விவிகா

தேதி: December 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 5 (1 vote)

 

பச்சரிசி - 300 கிராம்
பச்சரிசிக்குருணை - 75 கிராம்
தேங்காய் - 1
ஏலப்பொடி - அரை ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - கால் கப்
சோடா உப்பு - அரை ஸ்பூன்
சீனி - முக்கால் கப்
உப்பு - ஒரு சிட்டிகை


 

பச்சரிசியை ஊற வைத்து இடித்து சலித்தெடுக்கவும். சலிக்கும்போது தங்கிய குருணை பெரும்பாலும் கஞ்சி காய்ச்ச சரியாக இருக்கும்.
அளவுப்படி குருணை போதவில்லையென்றால் மேலும் கொஞ்சம் பச்சரிசியை ரவையைப்போல உடைத்து குருணை தயாரித்துக்கொள்ளவும்.
இந்த குருணையில் 3, 4 டம்ளர்கள் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் நீர்க்க கஞ்சி காய்ச்சவும்.
இது ஆறியதும் அரிசிமாவில் சேர்த்து பிசைந்து வைக்கவும். இப்படி பிசைந்து வைக்கப்பட்ட மாவு கெட்டியாக இருக்க வேண்டும்.
காலையில் இந்த மாவில் மற்ற பொருள்களைச் சேர்த்து இட்லி மாவு பதத்துக்குக் கரைத்து இட்லித் தட்டுகளில் அல்லது எண்ணெய் தடவிய உயரம் குறைவான அகன்ற பாத்திரத்தில் ஊற்றி 15 நிமிடங்கள் வேக வைக்கவும்.
ஆறியதும் துண்டுகள் போடவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

திருமதி மனோ அவர்களுக்கு எப்படி இருக்கின்றீர்கள். தங்களின் விவிகா என்ற இந்த சுவையான குறிப்பை வாசிக்கும் பொழுது நான் என் ஆச்சியின் வீட்டில் டி வி மலையில் உண்ட இனிப்பும் அதன் செய்முறையும் நினைவிற்க்கு வந்தது. மீண்டும் மறப்பதற்க்கு முன்பே இங்கு இட்லி அல்வா வாக அதை பதித்து, அதன் பழங்கால செய்முறையை மறந்து போன மஃபின் என்ற தலைப்பில் எழுதி இருக்கின்றேன். தயவு செய்து அவற்றை பார்க்கும் படி கேட்டுக் கொள்கின்றேன். இவற்றை பகிர்ந்துக் கொள்ள நினைவூட்டிய தங்களூக்கு மிகவும் நன்றி.