சிம்பிள் சிக்கன் மஞ்சூரியன்

தேதி: April 30, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சிக்கன் - அரை கிலோ
65 மசாலா - 3 தேக்கரண்டி
வெங்காயம் - 2
பூண்டு - 4 பல்
டொமேட்டோ சாஸ் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை பழம் - பாதி
கார்ன் ஃப்ளார் - ஒரு தேக்கரண்டி
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - அரை தேக்கரண்டி
தண்ணீர் - கால் கப்


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாத்திரத்தில் சிக்கனுடன் எலுமிச்சை சாறு மற்றும் 65 மசாலா சேர்த்து பிரட்டி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் மற்றும் வெண்ணெய் ஊற்றி, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் டொமேட்டோ சாஸ் ஊற்றி, உப்புச் சேர்த்துக் கிளறவும்.
லேசாக கொதிவரத் துவங்கியதும் பிரட்டி வைத்துள்ள சிக்கன் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி, சிறிது தண்ணீர் விட்டு 10 நிமிடங்கள் மூடி வைத்து வேகவிடவும். (இடையிடையே நன்கு கிளறிவிடவும்).
சிக்கன் வெந்ததும் சிறிது தண்ணீரில் கார்ன் ஃப்ளாரைக் கரைத்து ஊற்றி 2 நிமிடங்கள் கிளறி இறக்கவும்.
டேஸ்டி & சிம்பிள் சிக்கன் மஞ்சூரியன் ரெடி. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். (நான் கறிவேப்பிலை மட்டும் தூவியுள்ளேன்).

சிக்கனை எண்ணெயில் பொரித்தெடுத்தும் சேர்க்கலாம். இன்னும் அதிகச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டேஸ்டி சிக்கன் மஞ்சூரியன். எனக்கு ஒரு பார்சல் அனுப்பிடுங்க நித்யா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சிம்பிள் & சூப்பர் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சூப்பர் நித்யா பார்க்கும் போதே சாப்பிடும் போலயிருக்கு…வாழ்த்துகள்

சூப்பர் நித்யா, சிம்பிள் டேஸ்டி மஞ்சூரியன். சிக்கன் பிரட்டி வைக்கும் போது உப்பு தேவையில்லையா நித்யா

பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு, சூப்பரா, நல்ல கலர்புல்லா இருக்கு சிம்பிள் சிக்கன் மஞ்சூரியன் அருமை.

குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு மிக்க நன்றி

நன்றி.. உங்களுக்கு இல்லாமலா எடுத்துகோங்க

நன்றி..

மிக்க நன்றி..

நன்றி.. 65 மசாலாவில் உப்பு இருக்கும்.தேவை பட்டால் சேர்துக்கொள்ளவும்..

நன்றி..

அருமையாக‌ செய்து இருகீங்க‌,சூப்பர்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு நித்யா,
பொரிக்காமல் சிக்கன் மஞ்சூரியன்! சிம்பில் & சூப்பர்!

அன்புடன்,
செல்வி.

சிம்பிள் சிக்கன் மஞ்சூரியன் கலர்ஃபுல்லா இருக்கு நித்யா, ஃப்ரை பண்ணாமல் செய்திருப்பது ஹெல்த்தி.சைனீஸ் அயிட்டமாச்சே கறிவேப்பிலை சேர்த்தால் ஃபிளேவர் மாறிவிடாதா ?

முசி நன்றி..

செல்வி அக்கா நன்றி...

வானி அக்கா கருவேப்பிள்ளை ப்ஃளேவர் பிடிக்கும் அதனால எப்பவும் கருவேப்பிள்ளை சேர்ப்பேன்.

ஹாய் நித்யா இன்று உங்க சிக்க்ன் மஞ்சூரியன் செய்தேன் ரொம்ப நல்லா இருந்தது நான்றி