ப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ்

தேதி: May 6, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

1
Average: 1 (1 vote)

 

ப்ரவுன் ரைஸ் - ஒரு கப்
டோஃபு - 100 கிராம்
துருவிய கோஸ் - ஒரு கப்
குடை மிளகாய் - பாதி
பெங்களூர் தக்காளி - 2
வெள்ளை வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
ஆலிவ் ஆயில் - அரை மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

டோஃபுவை சிறிய துண்டுகளாக நறுக்கி வெதுவெதுப்பான நீரில் போட்டு வைக்கவும். பெங்களூர் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ப்ரவுன் ரைஸைக் களைந்து குக்கரில் போட்டு மூன்றரை கப் தண்ணீர் ஊற்றி குறைந்தபட்சம் 12 விசில் வரும் வரை வைத்திருந்து இறக்கிவிடவும். ப்ரஷர் அடங்கியதும் திறந்து ஆற வைக்கவும்.
குடை மிளகாய், வெள்ளை வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் குடை மிளகாய் மற்றும் கோஸ் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்கு வதங்கியதும், டோஃபு மற்றும் தக்காளிச் சேர்த்து வதக்கவும். (தக்காளியைக் குழைய வதக்க வேண்டாம். லேசாக வதங்கினால் போதும்).
அதனுடன் ஆறவைத்த சாதம் மற்றும் உப்புச் சேர்த்து நன்கு கிளறி, மூடி வைத்து குறைந்த தணலில் 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
சுவையான, சத்தான ப்ரவுன் ரைஸ் டோஃபு புலாவ் தயார்.

டயட்டில் இருப்பவர்களுக்கு சத்தான, சுவையான உணவு இது.

ப்ரவுன் ரைஸ் வேக அதிக நேரம் எடுக்கும். அதனால் தண்ணீர் அதிகமாக ஊற்றி, அதிக விசில் வரும் வரை வைத்திருக்க வேண்டும். ப்ரவுன் பாஸ்மதி அரிசி என்றால் விசிலின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ளலாம். வேறு அரிசி என்றால் சற்று குழைவாக இருப்பது போல் இருக்கும். ஆறினால் சரியாக இருக்கும்.

இந்தப் புலாவில் அதிக உடல் எடை உள்ளவர்கள் இளைப்பதற்கு உதவி செய்யும் காய்களைச் சேர்த்துள்ளேன்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ப்ரவுன் ரைஸ் போஃபு புலாவ் சூப்பர், குறிப்பும் எளிமையாக உள்ளன, படங்களும் தெளிவாக உள்ளன.

எனக்கு ஏத்த டிஷ்சா தரீங்க நன்றி.ஆனா டோஃபு என்னன்னு தெரியலையே செல்விமா.

இந்த ரெசிப்பி சூப்பரா இருக்கு. டோபு என்ன? பனீரா? படத்தில் பார்க்க அப்படி இருக்கு.

யம்மி & ஹெல்தி புலாவ் அக்கா.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஹெல்தியான புலாவ், டோபு இங்க கிடைக்குமான்னு தெரியல செல்விம்மா. போட்டோஸ் ரொம்ப நல்லா இருக்கு கலர்புல்லா

அன்பு செல்வி மேடம்,

டயட்டுக்கு பொருத்தமான அருமையான குறிப்பு கொடுத்திருக்கீங்க. நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

டோபு அலர்ஜி, அதனால காய்கறிகள் மட்டுமே சேர்த்து அவசியம் செய்துப் பார்க்கிரேன் செல்வி மேடம்.

அருமையான குறிப்பு அக்கா தோஃபு வாங்கும் போது செய்து பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
கதீஜா

Pa

பார்க்க‌ அழகா இருக்கு...எளிமையாகவும் இருக்கு.......நன்றி செல்வி அக்கா.....டோஃபு நா என்ன‌ அக்கா

Anbudan,
Viji

அன்பு பாலபாரதி,
டயட்டுக்காக‌ செய்ததால், இதில் அதிகம் எதுவும் சேர்க்கவில்லை. படங்களுக்கு நன்றி என் கணவருக்கு:)

நன்றி பாலபாரதி!

அன்புடன்,
செல்வி.

அன்பு இனியா,
அப்படியா? டயட்டில் இருக்கீங்களோ? சோயா பனீர் தான் டோஃபு. கொலஸ்ட்ரால் இல்லாதது. புரோட்டீன் நிறைய‌ இருக்கு.

அன்புடன்,
செல்வி.

அன்பு காயத்ரி,
மிக்க‌ நன்றி. டோஃபு பனீர்தான். சோயா பனீர். பனீர் போலவே தான் இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
மிக்க நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

அன்பு உமா,
ஓ! டோஃபு அங்க‌ கிடைக்காதா? இங்கேயும் எப்போதாவது தான் கிடைக்கும். போட்டோஸ்:) நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு சீதாலஷ்மி,
உங்களுக்கு எதுக்கு டயட்டெல்லாம்? மிக்க‌ நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
சாதாரண‌ பனீர் சேர்த்து செய்யுங்க‌. அது கூட‌ சேராதா?
செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு கதீஜா,
இப்பல்லாம் ஃப்ரீ போல‌. குட்டிங்க‌ ஸ்கூல் போக‌ ஆரம்பிச்சிட்டாங்களா?
நன்றி கதீஜ்! செய்துட்டு சொல்லுப்பா. ஊருக்கு வந்தா போன் செய். அதே நம்பர் தான்.

அன்புடன்,
செல்வி.

அன்பு விஜி,
பாராட்டுக்கு நன்றி. சோயா பனீர் தான் டோஃபு. கிடைக்கலைன்னா, சாதா பனீர் சேர்க்கலாம்.அது கொஞ்சம் கிடைப்பது கஷ்டம் தான்.

அன்புடன்,
செல்வி.

பனீர் நல்ல சப்ஸ்டியூட் தான் மேடம், பனீர் சேர்க்கிரேன். சோயா கன்டன்ட் என்பதினாலே டோபு அலர்ஜி
நன்றி