கருப்பட்டி பணியாரம்

தேதி: May 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (4 votes)

 

பச்சரிசி - ஒரு கப்
பொடி செய்த கருப்பட்டி - அரை கப்
வாழைப்பழம் - ஒன்று
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
பச்சரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பழத்தை மசித்துக் கொள்ளவும்.
அரைத்த மாவுடன் வாழைப்பழம், கருப்பட்டிப் பொடி மற்றும் உப்புச் சேர்த்து கலந்து வைக்கவும்.
இந்த மாவுக் கலவை தோசை மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு குழி கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயின் நடுவில் ஊற்ற வேண்டும்.
மெதுவாக ஓரங்களில் வெந்து மேலே எழும்பியதும் பூரி போன்று உப்பலாகி வரும்.
உப்பலாக வந்ததும் மறுபக்கம் திருப்பிப் போட்டு, வெந்தவுடன் எண்ணெயை வடியவிட்டு எடுக்கவும்.
சுவையான கருப்பட்டி பணியாரம் தயார். ஓரங்களில் மொறுமொறுப்பாகவும், நடுவில் மென்மையாகவும் இருக்கும்.

வாழைப்பழம் சேர்ப்பதால் இந்த மாவை புளிக்க வைக்கத் தேவையில்லை. மாவு கலவை மிகவும் நீர்க்க இருந்தால் அதிகமாக எண்ணெயைக் குடிக்கும்.

எங்கள் கிராமத்தில் பண்டிகைகளுக்கு இந்த பணியாரம் செய்வதுண்டு.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கருப்பட்டி பணியாரம் சூப்பர் நாந்தான் ஃபர்ஸ்ட் எனக்கு முதல்ல குடுத்துருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

கருப்பட்டி பணியாரம் சூப்பர் பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு. வாழைப்பழம் சேர்ப்பதால் உப்பலாக இருக்குமா வனி.

சூப்பர்.. எனக்கு வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் வெல்லம்,கருப்பட்டி, நாட்டு சர்க்கரையில் செய்யும் எல்லா இனிப்புக்களும் விருப்பம். அவசியம் செய்து பர்க்கிறேன்.. கலக்கல்..

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

வாணி நல்லாருக்கு எங்கள் ஊரில் கொஞ்சம் புழுங்கலரியும்,உளுந்தும் சேப்பாங்க.இப்ப்டியும் செய்து பாக்கிரேன்.வாழ்த்துக்கள்.

சூப்பரா இருக்குது பணியாரம்... ஈஸீ கூட... செய்து பார்க்கிறேன்

கெஸ்ட் வந்திருக்காங்கன்னு நேத்து இந்த பணியாரம் செய்தேன் நல்லா இருந்துச்சு வாணி, ஈஸியா உடனே செய்துட்டேன் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது. நன்றி வாணி

அன்பு வாணி,

விசேஷங்களுக்கும் விருந்துக்கும் செய்யக் கூடிய அருமையான குறிப்பு. நல்லா இருக்கு.

அன்புடன்

சீதாலஷ்மி

உங்களுக்கு இல்லாததா? நீங்களே எடுத்துக்கோங்க உமா, நன்றி

ஆமாம் பாலபாரதி வாழைப்பழம் நன்கு பழுத்திருந்தால் நன்றாக உப்பிவரும். நன்றி

வருகைக்கும், பதிவிற்க்கும் நன்றி ரம்யா

நீங்கள் சொல்லும் முறையையும் கேள்விப் பட்டிருக்கேன் இனியா. நன்றி

ஆமாம் பிரியா, ரோம்ப ஈசியா செய்துடலாம்

மிக்க மகிழ்ச்சி. செய்துப் பார்த்து பின்னூட்டம் கொடுத்ததற்க்கு மிக்க நன்றி தேவி.

வருகைக்கும், பதிவிற்க்கும் மிக்க நன்றி சீதா மேடம்.

அன்பு வாணி,
நாங்க‌ புழுங்கலரிசி அரைத்து செய்வோம். இது வித்தியாசமாக‌ இருக்கு. இனிப்புன்னா மட்டும் செய்ய‌ கொஞ்சம் யோசிப்பேன் வாணி:(

அன்புடன்,
செல்வி.

பணியாரம் ரொம்ப அழகா வட்ட வட்டமா இருக்கு. பாக்கும் போதே சாப்பிட தோணுது. கண்டிப்பா செஞ்சு பாத்துருவோம்.

யம்மி... பார்த்ததும் என்னடா அதிரசம் வித்தியாசமா தெரியுதுன்னு நினைச்சேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா