க்ரிஸ்பி சிக்கன் லாலிபாப்

தேதி: April 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

சிக்கன் லெக் பீஸ் - 3 கிலோ
தந்தூரி மசாலா - 2 பாக்கெட்
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலா - 2 தேக்கரண்டி
சில்லி பவுடர் - 2 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - 2
பட்டர் - கால் கப்
தயிர் - 400 கிராம்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - 4 மேசைக்கரண்டி


 

சிக்கனைச் சுத்தம் செய்து ஒரு டூத் பிக்கால் எல்லா இடங்களிலும் குத்தி வைக்கவும். பிறகு அதில் ஒன்றரை எலுமிச்சையை பிழிந்துவிட்டு உப்புச் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவிடவும்.
தயிரை ஒரு காட்டன் துணியில் போட்டு 20 நிமிடங்கள் வைத்திருந்து, தண்ணீர் வடிந்ததும் எடுத்து அதனுடன் தந்தூரி மசாலா, கரம் மசாலா, சில்லி பவுடர் மற்றும் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அதனுடன் சிக்கனைச் சேர்த்து நன்கு பிரட்டி 2 மணி நேரம் ஊறவிடவும். பிறகு 10 மணி நேரம் ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து, மைக்ரோவேவில் 180 டிகிரியில் 10 நிமிடங்கள் வைத்திருக்கவும்.
பிறகு சிக்கனைத் திருப்பி 10 நிமிடங்கள் வைத்தெடுத்து, ஒரு பிரஷ்ஷில் பட்டரைத் தொட்டுக்கொண்டு ஒவ்வொரு சிக்கன் லெக் பீஸிலும் தடவி, மீண்டும் மைக்ரோவேவில் வைத்து 180 டிகிரியில் 10 நிமிடங்கள் வைத்தெடுத்து, சிக்கனை திருப்பிவிட்டு மீண்டும் 10 நிமிடங்கள் வைத்திருந்து வெளியே எடுக்கவும்.
கையில் பிடித்து சாப்பிட வசதியாக அலுமினியம் ஃபாயில் பேப்பரை நறுக்கி, அனைத்து லெக் பீஸிலும் கை பிடிக்கும் பகுதியில் சுற்றி வைக்கவும். சுவையான க்ரிஸ்பி சிக்கன் லாலிபாப் தயார். பரிமாறும் போது மீதமுள்ள பாதி எலுமிச்சையை பிழிந்துவிடவும். பிரியாணி, ரைத்தாவுடன் பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சுவையான குறிப்பு. லாலிபாப் என்றதும் விங்ஸ் கொண்டு செய்திருப்பிங்கன்னு நினைச்சேன்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சிக்கன் லாலிபாப் பார்கவே சூப்பரா இருக்கு.

கிரிஸ்பி சிக்கன் சூப்பர்ப்பா. என்கிட்ட கன்வென்ஷன் மோட் மைக்ரோவேவ்தான் இருக்கு. அதில் வைப்பதானால் எவ்வளவு நேரம் வைக்கனும்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

க்ரிஸ்பி சிக்கன் சூப்பர், பார்க்கவும் லாலிபாப் மாதிரி இருக்கு குறிப்பும் எளிமையாக உள்ளது, சிக்கன் லெக் பீஸ் அருமை. இப்பவே சாப்பிடனும் போல இருக்கு.

நல்ல கலர்ஃபுல்லா இருக்கு. லாலிபாப் சிக்கன் என் மகளுக்குப் பிடித்தது, நான் சிக்கன் விங்க்ஸ் வைத்து செய்வேன்.

அன்பு கதீஜா,
நலமா? குழந்தைங்க‌ எப்படி இருக்காங்க‌?

சிக்கன் லாலிபாப் பார்க்கவே சூப்பரா இருக்கு. அப்படியே இங்கே பார்சல் அனுப்பும்மா.

அன்புடன்,
செல்வி.

Hi katheeja Madam,

மிகவும் சுவையான பார்ட்டி குறிப்பு.Get together-க்கு செய்து பார்க்க விருப்பம்.

சில கேள்விகள் உள்ளன.தயவுசெய்து பதிலளித்து உதவவும்.

இதில் நீங்கள் குறிப்பிட்டுள்ள //தந்தூரி மசாலா - 2 பாக்கெட்//- என்பது எந்த அளவில்,50கிராம் பாக்கெட்டில் 2 பயன்படுத்த வேண்டுமா அல்லது 100 கிராம் பாக்கெட்டில் 2 பயன்படுத்த வேண்டுமா.//பட்டர் - கால்கப் என்பது தோராயமாக
எவ்வளவு கிராம் சேர்க்கலாம்.//எலுமிச்சை பழம் - 2,எத்தனை டேபிள்ஸ்பூன் லெமன் ஜூஸ் சேர்க்கலாம்(we have readymade tin ones).

நன்றி.We will get back to you with the feedback.

pakkave saptanum pola eruku

True love never dies

எனது குறிப்பை வெளியிட்ட அறுசுவை டீமுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
கதீஜா

முதலாவதாக வந்து கருத்து தெரிவித்ததற்க்கு நன்றிப்பா.

என்றும் அன்புடன்,
கதீஜா

கருத்து சொன்னதுக்கு நன்றிங்க.

என்றும் அன்புடன்,
கதீஜா

உங்க கருத்துக்கு நன்றிப்பா. நீங்க 350 ல் 10 நிமிடம் வைத்து திருப்பி 10 நிமிடம் வைங்க அதன் பின் வெளியில் எடுத்து பட்டர் தடவி 5நிமிடம் வைத்து திருப்பி 5 நிமிடம் வைங்க சரியா வரும்.

என்றும் அன்புடன்,
கதிஜா

உங்க கருத்துக்கு ரெம்ப ரெம்ப நன்றிங்க. செய்து பார்த்துட்டு சுவையையும் பற்றி சொல்லுங்க.

என்றும் அன்புடன்,
கதீஜா

உங்க கருத்துக்கு நன்றிங்க.

என்றும் அன்புடன்,
கதீஜா

நானும், பிள்ளைகளும் நலம். நீங்க, வீட்டில் உள்ள அனைவரும் நலமா? உங்க கருத்துக்கு நன்றி அக்கா. பார்சல்தானே அனுப்பிட்டா போச்சு

என்றும் அன்புடன்,
கதீஜா

உங்க கருத்துக்கு நன்றிங்க. பதில் தர தாமதத்திற்க்கு சாரிங்க. இங்க ஹாலிடேஸ் அதனால வெளியூர் போய்ட்டோம். இன்னைக்கு தான் அறுசுவைக்கு வந்தேன்.

உங்கள் கேள்விக்கு பதில்
50 கிராமில் 2 பாக்கெட் போட்டேன்
எழுமிச்சை நீங்க 6 டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கோங்க
பட்டர் 25 கிராம்
அப்பதான் நல்ல மணமாகவும், க்ரிஸ்பியாகவும் இருக்கும்.

இது என் குழந்தை பர்த்டே பார்ட்டியில் செய்தேன் செம ஹிட் பெரியவங்க, குழந்தைங்க எல்லாருமே விரும்பி சாப்பிட்டார்கள்.

நீங்களும் செய்து அசத்துங்க. அப்புறம் வந்து பதில் போடுங்க.

என்றும் அன்புடன்,
கதீஜா

உங்க கருத்துக்கு நன்றிங்க.

என்றும் அன்புடன்,
கதீஜா

Hi katheeja madam,
Chicken lollypop நேற்று செய்தோம்.மிக மிக சுவையாக இருந்தது.செய்முறையை பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.