பூசணிக்காய் பால் கூட்டு

தேதி: May 7, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

வெள்ளைப் பூசணிக்காய் - ஒரு பெரிய கீற்று (அ) 300 கிராம்
பாசிப்பருப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
தேங்காய் துருவல் - ஒரு பெரிய கப்
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 4
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் பொடி - கால் தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
கடுகு, உளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு ஆகியவற்றை நீளமாக நறுக்கி வைக்கவும். பூசணிக்காயை சுத்தம் செய்து சிறிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
பாசிப்பருப்பைக் குழைய விடாமல் மலர வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலை மிக்ஸியில் போட்டு, முதல் பால் தனியாகவும், இரண்டாம், மூன்றாம் பாலைத் தனியாகவும் எடுத்து வைக்கவும்.
நாண் ஸ்டிக் பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
அதனுடன் பூசணிக்காய் துண்டுகளைச் சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கவும்.
பூசணிக்காய் நன்றாக வதங்கியதும் இரண்டாம், மூன்றாம் தேங்காய்ப் பாலை ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும். காய் மிருதுவாக வெந்ததும் பாசிப்பருப்பு, மஞ்சள் பொடி மற்றும் உப்புச் சேர்த்து ஒரு கொதி வரவிடவும்.
கடைசியாக முதல் தேங்காய்ப் பாலைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.
சுவையான பூசணிக்காய் பால் கூட்டு தயார். குழம்பு சாதம், சாம்பார், ரச சாதத்திற்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

தொலைக்காட்சியில் பார்த்த ஒரு குறிப்பை, நான் சிறு மாற்றங்களுடன் செய்துள்ளேன்.

தேங்காய்ப் பாலுக்கு பதிலாக பாக்கெட் பால் அல்லது பசும்பால் சேர்த்தும் செய்யலாம். புடலங்காய், சுரைக்காய் போன்ற நீர்க் காய்களில் இந்த பால் கூட்டைச் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பூசணிக்காய் பால் கூட்டு அருமையாக உள்ளது. பார்த்தவுடனே சாப்பிடனும் போல இருக்கு.

அன்பு பாலபாரதி,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

சீதாம்மா கூட்டு சூப்பர், கூட்டுனா ரொம்ப பிடிக்கும். இப்போ வெயிலுக்கு குழம்புலாம் சாப்பிடவே பிடிக்கல இப்படி கூட்டு வகைகள் தான் அதிகமா செய்றேன். இந்த கூட்டும் முயற்சி செய்றேன் மா

அன்பு உமாகுணா,

கரெக்ட்தான், அடிக்கிற வெயிலுக்கு குழம்பு டேஸ்ட் பிடிக்க மாட்டேங்குது.

இந்தக் கூட்டில் தேங்காய்ப் பால் சேர்த்திருப்பதால், குழந்தைகளுக்கு சாதத்துடன் கூட்டு சேர்த்துப் பிசைந்து கொடுக்கலாம்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

நானும் சுரைக்காயில் செய்துள்ளேன் சீதா மேடம். இதற்க்கு தக்காளி சேர்க்கத் தேவையில்லையா ?

பால் கூட்டு சூப்பர் சீதாம்மா. கடைசி படம் பார்க்கும்போது ஆசையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வெள்ளை பூசனிக்காய்னா,தடியங்காய்தானே.குறிப்பு சூப்பர் சீதாமா.

அன்பு வாணி,

தக்காளி சேர்க்க வேணாம், வெங்காயம், பச்சை மிளகாய் வதங்கிய வாசனையுடன், தேங்காய்ப் பால் இனிப்புடன் இருக்கும்.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு உமா,

பதிவுக்கும் பாராட்டுக்கும் மிகவும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு இனியா,

நாங்களும் தடியங்காய்னுதான் சொல்வோம்.

பதிவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

அன்புடன்

சீதாலஷ்மி

அன்பு சீதாலஷ்மி,
பால் கூட்டு சூப்பரா இருக்கு. வெய்யிலுக்கு ஏற்ற‌ குறிப்பு.

அன்புடன்,
செல்வி.

ஆஹா .சுவையான‌ மணமான‌ சம்மர் கலக்ஷன். சூப்ப்பர்

Be simple be sample

செய்தாச்சு இன்னைக்கு காலையிலயே. அவருக்கு கொடுத்து அனுப்பிருக்கேன். நான் இன்னும் சாப்பிடல, டேஸ்ட் பார்த்தவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு சீதா... சிம்பிள் சூப்பர் ரெசிபி. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி, அன்பு ரேவதி,

வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

தேங்காய்ப் பால் சேர்த்து செய்கிற இந்த கூட்டு, வெயில் காலத்துக்கு ஏற்றது.

அன்புடன்

சீதாலஷ்மி