hi frnds..

உதிரபோக்கு நிக்க என்ன சாப்பிட வேண்டும் தோழிகளே கை மருந்து இருக்கா..? pls reply pannunga pa. enga akkavuku athigamana uthirapokku iruku pa.

உங்க அக்காவுக்கு வயது என்னங்க? உதிர போக்கு அதிகமாயிருக்க காரணம் என்னவென்று தெரியுமா? கருப்பை ஸ்கேன் எடுத்துப் பார்த்தீர்களா? ஏன் கேட்கிறேனென்றால் மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிந்திருந்தால் மட்டுமே மருத்துவர்களாலே தீர்வு சொல்ல முடியும். எதற்க்கும் உங்கள் அக்காவை ஒருமுறை டாக்டரைப் பார்த்து பரிசோதனை செய்து கொள்ளச் சொல்லுங்கள்.

என் அக்கா வயது 27.திருமணம் முடிந்து 6 வருடம் முடிய போகுது இன்னும் குழந்தை இல்ல தோழி. அவளுக்கு மாதவிலக்கு சரியா தன் வரும். 3 மாதமாக வரல pregnency test negative vanthathu pa. last friday vairu clean panni irukkanga pa avalukku. kastama iruku doctor saturday vara solli irukkanga pa. pls quick ah reply pannunga pa.

Muthumari

அவளுக்கு மாதவிலக்கு 17 நாளா இருக்கு இன்னும் நிக்கல தோழி. நிக்க என்ன சாப்பிடனும். தெரிந்தவர்கள் சொல்லுங்க friends quick ah reply pannunga friends....plsss...

Muthumari

ஏற்கனவே டாக்டரிடம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாங்க.
எபோதுமே ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் தோழி, அதாவது உதிரப் போக்கை ஏற்ப்படுத்தும் காரணியைத்தான் கண்டு பிடித்து அதற்க்கு தீர்வு காண வேண்டும், அப்படி தீர்வு கண்டு அதற்க்கு மருத்துவம் பார்த்தாலே இரத்தப் போக்கு நின்று விடும். (உதாரணமாக) வயிற்றுப் போக்கு என்று வைத்துக் கொள்ளுங்கள், அதை உண்டாக்கும் பாக்டீரியாவை கொல்வதற்க்குத்தான் மருந்து கொடுப்பார்கள். அந்த கிருமி அழிந்தாலே வயிற்றுப் போக்கு சரியாகி விடும்.

அதே போன்றுதான் இதுவும். உங்கள் சகோதரிக்கு ஏற்கனவே கருதரிப்பதில் தாமதம் ஏற்ப்படுகிறது, இதில் வீட்டு வைத்தியம் என்று எதையும் சாப்பிட்டு பின் விளைவுகளை உண்டு பண்ணினால் என்ன செய்வது. அவர்களை உடனே மருத்துவரைப் பார்க்கச் சொல்லுங்கள். அதிக இரத்தப் போக்கினால் பெலனிழப்பதோடு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவும் குறைய வாய்ப்புள்ளது. அவர்களுக்கு என்ன பிரச்சனையினால் வயிற்றை கிளீன் பண்ணினார்கள் என்பது அவர்களின் மருத்துவருக்குத்தான் தெரியும். குழந்தைக்காக காத்திருப்பவர்கள் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு கண்டதையும் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

அன்பு முத்துமாரி,
டாகடரை பார்க்கப் போகுமுன் கை வைத்தியம் தேவை என்றால், ரஸ்தாளி வாழைப்பழத்தை துண்டாக்கி, பொட்டுக்கடலைத் தூளில் தொட்டு சாப்பிடலாம். பழம் கிடைக்கலைன்னாலும் வெறும் பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி அளவு சாப்பிட‌ கொஞ்சம் பலன் கிடைக்கும். ஆனால், உடனே டாக்டரைப் பாருங்கள்.

அன்புடன்,
செல்வி.

உங்க பதிலுக்கு மிக்க நன்றி தோழிகளெ.. டாக்டர் சனிக்கிழமை வர சொல்லி இருக்காங்க தோழி. பழம்&பொட்டுகடலை சாப்பிட சொல்லுகிறேன் தோழி.. thank u friends........

Muthumari

மேலும் சில பதிவுகள்