வரகரிசி புளிசாதம்

தேதி: May 3, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வரகரிசி - முக்கால் கப்
புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு
மிளகாய் வற்றல் - 4
வேர்க்கடலை - சிறிது (விரும்பினால்)
கறிவேப்பிலை - 2 கொத்து
வெங்காயம் - பாதி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
பெருங்காயம் - சிறிது (விரும்பினால்)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிது


 

வரகரிசியைக் களைந்து நீரை வடித்துவிட்டு வைக்கவும். ஒரு கப் நீரில் புளியை ஊறவைத்துக் கரைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, மிளகாய் வற்றல், வேர்க்கடலை மற்றும் பெருங்காயம் சேர்த்து சிவக்கவிடவும்.
அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கிவிட்டு, புளி கரைசல், மற்றும் அரை கப் நீர் (முக்கால் கப் வரகரிசிக்கு ஒன்றரை கப் நீர் என்ற அளவில்) ஊற்றி உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
நன்றாகக் கொதித்ததும் வரகரிசியைச் சேர்த்து கலந்துவிடவும். மீண்டும் கொதிக்கத் துவங்கியதும் அடுப்பை சிறு தீயில் வைத்து குக்கரை மூடி 10 நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும்.
ப்ரெஷர் அடங்கியதும் திறந்து கிளறிவிடவும். குழையாமல் உதிரியான சுவையான சத்தான வரகரிசி புளி சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஹெல்தி புளிசாதம் பாக்கவே சூப்பரா இருக்கு.... முகப்பு படம் அருமை..

சாதம் சூப்பர். வரகரிசில நிறைய அயிட்டம்ஸ் வச்சிருகீங்க போல. கலக்குங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Pakave superarku.kandipa try panren,

Kalam pon ponrathu

புளிசாதம் சூப்பர்.கலக்குங்க வனிக்கா

அன்பு வனி,

வெங்காயம், புளி எல்லாம் சேர்த்து, சூப்பரா செய்திருக்கீங்க. ரொம்ப நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

சுலபமான சத்தான புளியோதரை வனி

வரகரிசி புளி சாதம் புதுசா இருக்கு. சூப்பர்...

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்து பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நான் ஒரு ஐட்டமும் வெச்சிருக்கல உமா.. அம்மாவின் அம்மா இப்படி செய்வாங்கன்னு அம்மா செய்ய சொன்னாங்க. :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்யூ சோ மச் இனியா :) செய்து பாருங்க, நேரம் கிடைக்கும் போது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சைவம் தானே தந்திருக்கேன் ;) செய்துட்டு சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) ட்ரை பண்ணி பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா