உருளைக்கிழங்கு காரக் கறி

தேதி: May 17, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.7 (3 votes)

 

உருளைக்கிழங்கு - 3
வெங்காயம் - 2
தக்காளி - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
பூண்டு - 4 பல்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 தேக்கரண்டி


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து நறுக்கிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பிறகு உருளைக்கிழங்கு, மிளகாய் தூள் மற்றும் உப்புச் சேர்த்து பிரட்டவும். நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு காரக் கறி தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அன்பு நித்யா,

எல்லோருக்கும் விருப்பமாக இருக்கக்கூடிய சுவையான குறிப்பைத் தந்திருக்கீங்க, பாராட்டுக்கள்.

அன்புடன்

சீதாலஷ்மி

நித்யா வெங்காயம் தக்காளிலாம் சேர்த்து செய்தது கிடையாது தோழிகள் சொல்வாங்க‌ ஆனா உங்க குறிப்ப‌ பார்த்ததும் முயற்சி செய்யலாமே தோணுது. ஈஸி குறிப்பு

நித்யா பார்க்க ரொம்ப நல்லா இருக்கு செய்து பார்க்கிறேன்.

Hai nithya iam new to arusuvai. Ennaum unga frend a sethukonga. Ithe potatova onion tomato sekkama oil
potu kaduku thaluchu oil la salt sambar podi sethu kelari udane cut panna potato sethu nalla kelari sim vachu
fry panavum. First potato va veka pochu nala cut panikonga.adupa simla vachu kelari vitu vitu irunga. Sambar
thool konja sethu potunga. Curd sapatuki soopara irukum

குறிப்பு வெளியிட்ட அட்மினுக்கு நன்றி..

சீதா அம்மா பதிவிற்க்கு மிக்க நன்றி...

தேவி செய்து பாருங்க நல்லா இருக்கும்.

நன்றி அமுதா செய்து பாருங்க.

ராஜேஸ்வரி இங்கு அனைவரும் தோழிகள் தான்.
உங்கள் பதிவு தமிழ்ல இருந்தா படிக்க சுலபமாக இருக்கும்.நீங்கள் சொல்லும் முரையில்லும் நான் செய்வதுன்டு.

வாவ் சூப்பர்.வாழ்த்துகள் நித்யா

Sorry. Tamil l type seiya theriyavilai. Mantrathiku puthithu kandipa palakikaren manikavum

அன்பு நித்யா,
நான் வேக‌ வைக்காமல் நறுக்கி, செய்வேன். நல்லா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

இந்த பக்கத்தின் கீழே தமிழ் எழுத்துதவினு இருக்கும் அதில் போய் டைப் பன்னுங்கள்

நானும் இப்படி செய்வேன் நித்யா. தக்காளி கொஞ்சம் குறைவா சேர்ப்பேன். ரொட்டியோட சாப்பிட அருமையா இருக்கும். உங்க மீன் மக்ரோனி செய்தேன் அருமையா இருந்தது. நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர். வேக வைத்து இப்படி செய்யும் போது மசாலா கிழங்கில் நல்லா ஊறவும் செய்யும், உருளையும் ஒன்னு போல கலந்து மசாலாவோட சேர்ந்து சுவை தரும். சப்பாத்திக்கு சூப்பர் ஜோடிங்க. எனக்கு ரொம்ப பிடிக்கும். சூப்பர் கு்றிப்பு நித்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா