உளுந்து மாவு - அரை கப்
கடலை மாவு - கால் கப்
மைதா மாவு - கால் கப்
முட்டை - 3
சீனி - அரை கப்
பால் - முக்கால் கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
எண்ணெய் - 4 தேக்கரண்டி
ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை
உப்பு - ஒரு சிட்டிகை


 

மாவு வகைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
அதனுடன் முட்டைகளை உடைத்து ஊற்றி பால் மற்றும் ஃபுட் கலர் சேர்த்து கட்டிகளில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கரைத்து வைத்த மாவுக் கலவையை ஊற்றி கிளறவும்.
அடிபிடிக்காதவாறு நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். மாவு ஒன்று சேர்ந்து வரும் போது சீனியைச் சேர்த்து கிளறவும்.
கடைசியாக நெய் சேர்த்து கிளறி இறக்கவும்.
சுவையான உளுந்து களி தயார்.

உளுந்து இடுப்பிற்கு பலம் தரும்.

இந்தக் களியை பாலுக்கு பதிலாக தேங்காய்ப் பாலும், எண்ணெய்க்கு பதிலாக நல்லெண்ணெயும் சேர்த்தும் செய்யலாம்.

சாலியாத் தூள் சேர்த்தும் செய்வதுண்டு. கடைசி படத்தில் உள்ளது தான் சாலியா. எள் போன்று மெரூன் கலரில் இருக்கும். நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நல்ல சத்துள்ள குறிப்பு அருமை :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

வித்தியாசமா இருக்குங்க... திருநெல்வேலி பக்கம் செய்யும் களி தான் சீதா சொல்லித்தந்து செய்துருக்கேன். அது நம்ம கேப்ப களி போல தான் வரும். இது முட்டை எல்லாம் போட்டு டிஃபரண்ட். ட்ரை பண்றேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வித்தியாசமான உளுந்து களி. நல்லாருக்கு முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கடைசி படம் சூப்பர் பார்ததும் சப்பிடனும் போல் இருக்கு

குரறிப்பை வெளியிட்ட‌ அட்மின்,டீமிர்க்கு நன்றி.
முதல் பதிவிர்க்கு நன்றி,அருள்.
செய்து பாருங்க‌,நல்லா இருக்கும்,வனி.
வாழ்த்திர்க்கு நன்றி,உமா.
மிக்க‌ நன்றி,நித்யாரமேஷ்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

என்னோட favorite களி இது முசி. ஆனால் என் மாமியார் தான் செய்து தருவாங்க. எனகு செய்ய தெரியாது. உங்களுடைய குறிப்பு ரொம்ப ஈசியா இருக்கு. இன்ஷா அல்லா நான் ட்ரை பண்ணி பார்க்கிறேன்.

நானும் அவசியம் இதை செய்து சாப்பிடணும் முசி.
கடைசி படம் பார்க்க ஸ்கிராம்பிள்ட் எக் போலவே இருக்கு :))
அப்புறம் உங்களோட தானியக் கஞ்சியில சில சந்தேகம் கேட்டிருந்தேன், நேரம் கிடைக்கும் போது பதில் போட்டு வைங்க, அடுத்த வாரம் ஒரு நாள் டின்னருக்கு செய்யணும்.
நன்றி

நல்ல ஆரோக்கியமான குறிப்பு. சூப்பர்.

முசி முட்டை சேர்க்காமல் உளுந்து மாவை மட்டும் வைத்து கருப்பட்டி நல்லெண்ணெய் சேர்த்து செய்வோம். இது வித்தியாசமானதா இருக்கே முயற்சி செய்றேன்.

உளுந்து களி பார்கவே ரொம்ப நல்லா இருக்கு செய்ய்து பார்கிரேன் by Elaya.G

செய்து பஅருங்க‌,ஈசி தான்,நாஜிரா ஹாஜா.
செய்து சாப்பிட்டு பாருங்க‌,தானியக்கஞ்ஜிர்க்கும் பதிவு போட்டுள்ளேன் வாணி.
நன்றி,பாலாபரதி.
பெண்களுக்கு ஏற்படும் வயிற்று வலியின் போது முஸ்லிம் வீடுகளில் இதை செய்து கொடுப்பார்கள்.நன்றி,உமாகுணா.
செய்து பாருங்க‌,ரொம்ப‌ பிடிக்கும்,பதிவிர்க்கு நன்றி,இளையா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
நல்ல‌ சத்தான‌ குறிப்பு. நாங்கள் இத்தனை வகை மாவு, முட்டை சேர்க்க‌ மாட்டோம் வெறும் உளுந்து மாவு மட்டும் வைச்சு தேங்காய்ப்பால் சேர்த்து செய்வோம். இது புதுசா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

முசி,
உளுந்து களி நல்ல‌ சத்தான‌ குறிப்பு. முட்டை எல்லாம் சேர்த்து செய்திருப்பது புசுசா இருக்கு. இந்த‌ வீக்கென்ட் செய்து பார்த்திடறேன்.

அன்புடன்
சுஸ்ரீ

நல்ல‌ சத்து மிகுந்த உணவு.... பாக்க‌ க‌ளி போலவே இல்ல‌ புட்டு மாதிரி இருக்கு......

நன்றி,செல்விக்கா.
நன்றி,அவசியம் செய்து பாருங்க.சுஸ்ரீ.
பதிவிர்க்கு மிக்க‌ நன்றி,பிரியா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

Super frid