வரகரிசி சர்க்கரைப் பொங்கல்

தேதி: April 25, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

வரகரிசி - அரை கப்
பாசிப்பருப்பு - கால் கப்
பால் - ஒரு கப்
நீர் - ஒன்றரை கப் + கால் கப்
வெல்லம் - ஒரு கப்
ஏலக்காய்த் தூள் - சிறிது
முந்திரி - சிறிது
திராட்சை - சிறிது
நெய் - 3 மேசைக்கரண்டி


 

வரகரிசி மற்றும் பாசிப்பருப்பைக் களைந்து வைக்கவும்.
குக்கரில் அரிசி மற்றும் பருப்புடன் ஒரு கப் பால், ஒன்றரை கப் நீர் ஊற்றி வேகவிடவும்.
கால் கப் நீரில் துருவிய வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து கரைந்ததும் வடிகட்டி வைக்கவும்.
வேக வைத்த அரிசி, பருப்பு கலவையுடன் வடிகட்டிய வெல்லக் கரைசலை ஊற்றி, அடுப்பை சிறு தீயில் வைத்துக் கிளறவும். அதனுடன் ஏலக்காய்த் தூள் மற்றும் 2 மேசைக்கரண்டி நெய் விட்டு கலந்துவிடவும்.
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் விட்டு காய்ந்ததும் முந்திரி, திராட்சையை வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
நன்றாக கிளறிவிட்டு நெய் பிரிந்து பொங்கல் பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். சத்தான, சுவையான வரகரிசி சர்க்கரைப் பொங்கல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சத்தான பொங்கல் அருமை... இதில் வெண்பொங்கலும் செய்யலாமா?

பொங்கல் அருமை வனி. அருட்செல்வி மாதிரி நீங்களும் ஆரம்பிச்சிட்டிங்களா? பார்க்கவே ஆசையா இருக்கு. வரகரிசி கிடைச்சா கண்டிப்பா ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பொங்கல் பார்சல் பிலிஸ்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் கூழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்யலாம், செய்து அனுப்பி இருக்கேன், வரும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நமக்கு அவங்க அளவுக்கு வராது உமா ;) அவங்க ரெசிபி ட்ரை பண்ண அம்மாகிட்ட அந்த ஐடம் எல்லாம் கேட்டேன். அம்மா இது வாங்கி வெச்சிருக்கேன், இதை முதல்ல செய், அடுத்த முறை அதெல்லாம் வாங்கி வைக்கிறேன்னு கொடுத்தாங்க. இதுல என்ன செய்யனும்னு அங்களே சொல்லியும் கொடுத்தாங்க. ஊரில் பாட்டி செய்வாங்களாம். இன்னும் புளி சாதம் பொங்கனும் இதுல. அதுவும் செய்து அனுப்பறேன். நன்றி உமா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அனுப்பிடுறேன் :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பொங்கல் சூப்பர்.....

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பாக்கவே சாப்பிடனும்போல இருக்கு,அரிசிதான் கிடைக்காது.இங்ங்கே அனுப்பிச்சிடுங்க.வனிக்கா

சூப்பர் அக்கா

வரகரிசி பொங்கல் மிகவும் சத்தான பொங்கல் சூப்பர்.

அருமை அக்கா உங்க எல்லா குறிப்பும் எனக்கு பிடிக்கும்…வரகரிசி என்றால் என்ன?

அன்பு வனி,

அருமையாக‌ இருக்கு. இப்ப‌ இங்க‌ சூப்பர் மார்க்கெட்டில் சிறு தானியங்கள் கிடைக்குது. வாங்கியதும் செய்து பார்க்கிறேன்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,
வரகரிசி வாங்கி சாதம் வைச்சுட்டு, மீதம் வச்சிருக்கேன் இந்த‌ வாரம் மகன் வந்ததும் செய்யலாம்னு. அவர் டயட்னுட்டார். அடுத்த‌ வாரம் செய்யலாம்னு வெயிட்டிங் அதுக்குள்ளே இங்க‌ வந்துடுச்சு:(

ஓகே! யாரோ ஒருத்தர் பகிர்ந்துகிட்டா சரிதான்.

படங்கள் சூப்பர்!

அன்புடன்,
செல்வி.

ஒரு முடிவோடத்தான், நீங்க, அருள் எல்லோரும் கிளம்பியிருக்கீங்க போல !!
நடத்துங்க நடத்துங்க :)))
நாங்க ஏக்கத்தோடே பார்த்துட்டு போயிடறோம்.
வரகரிசி எப்படியிருக்கும் என்றே எனக்குத் தெரியாது. இந்த ஊர்ல கிடைப்பதுமில்லை. எல்லாவற்றையும் லிஸ்ட்ல போட்டு வைத்துள்ளேன். அடுத்த முறை ஊருக்கு வரும் போது சிறுதானியங்களெல்லாம் வாங்கி வர வேண்டுமென்று.

மிக்க நன்றி :) பார்சல் குட்டீஸ்க்கும் சேர்த்து அனுப்பிடுவோம் இனியா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) தானியம் தான் மஞ்சு. இதை அரிசியில் செய்யும் எல்லாமே செய்ய பயன்படுத்துவாங்கனு அம்மா சொன்னாங்க. சாதமா செய்து வழக்கம் போல சாம்பார் ரசம்னு சாப்பிடவும் செய்யலாம். ஆனா அரிசியை விட இது சத்து, சுவை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பார்த்து சொல்லுங்க பாரதி, அரிசியை இட சுவையா இருந்தது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நம்ம ஏரியாவில் இருந்த கடை சொல்வனே... அங்கே தான் அம்மா வாங்கி வெச்சிருந்தாங்க. இப்போ எல்லா சூப்பர் மார்க்கட்டிலும் கிடைக்குது போல. இங்கே பார்த்தேன் விலை அதிகமா போட்டிருந்தாங்க ஆர்கானிக் என்ற பேரில்... அம்மா கிட்ட சொன்னா அவங்க வீட்டில் இருந்த இதை எடுத்து கொடுத்தாங்க... அம்மா இது என்னனே தெரியாதேன்னேன்... சொல்லிக்கொடுத்து, அதையும் கையில் கொடுத்து அனுப்பிப்புட்டாங்க. ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஏற்கனவே இருக்க உங்க லிஸ்டுல இதெல்லாம் இல்லையே... அப்பறம் நீங்க அனுப்புவீங்கன்னு எனக்கு எப்படி தெரியும் ;) முன்கூட்டியே “இனி வருபவை” அப்படின்னு ஒரு லிஸ்ட் போட்டுடுங்க... நான் விட்டா நீங்க முந்திடலாம். ஹிஹிஹீ. மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சத்தியமா இதுக்கு முன் எனக்குமே இதெல்லாம் என்னன்னு தெரியாது வாணி... அருள் குறிப்பை சமைக்க தான் அம்மாகிட்ட போய் வாங்கி வைங்க, அடுத்த முறை எடுத்துக்குறேன்னு சொன்னேன்... அவங்க இப்போ வீட்டில் இருக்குறதை கொண்டு போன்னு இருந்ததை தள்ளி விட்டுட்டாங்க. அவங்க அம்மா நியாபகம் அவங்களுக்கு... என்னை சமைக்க சொல்லி கேட்டு சந்தோஷப்படறாங்க. எல்லா வாங்கிப்போங்க... விலை பார்த்து வாங்குங்க... சில இடங்களில் ஏக விலை சொல்றாங்க இந்த பொருட்களை.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்க கேட்ட வரகரிசி வெண்பொங்கல் குறிப்பு இங்கே பாருங்க:

http://www.arusuvai.com/tamil/node/13038

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி பொங்கல் ஏ ஒன், வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப‌ பிடித்தது, போட்டோ முகப் புத்தகத்தில் வெளியிடப்படும்...:) இனி அடுத்ததா உங்க‌ புளி சாதம் தான் செய்யனும். நல்ல‌ சத்தான‌ டேஸ்டியான‌ குறிப்புக்கு வாழ்த்துக்கள் வனி..:)

விழுவதெல்லாம் எழுவதற்க்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..:)
என்றும் அன்புடன்
சுமி....

செய்து பார்த்து கருத்து பதிவிட்டமைக்கு மிக்க‌ நன்றி :) வீட்டில் எல்லாருக்கும் பிடிச்சது ரொம்ப‌ சந்தோஷம். அவசியம் புளி சாதமும் முயற்சி பண்ணி பாருங்க‌.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா