ஓமப் பொடி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலை மாவு - 3 கப்
ஓமம் - 5 கிராம்
உப்பு - தேவைகேற்ப
எண்ணெய் - 1/2 லிட்டர்


 

ஓமத்தை சுத்தம் செய்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடலை மாவில், உப்புத் தண்ணீர் தெளித்து கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுடன் அரைத்த விழுதையும் போட்டு பிசைந்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெயைக் காய வைத்து எண்ணெய் காய்ந்ததும் முறுக்குக் குழலில் ஓமப்பொடி அச்சைப் போட்டு மாவை வைத்து பெரிய ஓமப்பொடியாக வாணலியின் சுற்றளவுக்கு பிழியவும்.
பிழிந்த உடனே திருப்பிப் போட்டு அதிகம் சிவக்காமல் மஞ்சள் நிறமாக எடுக்கவும். ஓமப்பொடி சீக்கிரம் வெந்துவிடும். ஆகையால் எண்ணெய் அதிகம் காயாமல் பார்த்து சுடவும்.


மேலும் சில குறிப்புகள்