பனீர் பட்டர் மசாலா

தேதி: December 10, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.3 (46 votes)

அறுசுவை நேயர்கள் நிறைய பேர் எதிர்பார்த்த குறிப்பு இது. இந்த சுவையான பனீர் பட்டர் மசாலாவை திருமதி. சத்தியா அவர்கள் நமக்காக இங்கே விளக்குகின்றார். கடைகளில் கிடைக்கும் பனீர் பட்டர் மசாலாவை விட இது சுவையில் அபாரமானது. அதுமட்டுமன்றி ஆரோக்கியமானதும் கூட.

 

பனீர் - அரை கிலோ
தக்காளி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - அரை கிலோ
பூண்டு - 15 பல்
இஞ்சி - ஒரு அங்குலத் துண்டு
குடை மிளகாய் - 2
கொத்தமல்லி தழை - 2 கொத்து
வெண்ணெய் - 100 கிராம்
தனி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
அஜினோமோட்டோ - 2 சிட்டிகை
கொத்தமல்லி தூள் - ஒரு மேசைக்கரண்டி + ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒன்றரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 4
எண்ணெய் - 2 கப்


 

பெரிய வெங்காயத்தை தோல் உரித்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை கழுவி விட்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். குடை மிளகாயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
முதலில் வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பனீரை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
மற்றொரு வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். மேலும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி தக்காளியை போட்டு 2 நிமிடம் வதக்கி எடுத்துக் கொள்ளவும். ஆறியதும் வெங்காயம், தக்காளி இரண்டையும் தனித்தனியாக மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு இரண்டையும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக்கி அதில் பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
பிறகு இஞ்சி, பூண்டு, விழுது போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். அதனுடன் வெங்காய விழுதை ஊற்றி பச்சை வாசனை போகும் வரை 2 நிமிடம் வதக்கவும்.
பின்னர் தக்காளி விழுதை ஊற்றி 3 நிமிடம் கிளறி விட்டு வேக விடவும்.
அதில் சீரகத் தூள், கொத்தமல்லி தூள் போட்டு கிளறவும். அதனுடன் மிளகாய் தூள் போட்டு நன்கு கிளறி விட்டு 2 நிமிடம் கழித்து, வதக்கிய குடை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் போட்டு நன்கு கிளறவும்.
பிறகு பொரித்து வைத்துள்ள பனீர் துண்டங்களை போட்டு ஒரு நிமிடம் கிளறிவிட்டு வேகவிடவும்.
அத்துடன் ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஒரு கொதி வந்ததும் எடுத்து குக்கரில் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
கொதித்ததும் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் மேலே ஊற்றி ஒரு தேக்கரண்டி வெல்லத் தூள் போட்டு கிளறவும். பிறகு கொத்தமல்லி தழை மற்றும் ஒரு தேக்கரண்டி கொத்தமல்லித் தூள் போட்டு மூடி விடவும்.
இரண்டு விசில் வரும் வரை வேகவைத்து பிறகு இறக்கவும். சூடாக பரிமாறவும். நாண், சப்பாத்தி, பரோட்டா போன்றவற்றிற்கு பொருத்தமான பக்க உணவு இது.
இந்தக் குறிப்பினை வழங்கி இதனை அறுசுவை நேயர்களுக்காக செய்து காட்டியவர் திருமதி. சத்தியா அவர்கள். புதுவகை சமையலில் மிகுந்த திறன் வாய்ந்தவர். பல சமையல் போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்றவர்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பனீர் என்றால் என்ன? அதற்கு frenchயில் என்ன பெயர்? நன்றி

பனீர் என்றால் என்ன? எப்படி அதனை தயாரிப்பது என்பது அறுசுவையில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளது. பனீர் என்று மேலே உள்ள தேடுதலுக்கான பெட்டியில் டைப் செய்து தேடிப் பார்த்தீர்கள் என்றால் அதற்கான பக்கங்கள் உங்களுக்கு கிடைக்கும். உங்களின் வசதிக்காக சில பக்கங்களை கீழே கொடுத்துள்ளேன்.

<a href="http://www.arusuvai.com/tamil/node/2062" target="_blank"> முட்டை கோஸ்-பனீர் ரோல்ஸ் </a>

<a href="http://www.arusuvai.com/tamil/node/2808" target="_blank"> பனீர் வெங்காயக்கறி </a>

<a href="http://www.arusuvai.com/tamil/node/2651" target="_blank">ரசகுல்லா</a>

பனீருக்கான french name தெரியவில்லை. மன்னிக்கவும். வேறு யாரேனும் தெரிவிப்பார்கள் என்று நம்புகின்றேன்.

நன்றி திரு.Admin.
நான் இதை செய்துபார்கிறேன்

பனீர்யை frenchயில் ''mozzarelle'' ou ''mozarella'' என்று கூருவர்கள்.நன்றி

தேவி.

திருமதி சத்தியாவிர்க்கு
இந்த பனீர் பட்டர்
மசாலாவை நான் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது இந்த குறிப்பை தந்த உங்களுக்கு மிக்க நன்றி!

சத்தியா அவர்களுக்கு,

தங்களுடைய பனீர் பட்டர் மசாலா குறிப்பு மிகவும் அருமை.சமைத்து பார்த்தேன்.சுவைத்து மகிழ்ந்தேன்.மிக்க நன்றி.

-பிரபாகார்த்திக்

Sandhya Mam,
Today I tried Panner Butter Masala, it came out well. Thanks

paneer buter masala was super

சதாலட்சுமி
நான் செய்துபார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது என்று என் வீட்டில் அனைவரும் பாராட்டினர்.
ரொம்ப நன்றி.

சதாலட்சுமி

பனீர் மசாலா செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக இருந்தது. மிக்க நன்றி. ஆனால் பனீர் மிருதுவாக இல்லை.என்ன செய்ய வேண்டும்.
Panneer-rai romba fry panni vitteana?

ஹாய் சத்தியா மேடம்,

நான் இன்று பன்னிர் பட்டர் மசாலா செய்தேன்......மிகவும் ருசியாக இருந்தது....இந்த பனீர் பட்டர் மசாலா விற்கு கஸ்துரி மேத்தி சேர்க்க தேவை இல்லையா?அது சேர்த்தால் வடஇந்திய உணவிற்கு உண்டான மணமும்,சுவையும் கிடைக்கும் என கேள்விபடுஇருகிறேன்....சிரமம் பார்க்காமல் ,நேரம் கிடைக்கும் போது பதில் போடவும்...மேலும் உங்களிடம் இருந்து நிறைய சமையல் குறிப்பினை எதிர்பார்கிறேன்.சிங்கப்பூர் வந்தால் கண்டிப்பாக எங்க வீட்டுக்கு வரவும்....

அன்புடன்
ஸ்ரீ

ஹாய் சத்யா அக்கா, பனீரை பொரித்து தான் போட வேண்டுமா? நீங்கள் காட்டியது போல நிறம் பெற என்ன செய்ய வேண்டும்?

பனீர் பட்டர் மசாலா மிகவும் சுவையாக இருந்தது.குடைமிளகாய் இல்லாததால் உருளைகிழங்கு சேர்த்துக் கொண்டேன்.எளிமையான சுவையான ரெசிபி.(கலோரிதான் ரிச்.)

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

hello sathya madam karam masala enpadhu edhu,plz explain me

Hello Mrs Sathiya, paneer butter masala seithu parthen mikavum nalla irunthuchu, thanks .

Hai lina, panneer soft ta varuvatharku porithu eadutha udan water la pottu vainga after 10min la soft ta vanthudum bye

Hi I made this masala and everyone liked it.Thanks for posting the recipe

hai! friends, பனீர் செய்யும் முறையை விளக்க பட குறிப்புடன் யாரேனும் சொல்லுங்களேன்? pls

super taste

Hi Mrs.Sathya,

Can you Please give me the exact measurements like how many tomato,onions are required.

Thanks,
Sumathra

Very Nice.Today i am going to cook this receipe and surprise my husband.Shall i add tofu instead of paneer.Please anybody helps.

Very tasty.I used tofu instead of paneer in same method and result very good.My husband loves it.Thank you

paneer nantraga irundhadhu thank u sathya mam