வெனிலா கடல் பாசி

தேதி: April 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (3 votes)

 

கடல் பாசி - ஒரு கைப்பிடி அளவு
தண்ணீர் - ஒரு கப்
சர்க்கரை - 4 தேக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - கால் தேக்கரண்டி
ஃபுட் கலர் - ஒரு துளி


 

சூடான‌ தண்ணீரில் கடல் பாசியைப் போட்டு கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து வரும் போது சர்க்கரையைச் சேர்த்து, சர்க்கரை கரைந்ததும் இறக்கி வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து கடல் பாசிக் கரைசலை ஒரு பாத்திரத்தில் வடிகட்டவும். ஆறிய‌தும் அதனுடன் ஃபுட் கலர் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
நன்கு செட்டானதும் ஃப்ரிட்ஜில் வைத்தெடுத்து, ஜில்லென‌ப் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஈசியான ஸவிட் ரெசிபி.சூப்பர்

Be simple be sample

மிகவும் எளிமையான குறிப்பு, சூப்பர்.

ஈசி ரெசிபி. நல்லாருக்கு ப்ரியா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஈசி ரெசிபி சூப்பர்...

அன்பு பிரியா,
பார்க்க‌ கண்ணாடி மாதிரி அழகா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

கடற் பாசி வெயிலுக்கு ஏற்ற எளிதில் செய்யக் கூடிய இனிப்பு. செல்வி மேடம் சொன்னது போன்றுதான் நானும் நினைத்தேன், கண்ணாடி போன்று டிரான்ஸ்பரண்டா இருக்கு.

அன்பு பிரியா,

பார்க்கறதுக்கே மிகவும் அழகாக‌ இருக்கு. கடற்பாசி அதிகம் உபயோகித்ததில்லை. செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

can i know how to call கடல் பாசி in english

Agar agar , chinagrass

thank you