கோலா உருண்டை குழம்பு

தேதி: May 15, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.5 (2 votes)

 

மட்டன் கைமா - 150 கிராம்
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு மேசைக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
பட்டை, ஏலக்காய், கிராம்பு - தலா ஒன்று
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 2 தேக்கரண்டி
தனியாத் தூள் - 2 தேக்கரண்டி
பொட்டுக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
ப்ரெட் க்ரம்ஸ் - ஒரு மேசைக்கரண்டி
தேங்காய்ப்பூ - 2 மேசைக்கரண்டி
டொமேட்டோ ப்யூரி - ஒரு தேக்கரண்டி (விரும்பினால்)
தயிர் - கால் கப்
எண்ணெய் - தேவையான அளவு
புதினா, கொத்தமல்லித் தழை - சிறிது
உப்பு - தேவையான அளவு


 

மிக்ஸியில் நறுக்கிய ஒரு வெங்காயத்துடன் 2 பச்சை மிளகாய், தேங்காய்ப் பூ மற்றும் பொட்டுக்கடலை சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். அரைத்தவற்றுடன் மட்டன் கைமா, ப்ரெட் க்ரம்ஸ், ஒரு தேக்கரண்டி கரம் மசாலா தூள், கால் தேக்கரண்டி மஞ்சள் தூள், ஒரு தேக்கரண்டி மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு மற்றும் ஏலக்காய் தாளித்து வாசனை வந்தவுடன் மீதமுள்ள வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வதங்கியதும் மீதமுள்ள பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு விழுது, சோம்பு தூள், மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
அனைத்தும் வதங்கியதும் நறுக்கிய தக்காளி மற்றும் டொமேட்டோ ப்யூரி சேர்க்கவும்.
பிறகு தயிர் மற்றும் மீதமுள்ள தூள் வகைகள் சேர்த்து வதக்கவும்.
அதனுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி புதினா, கொத்தமல்லித் தழை மற்றும் உப்புச் சேர்த்து கொதிக்கவிடவும். குழம்பு நன்கு கொதித்ததும் மட்டன் உருண்டைகளைப் போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து 20 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும்.
சுவையான மட்டன் கோலா உருண்டை குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கோலா உருண்டை குழம்பு சூப்பர் முசி, நான் செய்ததே இல்லை. கண்டிப்பாக போட்டு கடலை சேர்க்கணுமா? கடையில் பொட்டுக் கடலை தேடிப் பார்க்கணும்.

சூப்பர்.பாக்கவே கலர்புலா இருக்கே முசி

அஸ்ஸலாமு அலைக்கும் முசி. உங்கள் ரெசிபி சூப்பர் மா. ரொம்ப கலர்ஃபுல்லா இருக்கு.

குறிப்பை வெளியிட்ட‌ அறுசுவை மற்றும் டீமிர்க்கு நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிர்க்கு நன்றி.செய்து பாருங்க‌,பொட்டு கடலைக்கு பதில் டொமேட்டோ ப்பியூரி அல்லது பிரட் கிரம்சை சேர்த்து கொள்ளுங்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மிக்க‌ நன்றி,இனியா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

வ‌ அலைக்கும் சலாம்,பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி.நாஜிரா.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி,
கோலா உருண்டை குழம்பு பார்க்கவே சூப்பரா இருக்கு!

அன்புடன்,
செல்வி.

சிம்பிள் & சூப்பர் கோலா உருண்டை குழம்பு முசி. நல்லாருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

முசி அருமையான கோலா உருண்டை குழம்பு சூப்பர், பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு, நல்ல கலர்புல்லா இருக்கு.
எங்க வீட்ல கோலா உருண்டை பொரிச்சு வச்சிடுவாங்க. இந்த மாதிரி குழம்பு செய்தது இல்லை இனி மேல் இந்த மாதிரி குழம்பு செய்து பார்க்கிறேன்.

முன்பு எப்போதோ சுவா இது போல ஒரு குறிப்பு கொடுத்த நினைவு... செய்ய ஆசை. கலர்ஃபுலா இருக்கு பார்க்கவே. இதுவரை செய்ததில்லை, கட்டாயம் ட்ரை பண்றேன் முசி. அழகா இருக்கு கடைசி படம். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப‌ நன்றி,செல்வியக்கா.
மிக்க‌ நன்றி,உமா.
அவசியம் செய்து பாருங்க‌,பாலா.(பாலா என்று அழைக்கலாம் தானே?.
நேரம் கிடைக்கும் போது செய்து பாருங்க‌.நன்றி வனி

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.