க்ரிஸ்பி சிக்கன் ஸ்ட்ரிப்ஸ்

தேதி: April 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (1 vote)

 

எலும்பில்லாத சிக்கன் - கால் கிலோ
மைதா மாவு - ஒரு கப்
முட்டை - 1 (அ) 2
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகுத் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும். சிக்கனை எலும்பில்லாமல் மெல்லிய நீளமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு மற்றும் மிளகாய் தூள் கலந்து அடித்துக் கொள்ளவும். மைதா மாவுடன் தூள் வகைகள் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.
பிறகு சிக்கன் துண்டுகளை முட்டையில் தோய்த்தெடுத்து, கலந்து வைத்துள்ள மைதா மாவில் நன்கு பிரட்டவும்.
வாணலியில் எண்ணெயைச் சூடாக்கி, மைதா மாவில் பிரட்டிய சிக்கன் துண்டுகளைப் போட்டுப் பொரிக்கவும்.
நன்கு பொரிந்து கிரிஸ்பியாக வந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
டேஸ்டி & க்ரிஸ்பி சிக்கன் ஸ்ட்ரிப்ஸ் ரெடி. கெச்சப்புடன் பரிமாறவும். குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பார்கள்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கிரிஸ்பி சிக்கன் சூப்பர்.....நான் ட்ரை பன்னிட்டு சொல்ரேன்

கிரிஸ்பி சிக்கன் KFC சிக்கன் போல நல்ல மொறுமொறுப்பா இருக்கும் போல. விருப்பபட்டியலில் சேர்த்துருக்கேன் ட்ரை பண்ணிட்டு சொல்றேன் வாணி. இந்த மாதிரி கிரிஸ்பி அயிடங்கள் என் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நல்லாயிருக்கு,நானும் இது போல் செய்வதுண்டு,மாசாலா சற்று வேறுபடும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

க்ரிஸ்பி சிக்கன் சூப்பர், பார்க்க காரச்சேவு போல இருக்கு, அருமை வாணி

அடுத்தமுறை கோழிக்கு இது தான் நிலமை :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வாணி,
பார்க்க‌ ரொம்ப‌ கிரிஸ்பியாக‌ இருக்கு. நான் கொஞ்சம் வித்தியாசமாக‌ செய்வேன்.
நல்லா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

நல்லா இருக்கு குறிப்பு.... ஒரு சந்தேகம்... மீதமான கலங்கிய எண்ணெயை என்ன பண்ணுவீங்க? அதுவும் சிக்கன் பொரித்த எண்ணெய்?

புதுசா குறிப்பு கொடுக்கீங்க, நல்லா இருக்கு, படமும் நல்லா இருக்கு. இன்னும் நிறைய கொடுங்க. வாழ்த்துக்கள் வாணி.

அவசியம் சொல்லுங்க நித்யா, நன்றி

ஆமாம் உமா, நல்ல க்ரிஸ்பியாகத்தான் இருக்கும். KFC சிக்கன் போலவே ருசியுமிருக்கும்.
செய்துப் பார்த்து சொல்லுங்க, நன்றி உமா.

நன்றி முசி. உங்க முறையையும் அனுப்பி வைங்க

ஐயய்யோ!!! காரச்சேவு எனக்கு ரொம்பப் பிடிக்கும், நியாபகப் படுத்திட்டீங்களே.......
நன்றி பாலபாரதி :))

பார்த்து வனி, கோழிக்கு வலிச்சிடப் போகுது :))

நல்ல க்ரிஸ்பியாகத்தான் இருக்கும் செல்வி மேடம், நன்றி

பிரியா கொஞ்சம் எண்ணெயிலே பொரித்து விடுவதால் அதை கொட்டி விடுவேன். நன்றி

முயற்ச்சிக்கிரேன், வருகைக்கும், பதிவிற்கும் நன்றி

ரொம்ப க்ரிஸ்பியா இருக்கும் போல பார்க்கவே தெரியுது, சிக்கன் ரொம்ப பிடிக்கும் செய்துடவேண்டியது தான்

நல்ல க்ரிஸ்பியாகத்தான் இருக்கும் உமாகுணா , அவசியம் செய்துப் பாருங்க, நன்றி