பால் கோவா

தேதி: April 26, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.2 (6 votes)

இந்த குறிப்பு அறுசுவை டீமின் பால் கோவா குறிப்பினைப் பார்த்துச் செய்தது.

 

பால் - ஒரு லிட்டர் (திக்கான பால்)
சீனி - 200 கிராம் (ஒரு கப் அளவை விட சிறிது குறைவு)
ஏலக்காய்ப் பொடி - ஒரு சிட்டிகை
நெய் - 3 தேக்கரண்டி


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.
அகலமான பெரிய நாண் ஸ்டிக் பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து, பால் மூன்றில் ஒரு பங்காக வற்றும் வரை நன்றாகக் காய்ச்சவும். (ஒரு மரக் கரண்டியால் பாத்திரத்தின் ஓரங்களில் படியும் பாலாடையை வழித்து பாலில் சேர்த்துவிட்டு, அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும். பால் நன்றாக வற்றுவதற்கு 30 - 40 நிமிடங்கள் ஆகக் கூடும்).
பால் நன்கு வற்றியவுடன் சீனியைச் சேர்த்து கிளறிக் கொண்டே இருக்கவும். சீனி கரைந்து பால் கெட்டியானதும், நிறம் மாறி வரும்.
பால் கோவா வாசனை நன்றாக வரும் போது நெய் சேர்த்துக் கிளறி, பிறகு ஏலக்காய்ப் பொடியைச் சேர்த்துக் கிளறவும்.
நன்கு கெட்டியாகி பால் கோவா பதத்திற்கு வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
கடையில் வாங்குவதைப் போன்ற சுவையான பால் கோவா தயார். நம் விருப்பத்திற்கேற்ப பொடித்த பாதாம் பருப்பு அல்லது வறுத்த முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் மற்றும் டூட்டி ஃப்ரூட்டியை மேலே தூவி அலங்கரிக்கலாம்.

பால் கொதிக்கும் போது அளவு குறையுமே தவிர, கெட்டியாகாது. சீனி சேர்த்த பிறகு தான் கெட்டியாகும்.

நாண் ஸ்டிக் தவாவில் செய்வது மிகவும் எளிது. அடி பிடிக்காமல் நன்றாக வரும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்க்கவே நாஊருது செய்துபார்க்கிரேன்.

ஆகா... ஒரே குழப்படியா இருக்கே ;) முதல்ல நான் அருள்னு பேரை பார்த்தேனா இல்லையா!!! யாரோ ஒருத்தர்... குறிப்பு சூப்பர். செய்துடுவோம்... படம் சூப்பர். இமா கண்ணில் இந்த பதிவு படாம என்னை காப்பாத்திப்போடப்பா கடவுளே. :’( காலை பத்து மணிக்கு மேல தூக்க கண்ணுன்னு சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

பால்கோவா படங்களை பார்த்ததுமே செய்யனும் தோணுது, எங்க வீட்டில எல்லாருக்கும் பிடிக்கும் நிச்சயம் செய்துட்டு சொல்றேன்

வனிக்கா பால்கோவா செய்த்து சீதாம்மாதான்

சூப்பர் சீதாம்மா. அப்படியே பார்சல் பண்ணி இங்க அனுப்பிடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பால்கோவா சூப்பர் சீதாம்மா.....

பால்கோவா அருமை.எளிமையான‌ செய்முறை விளக்கம்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு இனியா

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு வனி,

என்ன‌ ஆச்சு? இப்படிக் குழம்பிட்டீங்க‌! 10 மணி வரைக்கும் தூங்கினாலும் தப்பில்லை, ஆனா கரெக்டா அருள்னு தப்பா குழம்பி இருக்கீங்களே, அதுதான் சிறப்பு.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமாகுணா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நித்யா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு முசி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

இப்படிலாம் தலைப்பு கொடுத்து எல்லாரையும் அட்ராக்ட் பண்ணப்புடாது... அந்த பேரில் மாற்றம் வந்தது உண்மை ;) ஆனா அது வேறு... அப்பறம் சொல்றேன் உங்களுக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இந்தமுறை சூப்பரா இருக்கு.நேற்று மாலையில் தான் கன்டன்ஸ்ட் மில்க் வைத்து கொஞ்சமா மைக்ரோவேவில் பால்கோவா செய்துப் பார்த்தேன், கன்டன்ஸ்ட் மில்க் வாசனை எனக்கு அவ்வளவாப் பிடிக்கல மேடம், கலரும் டார்க்காக வந்தது. அவசியம் இதே முறையில் செய்துப் பார்க்கணும்.இது சமைக்க எவ்வளவு நேரம் ஆகும் சீதா மேடம்.

எச்சில் ஊறுது.என்னன்னு சொல்லறது போங்க,சான்ஸே இல்ல.ஆசைய கூட்டுது இதை எனக்கு அனுப்பிடுங்க பேசாம.

Be simple be sample

குறிப்பு ரொம்ப எளிமையா இருக்கு சீதாம்மா. எனக்கு பால்கோவா ரொம்ப பிடிக்கும். செய்து பாத்துட்டு சொல்றேன்.

அன்பு வாணி,

30லிருந்து 40 நிமிஷம் ஆகும் வாணி, நீங்க அடுப்பில் ஒரு பக்கம் வச்சுட்டு, மத்த வேலையைப் பாக்கலாம். அப்பப்ப கிளறி விடுங்க, போதும்.

பத்திரிக்கைகளில் வரும் சமையல் குறிப்புகளை ஆசை ஆசையாக படிப்பேன், சேர்த்து வைப்பேன், ஆனா, புது குறிப்புகள் ட்ரை பண்ண ரொம்பத் தயங்குவேன். பண்டம் பாழாகிடக் கூடாதேன்னு ஒரு எண்ணம்.

இப்ப அறுசுவைக்கு வந்த பிறகுதான், ஸ்டெப் பை ஸ்டெப் ஃபோட்டோஸ் பாத்து, (குறிப்பின் கீழே மத்தவங்க ட்ரை பண்ணினதாக பாராட்டியதைப் படித்துப் பார்த்து) கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் வந்து செய்து பார்க்க ஆரம்பிச்சேன்.

அதுவும் இனிப்பு செய்யணும்னா ரொம்பவே யோசிப்பேன். விக்கிற விலையில் பாலும் சீனியும் நெய்யும் வீணாக்கிடக் கூடாதேன்னு.

பேரன் ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா விரும்பி சாப்பிட்டதாக மருமகள் சொன்னார், அவ்வளவுதான், செய்தே ஆகணும்னு ஆசையுடன் அறுசுவையில் தேடினேன்.

கண்டென்ஸ்ட் மில்க், மைக்ரோ அவன் குறிப்பு எல்லாமே இருந்தது. அறுசுவை டீமின் குறிப்பை முதலில் ட்ரை பண்ணலாம்னு தோணிச்சு.

நான் ஸ்டிக் பாத்திரத்தில், பால் அடி பிடிக்காது என்று ஒரு தைரியம்.(பால் அடி பிடித்தால், வாசனையே மாறிடும்தானே)

பழைய பத்திரிக்கைக் குறிப்புகளில் பால் வற்றி, சேறு போல கெட்டியாகும் என்றெல்லாம் படிச்சிருக்கேன், ஊஹும், அப்படியெல்லாம் ஆகலை, சீனியைப் போட்டதும் இன்னும் டைல்யூட் ஆகுமேன்னு யோசிச்சிகிட்டேதான் கிளறினேன்.

சீனியைப் போட்டதும், கொஞ்சம் டைல்யூட் ஆனாலும், கொதித்ததும், நல்லா வந்துடுச்சு.

கடைகளில் விற்கும் தூத் பேடா மாதிரி வரலை, ஸ்ரீவில்லிப்புத்தூரின் பால்கோவா போல, பிசுபிசுப்பாக இருந்தது.

ட்ரை பண்ணிப் பாத்துட்டு சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ரேவதி,

உங்களுக்கே உங்களுக்குத்தான். எடுத்துக்கோங்க‌.

பதிவுக்கு நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நஸ்ரியா,

செய்வதற்கு சுலபமாகவே இருந்தது. அவசியம் செய்து பாருங்க‌.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
நான் வருவதற்குள் கடைசியாக‌ கப்பில் இருப்பது காலியாக‌ இருக்கே. சூப்பரா செய்திருக்கீங்க‌!
எனக்கும் கொஞ்சம் அனுப்பிடுங்க‌:)

அன்புடன்,
செல்வி.

சீத்தாம்மா,
ரொம்ப‌ ஈஸியா இருக்கு , எனக்கு பால்கோவானா அவ்ளோளோளோளோ.............பிடிக்கும்.ட்ரை பண்றேன் செய்ய,

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

எனக்கு பிடிச்ச ஸ்வீட்... சீக்கிரமே செய்திடுவேன்

ஒரு லிட்டர் பாலுக்கு எவ்வளவு பால்கோவா வரும்? ரொம்ப நல்லா இருக்கு மேடம்.

பால்கோவா இன்று செய்தேன் மா. சூப்பராக இருந்தது. டேஸ்ட் அருமை. என் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்து இருந்தது. நன்றி சீத்தம்மா.

அன்பு செல்வி மேடம்,

இன்னொரு த்டவை இன்னிக்கே செய்து அனுப்பிடறேன்:)

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சுபி,

ஈசியான முறைதான், செய்து பாருங்க.

பதிவுக்கு மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ப்ரியா,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி. செய்து பார்த்து சொல்லுங்க.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு soulinpeace,

கால் கிலோ அளவுக்கு பால்கோவா கிடைக்கும். (உத்தேசமான அளவு)

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு நஸீரா,

செய்து பார்த்தீங்களா, மிகவும் மகிழ்ச்சி.

செய்து பார்த்து, பதிவிட்டமைக்கு மிகவும் நன்றி நஸீரா.

அன்புடன்

சீதாலஷ்மி

பால்கோவா.....என்னவருக்கு ரொம்ப‌ பஇடிக்கும்.என் அப்பாவிற்கும் ரொபம்ப‌.... பிடிக்கும். நேற்றே செய்துட்டேன். :‍) ரொம்ப‌ நல்லா இருந்தது மட்டுமில்லாமல் சுலபமாகவும் இருந்தது. நான் அவ்வளவாக‌ பால் பொருள்கள் விரும்பமாட்டேன்(பால்கோவா கேட்கவே வேணாம் ஓடிடுவேன்.) பட் நேற்று சாப்பிட்டேன் சூப்பரா வந்தது. தேங்ஸ் என்னவருக்கும் ரொம்பவே பிடித்திருக்கு... ஆஃபீஸ் விட்டு வீட்டினுள் வண்டி நிறுத்தரச்சேவே என்ன‌ மணக்குதுன்னு கேட்டுட்டே வந்தார்.அறுசுவையை பாராட்டினார்.நான் உங்களுக்கும் அறுசுவைக்கும் நன்றி சொல்கிறேன்.
நான் சாதா பாத்திரத்தில்தான் வைத்தேன்.அடிப்பிடிக்கலை.கிளறிவிட்டுடே இருந்தேன். சர்க்கரை சேர்த்ததும் கெட்டியாகத்தான் கொஞ்சம் நேரம் பிடித்தது.
எனக்கு ஒரு டவுட்,நாங்கள் வெண் சர்க்கரை உபயோகிப்பது இல்லை.பதிலாக‌ கெமிக்கல் போடாத‌ நாட்டு சர்க்கரைதான் உபயோகிக்கிறோம். பால்கோவாவில் இதையே சேர்க்கலாமா நன்றாக‌ வருமா?
நேற்று முதல் முறைன்றதால‌ டெஸ்ட் வேணாம்னு வெள்ளை சர்க்கரை சேர்த்து செய்தேன்....மீண்டும் நன்றிகள்....இதே போல‌ பல‌ குறிப்பு கொடுத்தா கணவரின் அன்பு மட்டுமல்ல‌ அனைவரின் அன்பையும் பெற்றிடலாம்.:‍)

பால்கோவா வீட்டில் அடிக்கடி செய்வோம் ஏலக்காய் சேர்த்து செய்தது இல்லை

அன்பு ரேணுகா,

செய்து பார்த்தீங்களா, மிகவும் மகிழ்ச்சி.

நாட்டுச் சர்க்கரை சேர்க்கும்போது, ருசி வேறுபடும்னு நினைக்கிறேன், அதனால் என்ன, ட்ரை பண்ணிப் பாருங்க, அதுவும் ஒரு புது மாதிரி டேஸ்ட் ஆக இருக்கும்தானே.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு ஜெனி,

பதிவுக்கு மிகவும் நன்றி. ஏலக்காய் வாசனைக்குத்தான், சேர்க்காமலும் செய்யலாம்.

அன்புடன்

சீதாலஷ்மி

ஏலக்காய் சேர்த்து செய்தேன் நன்றாக இருந்தது.

அன்பு ஜெனி,

செய்து பார்த்தீங்களா, மிகவும் மகிழ்ச்சி.

அன்புடன்

சீதாலஷ்மி

silver pathirathil seyalama madam.enidam non stidk pathiram kidayathu

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

seetha madam nan neenka senju katina methodla than palkova panunaen.supera irunthathu apadiya kadaiyala panuna mathiri irunthathu.en husband sapitu ithu ne than senjucheya doubt ketanka apadi oru taste vanthathu palkova. rempa thanks madam.ithuthan first time seiyurathu supera vanthathu .

TIME IS VERY PRECIOUS FOR OUR LIFE DONT MISS IT.

அன்பு ஷாலினி,

செய்து பார்த்து பதிவிட்டிருக்கீங்க. உங்களுக்குப் பிடிச்சிருந்தது பற்றி மிகவும் மகிழ்ச்சி.

இன்னும் மற்ற குறிப்புகள் செய்து பார்த்து சொல்லுங்க.

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி