குஸ்குஸ் புட்டு

தேதி: April 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

குஸ்குஸ் - ஒரு கப்
வறுத்த அரிசி மாவு - ஒரு மேசைக்கரண்டி
துருவிய வெல்லம் - 2 மேசைக்கரண்டி
தேங்காய்ப் பூ - 2 மேசைக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
வெந்நீர் - 2 கப்


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் குஸ்குஸுடன் வெந்நீரை ஊற்றி 10 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
குஸ்குஸ் ஊறியதும் அதனுடன் வறுத்த அரிசி மாவு, தேங்காய்ப் பூ மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். (வெந்நீரில் ஊற வைப்பதால் குஸ்குஸ் நன்றாக ஊறியிருக்கும்).
கலந்து வைத்துள்ள குஸ்குஸ் கலவையை இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்.
வெந்த கலவையை ஒரு பாத்திரத்தில் போட்டு சூடாக இருக்கும் போதே வெல்லம் சேர்த்து கிளறிவிட்டு பரிமாறவும்.
சுவையான குஸ்குஸ் (Couscous) புட்டு தயார்.

குஸ்குஸ் (Couscous) மொராக்கர்கள் உண்ணும் உணவு, ரவை போல இருக்கும். மொராக்கர்கள் குஸ்குஸை வேக வைத்து, அத்துடன் காய்கறிகள் மற்றும் இறைச்சியை சேர்த்து உண்பது வழக்கம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

புட்டு என்று தலைப்பை பார்தவுடன் வாணி அக்கா தான் என்று நினைத்தேன்...வித்தியாசமா இருக்கு.. குஸ்குஸ் நம்ம‌ ஊர்ல‌ எப்படி சொல்வாங்க‌..

குஸ்குஸ் புட்டு பெயரே வித்தியாசமா இருக்கு. புட்டும் நல்ல இருக்கும் போல, வெல்லத்திற்கு பதில் சக்கரை சேர்க்கலாமா. படங்களும் அருமை, கடைசி படத்தில் இருக்கும் புட்டு எனக்கு.

வாணி அக்கா,
குஸ்குஸ் புட்டு சூப்ப‌ர்.ரொம்ப‌ சிம்பிள்ளா ஈஸியா இருக்கு,
குஸ்குஸ் அப்படினா என்னா அக்கா?

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

அனபு வாணி,
குஸ்குஸ் பார்த்தால் மக்காச்சோள ரவை போல‌ இருக்கு.அப்படியா? புட்டு என்றால் ரொம்ப‌ இஷ்டமோ?

அன்புடன்,
செல்வி.

பேரும் நல்லா இருக்கு பாக்கவும் சூப்பர்....

வனி புட்டு செம சூப்பர் எங்க ஊர்ல குஸ்குஸ் ஆல சாதமும் செய்வார்களாம்பா

சிரித்து வாழ வேண்டும் பிரர் சிரிக்க வாழ்ந்திடாதே

வாணி குறிப்பு அருமை :) நேற்று கடைக்கு மளிகை வாங்க சென்றிருந்தோம், அங்கு குஸ் குஸ் இருக்கானு கேட்டா, யாருக்குமே தெரில. எப்படி இருக்கும்னு அடையாளம் கேட்டாங்க. தினை போல இருக்கும், பாசிபருப்பின் கலரை ஒத்திருக்கும் என நிறைய விளக்கம் கொடுத்தும், போட்டோ காட்டியும் யாருக்குமே தெரில. இதற்கு ஏதேனும் வேறு பெயர்கள் இருக்கா? இந்தியாவில் கிடைக்குமா?

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

புட்டு நல்லாருக்கு வாணி. ஜனதுல் சொன்ன பிறகுதான் இங்க குஸ்குஸ் இருக்குன்னு எனக்கு தெரியும். தேடி பாக்குறேன். கிடைச்சா கண்டிப்பா ட்ரை பண்ணனும். பார்க்கும்தே ஆசையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

புட்டு நல்லாருக்கு வாணி. ஜனதுல் சொன்ன பிறகுதான் இங்க குஸ்குஸ் இருக்குன்னு எனக்கு தெரியும். தேடி பாக்குறேன். கிடைச்சா கண்டிப்பா ட்ரை பண்ணனும். பார்க்கும்தே ஆசையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும், அபிராமி , Couscous என்றுதான் எழுதியிருக்கும், கோவையில் பீளை மேடு என்ற இடத்தில் உள்ள ஃபன் ப்ளாஸா(Fun plaza) வில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டிலும், Brookfields mall, SPAR மற்றும் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். முயற்ச்சித்துப் பாருங்கள்.நான் உபயோகித்திருப்பது கோதுமையிலான Couscous. மைதாவிலும் கிடைக்கும்,பொடிதாக உருண்டையாக இருக்கும்.நன்றி

தாராளமா சர்க்கரை சேர்க்கலாம் பாலபாரதி

இது சிறிய கடுகு சைசில் வெள்ளையாக(மைதாவில்), அல்லது பழுப்பு நிறத்தில்(கோதுமையில்) இருக்கும். செய்வதும் சுலபம் தான். நன்றி சுபி

மக்காச் சோள ரவைக்கு Polanta என்று பெயர். இது மைதா மற்றும் கோதுமையில் தயாரிக்கப் படுவது, ஆமாம் செல்வி மேடம் புட்டுன்னா ரொம்ப இஷ்டம்

வருகைக்கு நன்றி பிரியா

ஆமாம் ஜனதுல் இதுல சாதம் செய்து காய்கறியும், இறைச்சியும் சேர்த்து உண்பார்கள், நான் புட்டு செய்துப் பார்த்தேன், நன்றாக வந்தது. அங்கு எந்த கடையில கிடைக்குன்னு தெரிந்தால் உமாவுக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன். நன்றி

அபிராமிக்கு கொடுத்த பதில் தான் உங்களுக்கும் அருள்
கோவையில் பீளை மேடு என்ற இடத்தில் உள்ள ஃபன் ப்ளாஸா(Fun plaza) வில் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட்டிலும், Brookfields mall, SPAR மற்றும் நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட்டிலும் கிடைப்பதாக கேள்விப்பட்டேன். முயற்ச்சித்துப் பாருங்கள்.நான் உபயோகித்திருப்பது கோதுமையிலான Couscous. மைதாவிலும் கிடைக்கும்,பொடிதாக உருண்டையாக இருக்கும்.நன்றி

ஜனதுல்கிட்ட கேளுங்க உமா எங்கு கிடைக்கும்ன்னு, கிடைத்தால் டிரை பண்ணிப் பாருங்க. நன்றி