இனிப்பு கார சட்னி

தேதி: December 8, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெங்காயம் - இரண்டு
தக்காளி - இரண்டு
பச்சைமிளகாய் - நான்கு
இஞ்சி - அரைத்துண்டு
பூண்டு - இரண்டு பற்கள்
மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி
கடுகு - அரைதேக்கரண்டி
சோம்பு - அரைதேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
சர்க்கரை - இரண்டு தேக்கரண்டி
உப்புத்தூள் - அரைதேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை நொறுங்க நறுக்கி கொள்ளவும்.
இஞ்சி பூண்டை நசுக்கி வைக்கவும்.
ஒரு சிறிய சட்டியில் எண்ணெயை ஊற்றி கடுகைப் போட்டு பொரியவிட்டு, சோம்பு கறிவேப்பிலையைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும்.
பிறகு வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டை ஒரே நேரத்தில் போட்டு நன்கு வதக்கவும். தொடர்ந்து மஞ்சள்தூள், உப்புத்தூளை போட்டு மையாக வதக்கவும்.
அதில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து கெட்டியாக ஆனவுடன் சர்க்கரையைப் போட்டு நன்கு கலக்கி விட்டு இறக்கி விடவும்.
இந்த சுவையான சட்னி சப்பாத்திக்கு ஏற்ற பக்க உணவு. செய்வதோ மிக எளிமை ஆனால் சுவையோ மிகவும் அதிகம்.


மேலும் சில குறிப்புகள்