தக்காளி சாதம்

தேதி: December 15, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (4 votes)

 

அரிசி - 2 1/2 கப்
தக்காளி - அரை கிலோ
பெரிய வெங்காயம் - ஒன்று (நடுத்தரமானது)
இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக்கரண்டி
பீன்ஸ் - 4
பச்சை மிளகாய் - 2
தனி மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
தேங்காய் பால் - கால் கப்
காரட் - ஒன்று
கரம் மசாலா தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரைத் தேக்கரண்டி
கல் உப்பு - ஒன்றரை மேசைக்கரண்டி
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை - பத்து இலைகள்
கொத்தமல்லி - சிறிதளவு


 

பீன்ஸை துண்டுகளாக நறுக்கவும். தக்காளி, காரட் இரண்டையும் சிறு சிறுத் துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, கரம் மசாலாத்தூள் போடவும்.
அத்துடன் நறுக்கின வெங்காயம், பீன்ஸ், போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது போட்டு 2 நிமிடம் வாசனை போகும் வரை வதக்கவும்.
அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தக்காளி போட்டு வதக்கவும். தக்காளியை மசித்து விடவும்.
பின்னர் அதில் 5 கப் தண்ணீர் மற்றும் கால் கப் தேங்காய் பால் ஊற்றி வேக விடவும். உப்பு சேர்க்கவும்.
கொதித்து ஆரம்பித்ததும் அரிசியை களைந்து போடவும்.
குக்கரை மூடி வைத்து வெயிட் போட்டு வேகவிடவும்.
இரண்டு விசில் வந்ததும் இறக்கி சிறிது எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சற்று கிளறி விடவும். சிறிது கொத்தமல்லித் தழை தூவி பரிமாறவும். தக்காளி சாதம் பொலபொலவென்று இருக்க வேண்டும். குழைந்துவிடக் கூடாது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

திரு அட்மின் அவர்களுக்கு, தக்காளி சாதம் குறிப்பில் வெங்காயம் எவ்வளவு சேர்க்கவேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. உத்தேசமாக ஒரு பெரிய சிவப்பு வெங்காயத்தைச் சேர்த்து செய்தேன். சுவையாக இருந்தது. ஆனால் இன்னும் சுவையாக இருக்க சரியான அளவைக் குறிப்பிடும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி.

தவறினை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. யாரும் சமைக்கலாமில் இடம்பெறும் குறிப்புகள் சந்தேகத்திற்கு இடம் அளிக்காவண்ணம் இருக்கவேண்டும் என்பதுதான் எங்களின் நோக்கம். சிலசமயம் தவறுகள் நேர்ந்துவிடுகின்றது. அதனை சரிசெய்துகொள்ள வாய்ப்பளிக்கும் உங்களைப் போன்றவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். விடுபட்ட அளவு சேர்க்கப்பட்டுவிட்டது.

திரு அட்மின் அவர்களுக்கு, விடுபட்ட பொருட்களை உடனே சரி செய்ததற்க்கு மிக்க நன்றி.

மிக மிக அவசரமாக இன்று காலையில் வேலைக்கு செல்லும் என் கணவர்க்கு காலை சிற்றுண்டியாக செய்து கொடுத்துள்ளேன் மிக்க நண்றி அறுசுவைக்கு கணவரின் தொலைபேசிக்கு பிறகு சமையல் எப்படி உள்ளது என அடுத்து செல்கின்றேன்

திரு அட்மின் அவர்களுக்கு, இந்த குறிப்பில் 2 1/2 கப் அரிசி என்றால் எவ்வளவு கிராம் அரிசி என்று சொல்லுங்கள் , ப்ளிஸ்

for mo rice KULachu pooguthu what to do please help

தக்காளி சாதம்
டம்ளர் இல்லை என்றால் அழாக்கு கணக்கு வைத்து கொள்ளுங்கள்.
இரண்டறை டம்ளர் (அ) இரண்டறை ஆழாக்கு என்றால் அரைகிலோ அரிசி (ஐநூறு கிராம்)
குழையாமல் இருக்க பத்து நிமிடம் ஊறவையுங்கள். பச்சரிசி என்றால் கொதிக்கும் போது அரிசியை போட்டால் எப்படியும் ஏழு நிமிடத்தில் வெந்து விடும். அரிசி போட்டு கொதிக்கும் போது ஒரு தேக்கரன்டி எண்ணை விடுங்கள்.
ஜலீலா

Jaleelakamal

தக்காளி சாதம்
1. குக்கரி வைப்பதாக இருந்தால் ஒன்றுக்கு இரண்டு கப் ஊற்றி மூடி போடாமல் வெளிய்லேயே கொதிக்க்விட்டுகொஞ்சம் தண்ணீர் வற்றி வரும் போது மூடி போட்டு முன்றாவது விசில் வரு போது தீயை அனைக்கவும்.
2. இல்லை கரைட்டாக தண்ணிர் வைப்பதாக இருந்தால் ஒன்றுக்கு ஒன்னறை டம்ளர் தண்ணீர் ஊற்றவும்.குக்கர் களைந்து போட்டு உடனே முடிவிடலாம். மூன்று விசில் வந்ததும் இரக்கவும்.
ஜலீலா

Jaleelakamal

மிகவும் நன்றாக இருந்தது
சீக்கிரமாகவும் செய்யலாம்
மிகவும் நன்றி