டயட் சூப்

தேதி: May 1, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

2
Average: 2 (3 votes)

 

வெள்ளை வெங்காயம் - 3
செலரி - ஒரு கட்டு
குடை மிளகாய் - 2
முட்டைக்கோஸ் - அரை கிலோ
தக்காளி - 3
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள் - தேவையான அளவு


 

காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். (அல்லது) ஃபுட் ப்ராசசரில் போட்டுப் பொடியாகும் வரை ஓடவிட்டு எடுக்கவும்.
நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும்.
5, 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும்.
அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

இது ஜி. எம் டயட்டில் சொல்லப்படும் வொண்டர் சூப். எனக்குத் தகுந்தாற்போல் சிறிது மாற்றிக் கொண்டேன்.

செயற்கைப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் சூப். உடல் இளைப்பதற்கு இந்த டயட் சூப் மிகவும் உறுதுணையாக இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு குடிக்கலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

டயட் சூப் சூப்பர். ஆரோக்கியமான குறிப்பு.

டயட் சூப் சுலபமான,நல்ல ஹெல்த்தியான சூப்,

செலரின்னா என்னது.சூப் ஈசியா இருக்கு செல்விமா.வெள்ளை வெஙாயம் இங்கு கிடைக்காது.சிகப்பு(அ)சின்ன வெங்காயத்தில் செய்யலாமா

சுலமான சூப்பா இருக்கே இதுபோல‌ தான் தேடிகிட்டு இருந்தேன் சரியான‌ நேரத்தில் கிடைச்சிருக்கு

ஹெல்தியான சூப் அக்கா நல்லாருக்கு. கட்டாயம் வெள்ளை வெங்காயம்தான் சேர்க்கனுமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

அன்பு பாலபாரதி,
மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
ஆமாம் வாணி, சுலபமாகவும் இருக்கும். இதைக் குடித்தால் வயிறு நிரம்பியது போல‌ இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு இனியா,
மன்னிக்கவும். பேரன் வந்திருப்பதால் உடனே பதில் போட‌ முடியலை. வெள்ளை வெங்காயம் கிடைக்கலைன்னா, சிவப்பு வெங்காயம் சேர்க்கலாம். சின்ன‌ வெங்காயம் சேர்த்தால் ரொம்ப‌ காராமாக‌ இருக்கும்.

செலரின்னா கொத்தமல்லி போல‌ ஒரு இலை. பெரிய‌ டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர்களில் தான் கிடைக்கும். அது கிடைக்கலைன்னா, கொத்தமல்லி தழை கூட‌ சேர்க்கலாம்.

அன்புடன்,
செல்வி.

அன்பு தேவி,
ரொம்ப‌ சுலபம் தான். அப்படியா? டயட்டுக்கு ரொம்ப‌ நல்ல‌ சூப்.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
வெள்ளை வெங்காயம் தான் சேர்க்கணும்னு இல்லை. சிவப்பு வெங்காயமும் சேர்க்கலாம்.

நிச்சயமாக‌ ஹெல்தியான‌ சூப் தான். இதில் உள்ள‌ எல்லாமே உடல் எடை குறைய‌ உதவும்.

அன்புடன்,
செல்வி.