சிம்பிள் சிக்கன் குழம்பு

தேதி: April 22, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

சிக்கன் - கால் கிலோ
சின்ன வெங்காயம் - 10
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
தனியா தூள் - 3 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
ஆச்சி சிக்கன் மசாலா - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
சோம்பு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
கொத்தமல்லித் தழை - சிறிது
இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தேங்காய்ப் பால் - ஒரு கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

சிக்கனைச் சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம் மற்றும் பூண்டை நசுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு, வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி மற்றும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
தக்காளி லேசாக வதங்கியதும் சிக்கனைச் சேர்த்து வதக்கவும்.
சிக்கன் நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் தூள் வகைகள் சேர்க்கவும்.
சிக்கனுடன் அனைத்தும் ஒன்றாக்ச் சேர்ந்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
எண்ணெய் பிரிந்து வந்ததும் சிறிது தண்ணீர் சேர்த்து சிக்கனை வேகவிடவும். சிக்கன் வெந்ததும் தேங்காய்ப் பால் சேர்த்து கொதிக்கவிடவும்.
குழம்பு கொதித்து நன்கு திக்கானதும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கவும்.
விரைவாகச் செய்யக்கூடிய எளிமையான, சுவையான சிக்கன் குழம்பு தயார்.

வெங்காயம், பூண்டை நசுக்கிச் சேர்த்து வதக்குவதால் நல்ல மணமாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ரொம்ப‌ ஈஸி குழம்பு... செஞ்சு பார்க்குறேன்........

ஈசியான குழம்பு. நானும் இது போலவே செய்துபார்க்கிறேன் .

Be simple be sample

மிகவும் அருமையான குறிப்பு, சிக்கன் குழம்பு சூப்பர்.

ஈசி குழம்பு சூப்பர்...இதில் நான் சிக்கன் மசாலா மட்டும் சேர்க்கமல் செய்வேன்.இனி சேர்த்து செய்து பார்கிரேன்... S

குறிப்பும் அருமை.. படமும் அருமை...

குழம்பு நல்லாருக்கு அக்கா. நானும் கிட்டதட்ட இதேபோல்தான் செய்வேன். ஆனால் பூண்டு, வெங்காயம் நசுக்கி சேர்த்ததில்லை. இனி இதுபோல் ட்ரை பண்ணி பாக்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு பிரியா,
செய்து பாருங்க‌. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு ரேவதி,
சுலபமாகத்தான் இருக்கும். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு நித்யா,
சிக்கன் மசாலா சேர்த்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடும். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு அபிராமி,
குறிப்பு அருமை சொன்னதுக்கு நான் நன்றி சொல்லிக்கிறேன். படம் அருமை சொன்னதுக்கு என் கணவர் சார்பாக‌ நன்றி:)

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
அப்படியேவோ, நறுக்கியோ தாளிப்பதை விட‌ நசுக்கி தாளித்தால் மணமாக‌ இருக்கும். அடுத்த‌ முறை இப்படி நசுக்கி சேர்த்து பாருங்கள். சில‌ நேரங்களில் சின்ன‌ சின்ன‌ விஷயங்கள் தான் பெரிசா வித்தியாசம் காட்டும்.

அன்புடன்,
செல்வி.

குழம்பு சூப்பர், இதே போன்று அடுத்து செய்துடறேன்.

அன்பு வாணி,
மிக்க‌ நன்றி வாணி. செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

I tried this it's really nice
thanks me too from Pondicherry