வல்லாரை ரைத்தா

தேதி: April 24, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (2 votes)

 

வல்லாரைக் கீரை - ஒரு கப்
தேங்காய்ப் பூ - ஒரு தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்று (சிறியது)
தயிர் - ஒரு கப்
பச்சை மிளகாய் - ஒன்று
உப்பு - சிட்டிகை


 

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.
வல்லாரைக் கீரையைச் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயிலுள்ள விதையை நீக்கிவிட்டு நறுக்கி வைக்கவும். தயிரை நன்கு அடித்துக் கலந்து கொள்ளவும்.
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தயிருடன் நன்றாகச் சேரும்படி கலந்துவிடவும்.
சுவையான வல்லாரை ரைத்தா தயார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு வல்லாரைக் கீரை உகந்தது. பெரிய வெங்காயத்திற்குப் பதிலாக சின்ன வெங்காயமும் சேர்க்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர் ஹெல்தி ரெசிபி :) படமும் அருமை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் வாணி. வல்லாரையில் இதுவரை தயிர் சேர்த்து செய்ததில்லை. அடுத்த தடவை வல்லாரை வாங்கும்போது இப்படித்தான் செய்வேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு வாணி,

வித்தியாசமான‌ ரைத்தா. வல்லாரைக் கீரை பச்சையாக‌ சாப்பிடலாம்னு இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

மிக்க நன்றி வனி

உமா, உங்களுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்,உங்க வல்லாரைக் கஞ்சியில் ஒரு நாள் தயிர் சேர்த்து குடித்தேன், நல்ல சுவை, அப்பத்தான் ரைத்தா கூட செய்துப் பார்த்தேன், சுவையும், சத்துமிக்கது என்று குறிப்பாகவே கொடுத்திட்டேன். முதல் குழந்தை வயிற்றில் இருக்கும் போதெல்லாம் வல்லாரையை சமைத்து தான் உண்டேன், இப்போ பச்சையாகவே உண்பது சத்தானதுன்னு நீங்க சொல்லி தெரிந்து கொண்டேன்

நன்றி சீதா மேடம்

அன்பு வாணி,
பச்சையாக‌ வல்லரையா? துவர்க்காது? இங்கே கிடைப்பதே இல்லை. கிடைத்தால் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்,
செல்வி.

ரைத்தா அருமையா இருக்கு வாணி... கீரை கிடைக்கும் போது செய்கிறேன்...

ஆஹா இரண்டுபேரும், ஒரே போல கேள்விகளக் கேட்டிருக்கோம் போல,உங்க வாழைப் பூ குறிப்பில் இதே போன்று துவர்க்குமான்னு நான் கேட்டுள்ளேன்!! :))
வல்லாரை துவர்க்கவே இல்லை, உமா சொல்லித்தான் அரைத்து கஞ்சியில் சேர்த்து குடித்தேன்,ரொம்பா நல்லா இருந்தது, அதான் இப்படி டிரை பண்ணிப் பார்த்தேன், நல்ல நார்ச்சத்து மிக்கது, சர்க்கரை உள்ளவங்களுக்கு நல்லது.

நன்றி பிரியா, செய்துப் பாருங்க

நல்லாஇருக்கு,நானும் இதுபோல் செய்வதுண்டு.தேங்காய் பூவிர்க்கு பதில் தேங்காய் பால் சேர்த்து செய்வேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி முசி