சிக்கன் சாஸேஜ் சாலட்

தேதி: May 13, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் சாஸேஜ் - 4
செலரி - ஒரு கைப்பிடி
குடைமிளகாய் - ஒன்று
முட்டைக்கோஸ் - கால் கிலோ
தக்காளி - 2
சுக்கினிக்காய் - பாதி
லீக்ஸ் - ஒரு தண்டு
லெட்டூஸ் - பாதி
மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் - அரை தேக்கரண்டி (தைம், ரோஸ்மேரி)
சாலட் டிரஸ்ஸிங் - 2 மேசைக்கரண்டி (அ) உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை மெல்லியதாக துருவி வைக்கவும். தக்காளி, குடைமிளகாய், சுக்கினி, லீக்ஸ், செலரி மற்றும் லெட்டூஸ் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சிக்கன் சாஸேஜை 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். (ஓவனில் வேக வைப்பதாக இருந்தால் 3 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்).
சிக்கன் சாஸேஜுடன் நறுக்கிய காய்கறிகளைச் சேர்ந்து கலந்து, சாலட் டிரஸ்ஸிங் மற்றும் மிக்ஸ்டு ஹெர்ப்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அல்லது சிக்கன் சாஸேஜுடன் நறுக்கிய காய்கறிகள், உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
சுவையான சிக்கன் சாஸேஜ் தயார்.

டயட்டில் இருப்பவர்களுக்கான சத்தான சாலட் இது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சாலட் அருமை அக்கா. இதில் எல்லா பொருளும் கண்டிப்பா சேர்க்கனுமா?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சாலட் சூப்பர்செல்விமா

நமக்கு பிரசர்வேட்டிவ் ஒத்துக்கிறதுல்ல என்பதால சாசேஜ் வாங்கிறதில்லை, ஆனால் ஸ்டீம்ட் சிக்கனில் இது போன்று செய்துப் பார்க்கிறேன். இதுவும் ஹெல்த்தி குறிப்புதான்.

சாலட் சூப்பர்... சிக்கன் சாசேஜ்னா என்ன அக்கா

சிக்கன் சாஸேஜ் சூப்பர்,

சாலட் ப்ளூ பெளலில் பார்க்க நல்லா இருக்கு, சாஸேஜ் னா என்ன செல்வி மேடம்.

அன்பு உமா,
எல்லாப் பொருட்களும் சேர்க்க‌ வேண்டிய‌ அவசியம் இல்லை. எது கிடைக்குதோ, எது பிடிக்குதோ அதை சேர்த்தால் போதும். நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

அன்பு இனியா,

பதிவிற்கும், பாராட்டிற்கும் நன்றி!

அன்புடன்,
செல்வி.

அன்பு வாணி,
ஸ்டீம்டு சிக்கனிலும் செய்யலாம். சிக்கன் சேர்க்காமல் வெஜ் மட்டும் வைத்தும் செய்யலாம். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

அன்பு பிரியா,
மிக்க‌ நன்றி! சாசேஜ் என்பது அரைத்த‌ சிக்கனை ரோல் மாதிரி செய்து பேக் செய்திருப்பார்கள். அது கிடைக்கலைன்னா, சிக்கனை எலும்பு இல்லாமல் ஆவியில் வேக‌ வைத்து உதிர்த்து சேர்க்கலாம்.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
பாராட்டிற்கும், பதிவிற்கும் நன்றி.

அன்புடன்,
செல்வி.

அன்பு தேவி,
நேரம் இருந்தால் மட்டுமே இப்படி எல்லாம் வைத்து போட்டோ எடுக்க‌ முடியும்:) நிறைய‌ நேரம் ஆபீஸ் போகும் அவசரத்தில் எடுப்பதால், பேக் செய்யும் டப்பாவோடு போட்டோ எடுத்து விடுவேன்.

சாஸேஜ் என்பது அரைத்த‌ சிக்கனை ரோல் செய்து வைத்திருப்பது தான். சில‌ வகைகளில் அதில் வேறு ஏதும் கூட‌ சேர்த்திருப்பார்கள்.

அன்புடன்,
செல்வி.

சாலட் நல்லாஇருக்கு,செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
மிக்க‌ நன்றி. செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

நல்லா இருக்குங்க... சாஸேஜ் போன்ற வகை எல்லாம் வாங்குவதில்லை, வேக வைத்த சிக்கனில் செய்து பார்க்கிறேன். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு வனி,
நானும் எப்போதாவது வாங்குவேன். வேக‌ வைத்த‌ சிக்கனிலும் நல்லா இருக்கும். செய்து பாருங்க‌ வனி.

அன்புடன்,
செல்வி.