மீன் மக்ரோனி

தேதி: April 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 2.7 (3 votes)

 

மக்ரோனி - ஒரு பாக்கெட்
டூனா டின் - 2
கடுகு - ஒரு தேக்கரண்டி
வெங்காயம் - 3
பச்சை மிளகாய் - 5
எண்ணெய் - 3 தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
டொமேட்டோ சாஸ் - 4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
சீஸ் - விரும்பினால்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்
மக்ரோனியுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்புச் சேர்த்து வதக்கி, 3 தேக்கரண்டி டொமேட்டோ சாஸ் ஊற்றி நன்கு வதக்கவும். அதன் ஈரத்தன்மை போனதும், டூனா மீனை உதிர்த்துப் போட்டு நன்கு பிரட்டவும்.
பிறகு வேக வைத்த மக்ரோனியை சேர்த்துக் கிளறவும். சுவையான டூனா மீன் மக்ரோனி ரெடி. மீதமுள்ள டொமேட்டோ சாஸ் ஊற்றி, சீஸ் தூவி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள். கடைசி படம் கலர்ஃபுல். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள் நித்யா. மக்ரோனி சூப்பர். ட்ரை பண்ணிட்டு சொல்றேன். டூனா மீன் எத்தனை கிராம் டின் சேர்த்துருகீங்க?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முதல் குறிப்புக்கு வாழ்த்துகள், முதல் குறிப்பே அருமை.

என் குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி.

உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி.....

உமா உங்கள் வாழ்துக்களுக்கு நன்றி...டூனா மீன் 180கி 2 சேர்த்துள்ளென். செய்து பாருங்கள் நல்லா இருக்கும்.

மிக்க நன்றி பாரதி.

முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்.மிகவும் சுலபமான‌ குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த‌ உணவு.

Expectation lead to Disappointment

அன்பு நித்யா,
நேற்றே பதிவு போட்டேன். என்னாச்சுன்னு தெரியலை. சாரிம்மா!
முதல் குறிப்புக்கு வாழ்த்துக்கள்!

அன்புடன்,
செல்வி.

நன்றி...

நன்றி.எதுக்கு சாரிலா கேட்கிரிங்க..