முர்தபா

தேதி: December 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

பெயர் சற்று வித்தியாசமாக இருக்கும். இஸ்லாமிய உணவு விடுதிகள், இல்லங்களில் இந்த முர்தபா மிகவும் பிரபலம். இதை ஸ்டஃப்டு பரோட்டா என்று சொல்லலாம். இதை அப்படியே கொத்தினால் அது கொத்து பரோட்டா ஆகிவிடும். அபார ருசியுடைய இந்த முர்தபா செய்வதற்கு மிகவும் எளிதானது. திருமதி. பைரோஜா ஜமால் அவர்கள் இந்த செய்முறையை உங்களுக்கு விளக்குகின்றார்.

 

மைதா மாவு - அரை கிலோ
சீனி - ஒரு மேசைக்கரண்டி
பால் - முக்கால் கப்
உப்பு - ஒரு தேக்கரண்டி
சோடா உப்பு - அரை தேக்கரண்டி
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
கறி மசாலா - ஒன்றரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்து கறி - 100 கிராம்
முட்டை - ஒன்று
காரட் - ஒன்று
வெங்காயம் - அரை கிலோ
உருளைக்கிழங்கு - ஒன்று
கொத்தமல்லி தழை - 2 கொத்து
புதினா - 2 கொத்து
பச்சை மிளகாய் - 5
தக்காளி - 2
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

பரோட்டாவிற்கான மாவு பிசைந்து கொள்ளவும். பாலுடன் சீனி, உப்பு, சோடா உப்பு சேர்த்து கரைத்து அதை மைதா மாவில் சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து, பெரிய எலுமிச்சை அளவுக்கு உருண்டையாக உருட்டி அதில் எண்ணெய் தடவி உருட்டி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, காரட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, புதினா இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, மல்லித் தழை, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, கறி மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு பிசறிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கொத்தின கறியை போட்டு வதக்கவும். கறி வாசனை வராமல் இருக்க அதில் இஞ்சி பூண்டு விழுது அரை தேக்கரண்டி போட்டு வதக்கி, ஒரு நிமிடம் மூடி வைக்கவும்.
பின்னர் மூடியைத் திறந்து, அதில் நறுக்கின காரட், உருளைக்கிழங்கை போட்டு 2 நிமிடம் வதக்கவும். மேலும் ஒரு நிமிடம் மூடி வைத்து வேகவிடவும்.
பிறகு மூடியைத் திறந்து, பிசறி வைத்துள்ள கலவையை எடுத்து அதில் போட்டு, சுமார் 5 நிமிடம் பிரட்டி விடவும்.
மற்றொரு வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து பொரித்து எடுத்து அதையும் மசாலாவுடன் சேர்த்து கிளறி விடவும்.
ஒரு பெரிய தட்டை திருப்பி போட்டு உருட்டி வைத்த உருண்டையை வைத்து தட்டு அளவுக்கு தேய்த்து அதில் எண்ணெய் தடவிக் கொள்ளவும். பிறகு நடுவில் ஒரு கைப்பிடி அளவிற்கு மசாலாவை வைத்து, ஒவ்வொரு புறமாக மடிக்கவும்.
இதே போல் நான்கு புறமும் மடிக்க வேண்டும். உருண்டையாக உருட்டி விடாமல், சதுர அல்லது செவ்வக வடிவில் மடிக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் உள்ளே உள்ள மசாலாவை குவித்து வைக்காமல், சற்று சதுரமாக பரப்பினாற்போல் வைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் சிறிது அளவு ஊற்றி அதில் செய்து வைத்த முர்தபாவை போட்டு மேலே எண்ணெய் ஊற்றி சுற்றி விடவும். பிறகு திருப்பி போட்டு எண்ணெய் ஊற்றி வேக வைத்து எடுக்கவும்.
முர்தபாவில் முட்டையை உடைத்து ஊற்றியும் செய்யலாம். முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும். அதை முர்த்தப்பாவின் மேலே ஊற்றி பரப்பி விடவும்.
இருபுறமும் இப்படி முட்டையை தடவி வேக வைத்து எடுக்கவும். இந்த ருசியான முர்தபாவை அப்படியே சாப்பிடலாம். கறி மசாலா தொட்டுக் கொண்டு சாப்பிட இன்னும் சுவையாய் இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

இஸ்லாமிய சமையல் ராணி திருமதி. பைரோஜா ஜமால் அவருக்கு வணக்கம். நீங்கள் செய்துக்காட்டிய முர்தபாவில் கறி மசாலா, கொத்து கறி, முட்டை ( அதாவது அசைவம் ) சேர்க்காமல் காய்கள் (அதாவது சைவம் ) மட்டும் வைத்து சமைக்க முடியுமா . காரணம் நான் சைவம் சமையல் செய்பவள். பதிலளித்தால் என்னை போன்ற சைவப் பிரியர்களும் செய்து பார்த்து கற்றுக் கொள்வோம். நன்றி.
priyakumaran.

priyakumaran.

முர்தபா என்ற பெயரில் செய்யப்படுவது பெரும்பாலும் அசைவமாகத்தான் செய்யப்படுகின்றது. இதையே வெறும் முட்டை மசாலா மட்டும் சேர்த்து முட்டை முர்தபா, சிக்கன் சேர்த்து சிக்கன் முர்தபா, மட்டன் சேர்த்து மட்டன் முர்தபா என்று செய்கின்றனர்.

நீங்கள் வெறும் வெஜிடபிள் மசாலா மாத்திரம் சேர்த்து வெஜ் முர்தபா செய்யலாம். இதை எங்கள் ஊர் பக்கம் வெஜிடபிள் லாப்பை என்று சொல்லுவார்கள். அதுவும் மிக ருசியாக இருக்கும். செய்முறை கிட்டத்திட்ட ஒன்றுதான். காய்களில் பீட்ரூட், முட்டைகோஸ், சிறிது குடை மிளகாய் போன்றவை சேர்த்து மசாலா தயாரிப்பார்கள்.

மற்றபடி, சமையலில் இப்படிதான் செய்யவேண்டும், இவைதான் சேர்க்க வேண்டும் என்ற விதிமுறைகள் கிடையாது. எல்லாமே நம் விருப்பம்தான். நமக்கு பிடித்தமானவற்றை சேர்த்து மாற்றங்கள் செய்து பார்க்கும்போதுதான் புதுப்புது உணவுகள் கிடைக்கின்றன. நீங்களும் முயன்று பாருங்கள். நன்றாக இருப்பின் அவற்றை அறுசுவை நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

அட்மினண்ணா ஃபைரோஜா ஜமால் அவர்களுக்கு என் நன்றியை சும்மா சொன்னால் தீராது..அவ்வளவு சூப்பர் குறிப்புகளைக் கொடுத்திருக்கிரார்....இதனை செய்து பார்த்தேன்...சூப்பராக வந்தது ...கன்டிப்பாக தோழியர் அனைவரும் இதனை செய்து பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சைவம் சமைப்பவர்கள் அவர்களுக்கு விரும்பிய சைவ மசாலாவை செய்து சாப்பிடலாமே..மஷ்ரூம், கேரட்,பீஸ், பீன்ஸ், இப்படி செய்யலாமே.இஞ்சி பூண்டின் அளவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள்

நீங்கள் இந்த ரெசிபி செய்ததாக குறிப்பிடு உள்ளீர்கள்.

இதில் மாவை நான்கு புறமாக மடிக்க வேன்டும் என்று இருக்கு.எப்படி என்று விளக்கவும்.
அவ்வாறு செய்தால் திக்காக இருக்காதா.

நீங்கள் செய்த முறை எனக்கு சொல்லுங்க.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

தளி இப்ப இந்தியாவில் இருக்கா!

ஆசியா மசாலாவை லேசா பரத்தி விட்டு வைக்த்துடுங்க அப்புறமா மடிங்க சுடும் போது கொஞ்சம் வெந்ததும் லேலா அழுத்திட்டு சுடுங்க திக்காக வராது தைரியமா சுடுங்க!இப்படின்னு இல்லை ஏதும் காய்கறி,கடலை பருப்பு காலையில் சமைத்தது மீர்ந்து விட்டால் இப்படிதான் செய்வேன்..என் கணவ்ருக்கு பிடித்த ரெஸிபி இது

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி மர்ழியா உங்கள் பதிலுக்கு. நாம் செய்யும் முறையிலிருந்து வித்தியாசமாக இருந்தால் தெரிந்துக்கொள்ள எண்ணினேன்.யாகூல உங்களை பார்க்க முடியலை.

ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

இருமுறை பதிவு ஆகிவிட்டது
ASIA M.S.
PEACE BE ON EARTH

hhijk

உங்கள் recipie மிகவும் அருமை.
we all enjoyed it

I tried this,It's very tasty and really good.Keep submitting lot of recipes.Are you in INDIA?

இந்த முர்தபாவை நேற்று செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது....
Really superb taste.....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith