முருங்கையிலைப் பொரியல்

தேதி: April 21, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

முருங்கையிலை - 2 கப்
வெங்காயம் - ஒன்று
வரமிளகாய் - 4
முட்டை - ஒன்று
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வரமிளகாய் (கிள்ளிப் போடவும்), மஞ்சள் தூள் மற்றும் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் சுத்தம் செய்த முருங்கையிலையைச் சேர்த்து, உப்புப் போட்டு மூடி வைக்கவும்.
சற்று நேரத்திற்கு பிறகு மூடியைத் திறந்து நன்கு வதக்கவும்.
முருங்கையிலை வெந்து நன்கு சுருண்டு வரும் போது, அதன் நடுவில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
அடிப்பிடிக்காதவாறு நன்கு கிளறிவிட்டு இறக்கவும்.
சுவையான முருங்கையிலைப் பொரியல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இதுவரை முட்டை சேர்த்து செய்தது இல்லை....இது நல்லா இருக்கு ட்ரை செய்றேன் கண்டிப்பா.... நாங்க‌ கடைசியில் வேக‌ வைத்த‌ தட்டபயறும் தேங்காயும் சேர்த்து செய்வோம்.....

முட்டை போட்டு செய்வது புதிதாக உள்ளது.அருமை

அன்பு வாணி,
நானும் இது போலதான் செய்வேன். போட்டோ அழகாக‌ உள்ளது.

அன்புடன்,
செல்வி.

பொரியல் நல்லாருக்கு வாணி. நான் இதையே முட்டை சேர்க்காமல் தேங்காய் துருவல் சேர்த்து செய்வேன். அடுத்த தடவை முட்டை சேர்த்து ட்ரை பண்ணி பார்க்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முருங்கையிலைப் பொரியல் அருமை, முட்டைப் போடுவதால் தேங்காய்ப் பூ சேர்க்க கூடாதா அக்கா, முட்டை போட்டு வித்தியாசமான முருங்கையிலைப் பொரியல்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி பிரியா, நாங்களும் தேங்காய் சேர்த்து செய்வோம். இந்த முறையில் டிரை பண்ணிப் பாருங்க

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி நித்யா

அப்படியா மேடம், எங்க அம்மா தேங்காய் சேர்த்து செய்வார்கள், எனக்கு தெரிந்த ஒரு ஆன்டி முருங்கைப் பூவில் முட்டை சேர்த்து செய்வதாக ஒருமுறை சொன்னார்கள், எனக்கு முருங்கையிலை தான் கிடைத்தது, ஆகவே இலையில் செய்ய்தேன்.
நன்றி மேடம்

செய்துப் பாருங்க உமா, மிக்க நன்றி

எங்க அம்மாவும் தேங்காய்ப் பூ சேர்த்துத்தான் செய்வார்கள், நான் தேங்காயைத் தவிற்ப்பதற்க்காக இப்படி ஒரு முட்டையை உடைத்து ஊற்றிவிடுவேன்,பார்ப்பதற்க்கென்னவோ தேங்காய் போட்டது போன்றுதான் இருக்கும், சுவையும் நன்றாகவே இருக்கும். முட்டை சேர்ப்பதால் தேங்காய் வேண்டாம்.
நன்றி பாலபாரதி

இந்த பொரியல் சில நாள் முன் செய்தேன், நல்ல சுவையாக இருந்தது. பதிவு போட தாமதாமயிடுச்சு :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

enga 15 yrs a eppadi dhan seiroam enga amma samayal madhiri erukku