நெல்லை பருப்பு குழம்பு

தேதி: April 23, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (2 votes)

 

துவரம் பருப்பு - ஒரு கப்
வெங்காயம் - ஒன்று (அ) சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி அளவு
பூண்டு - 2 பற்கள்
பச்சை மிளகாய் - 3
தேங்காய் - ஒரு சில்லு
தக்காளி - 1 (அ) 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
புளி - சுண்டைக்காய் அளவு
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு
தாளிக்க:
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை
பெருங்காயப் பொடி - ஒரு சிட்டிகை
வெங்காயம் - சிறிது


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். புளியைக் கால் கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைக்கவும்.
இடி உரலில் அல்லது மிக்ஸியில் தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலைச் சேர்த்து கொரகொரப்பாக இடித்துக் கொள்ளவும்.
குக்கரில் துவரம் பருப்புடன் நறுக்கிய தக்காளி, வெங்காயம், பூண்டு, மஞ்சள் தூள், மற்றும் உப்புச் சேர்த்து வேக வைக்கவும்.
வெந்த பருப்புடன் இடித்த தேங்காய் விழுது மற்றும் புளிக்கரைசல் சேர்த்து, அடுப்பில் வைத்து ஒரு கொதி வரவிடவும்.
கொதி வந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து குழம்பில் சேர்க்கவும்.
சுவையான நெல்லை பருப்பு குழம்பு தயார். சாதம், பச்சடி மற்றும் ஏதாவது ஒரு ரோஸ்ட்டுடன் சாப்பிடச் சிறந்தது.

தேங்காயை நைசாக அரைக்கக் கூடாது. குழம்பில் தேங்காய் மிதந்து கொண்டிருக்க வேண்டும். புளியும் மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாவ்.. நம்ம ஊர் ஸ்பெஷல்... எனக்கு பிடிக்கும். கட்டாயம் செய்துடுவோம் :) படங்கள் பளிச் பளிச்.

உமா... சாப்பிட வாங்க... நமக்காகவே பரிமாறி இருக்காங்க கடைசி ப்ளேட். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பருப்பு குழம்பு அருமை வாணி. ட்ரை பண்ணிட்டு சொல்றேன். தேங்காய் அரைத்து சேர்த்தால் சுவை மாறுபடுமா? (என் கணவருக்கு எதிலும் தேங்காய் கடிபட்டால் பிடிக்காது) வந்துட்டேன் வனி....

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,

கண்டிப்பாக‌ செய்து பார்க்கப் போகிறேன். விருப்பப் பட்டியலில் சேர்த்து விட்டேன்.

ஃபோட்டோஸ் அருமை.

அன்புடன்

சீதாலஷ்மி

வாணி நம்ம ஊரு குறிப்பு அருமை.வனிக்கா நீங்க நெல்லையா

15 வருடம் நெல்லை மாவட்ட வாசி நான். சொந்த ஊர் போல தான். இப்போதும் போவது உண்டு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வாணி,
பருப்பில் எப்படி செய்தாலும் என் கணவருக்கு பிடிக்கும். விருப்பப்பட்டியலில் சேர்த்திருக்கேன். செய்துட்டு சொல்றேன்:)

அன்புடன்,
செல்வி.

இன்று பருப்பு குழம்பு செய்தேன் வாணி நல்லாருக்கு. (உப்பு மட்டும்தான் பார்த்தேன். இன்னும் சாப்பிடல) தேங்காய் சில்லுக்கு பதில் தேங்காய் துருவல் இடித்து சேர்த்தேன். வாசனை சூப்பர். நன்றி வாணி.

பலாப்பழ கேக்கில் வனிகிட்ட சந்தேகம் கேட்டுருகீங்க. (சாரி இப்பதான் பதிவை பார்த்தேன்)

//நான் பேகிங் பவுடர் மட்டும் தான் கேக்கிற்க்கு சேர்ப்பேன். அவசியம் சோடாவும் சேர்க்கணுமா வனி//

வனி என்ன பதில் சொல்ல சொல்லியிருக்காங்க.

சோடா சேர்க்காட்டி பரவால்ல. பேக்கிங் பவுடர் ஒரு கால் டீஸ்பூன் அதிகம் சேர்த்துகங்க. நல்லா வரும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நம்ம ஊர் ஸ்பெஷலே தான் வனி :)) முதல் பதிவிற்க்கு நன்றி

தாராளமாக தேங்காய் அரைத்து சேர்க்கலாம் உமா, நன்றி

ரொம்ப நாளைக்கப்புறம் உங்களோட குரல் ஒலிக்குது போல சீதா மேடம். நலம் தானே? செய்துப் பார்த்துட்டு சொல்லுங்க, மிக்க நன்றி

ஆமாம் இனியா, நீங்களும் நெல்லை தானா ! வருகைக்கு நன்றி

செய்துப் பாருங்க செல்வி மேடம், நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும், நன்றி

செய்துப் பார்த்துட்டு பதில் போட்டமைக்கு நன்றி உமா, வாசனை மட்டுமல்ல ருசியும் நல்லா இருக்கும்.
நானும் கேக்கிற்க்கு பேக்கிங் பவுடர் மட்டும் தான் சேர்ப்பேன். பிளையின் கேக் செய்து படங்களும் எடுத்தாச்சு, அடுத்த வாரம் தான் அனுப்பி வைக்கணும்

வாணி உங்கள் ஒவ்வொரு குறிப்பு மற்றும் படங்களும் சூப்பர்.நெல்லை பருப்பு குழம்பு முயற்சி செய்து பார்த்துட்டு சொல்லுறேன்.பெரிய‌ வெங்காயம் மற்றும் சின்ன‌ வெங்காயம் இரண்டுமே சேர்க்கணுமா.2 வது படத்தில் உள்ள‌ இடி உரல் சூப்பர் :)

Expectation lead to Disappointment

இங்கு சின்ன வெங்காயம் எளிதில் கிடைப்பதில்லை, விலையும் அதிகம்.நான் சின்ன வெங்காயத்தை பருப்புடன் சேர்த்து வேக வைத்தேன், பெரிய வெங்காயத்தை தாளிக்க உபயோகித்தேன். உங்களின் வசதிப் படி எதுவென்றாலும் உபயோகிகலாம்.செய்துப் பார்த்துட்டு சொல்லுங்க, மிக்க நன்றி

Can anybody tell hw to take Print (in Tamil)

அன்பு வாணி,
நானும் செய்துட்டேன். உடனே பதிவு போடமுடியலை. என் கணவருக்கு மிகவும் பிடித்தது. எனக்கும் தான்:)
நன்றி வாணி.

அன்புடன்,
செல்வி.

செய்துப் பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்க்கு நன்றி. உங்க எல்லோருக்கும் பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி செல்வி மேடம்.