நெத்திலி கருவாடு பொரியல்

தேதி: May 14, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.8 (4 votes)

 

நெத்திலி கருவாடு - ஒரு கப்
நீளமாக நறுக்கிய வெங்காயம் - ஒன்றரை கப்
நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் - 10
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, எண்ணெய்
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்து வைக்கவும்.
நெத்திலி கருவாடை அரை மணி நேரம் ஊற வைத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய், நெத்திலி கருவாடு, மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வெந்து, சுருண்டு வரும் போது அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.
சுவையான நெத்திலி கருவாடு பொரியல் தயார்.

இந்த பொரியலில் சின்ன வெங்காயம் சேர்த்தால் அதிகச் சுவையாக இருக்கும். இதே முறையில் சாளைக் கருவாட்டிலும் செய்யலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வாணி சூப்பரா பண்ணிருக்கீங்க.வாசனைதூக்குதுங்க அம்மாசின்னவெங்காயம் சேத்துசெய்வாங்க.

நெத்திலி கருவாடு பொரியல் சூப்பர், மஞ்சள் தூள் பதிலாக மிளகாய் தூள் சேர்க்கலாம.

பொரியல் சூப்பர் வாணி. பார்க்க வாயூறுது. இதுதான் நீங்க சொன்ன நெத்திலி பொரியலா? ட்ரை பண்ணிட்டு சொல்றேன்.

பச்சைமிளகாய் அதிகம் சேர்த்துருக்கதால மிளகாய்த்தூள் தேவைப்படாதுன்னு நினைக்கிறேன் பாரதி. அப்படித்தானே வாணி?

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆமாம் இனியா, சின்ன வெங்காயம் சேர்த்தால் அதன் ருசியே தனிதான். நன்றி

மஞ்சள் தூள் அவசியம் சேர்கணும் பாலபாரதி, உமா சொன்னது (நன்றி உமா) போன்றுதான் பச்சை மிளகாய் சேர்த்திருப்பதினால் மிளகாய்த்தூள் சேர்க்க வேண்டாம்.மிளகாய்க்குப் பதில் வேண்டுமானால் தூள் சேர்க்கலாம்.
நன்றி

ஆமாம் உமா, இதைத்தான் சொன்னேன். செய்துப் பார்த்து விட்டு சொல்லுங்க.
எனக்கு இன்னும் சென்னா குன்னி கிடைக்கவே இல்லை. கடைக்கு போகும் போதெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். அடுத்த முறை லண்டன் போகும் போது வாங்கி வரணும்.

அன்பு வாணி,
கருவாடு பத்தி சுத்தமாக எனக்கு எதுவுமே தெரியாது. அதனால் :)

அன்புடன்,
செல்வி.

:)))

இவ்வளவு நிறைய‌ வெங்காயம் சேர்த்து செய்ததில்லை,செய்து பார்க்கிறேன்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

சூப்பர் வானி மேடம்

வாவ்... சூப்பர், இந்த கருவாடு எனக்கு பிடிக்கும், கொஞ்ச நாளா நல்லா கிடைக்கல, கிடைக்கும் போது கட்டாயம் செய்துட்டு சொல்றேன் :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று செய்தேன் வாணி நல்லாருந்தது. நான் இதுவரை இப்படி செய்ததில்லை. மிளகாய்தூள் சேர்த்துதான் செய்வேன். பச்சை மிளகாய் மட்டும் சேர்த்து செய்தது வித்தியாசமா இருந்தது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா