துனிசியா ஆம்லெட் கேக்

தேதி: May 19, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

சிக்கன் சாஸேஜ் (அ) வேகவைத்த கோழி - சிறிது
வெங்காயம் - 2
உருளைக்கிழங்கு - 3
குடைமிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - 2
முட்டை - 4
மிளகுத் தூள் - ஒரு தேக்கரண்டி
துருவிய சீஸ் - ஒரு கப்
பார்ஸ்லே கீரை (அ) கொத்தமல்லித் தழை - கைப்பிடி அளவு
காய்ந்த ப்ரெட் (அ) ப்ரெட் க்ரெம்ஸ் - அரை கப்
பேக்கிங் பவுடர் - கால் தேக்கரண்டி
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

வெங்காயம், உருளைக்கிழங்கு, குடைமிளகாய் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு நறுக்கிய காய்கறிகளை தனித்தனியாக அரை பதமாக வதக்கிக் வைக்கவும்.
காய்ந்த ப்ரெட்டை பொடி செய்து கொள்ளவும்.
வதக்கிய காய்கறிகளுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்க்கவும்.
அத்துடன் சிக்கன் சாஸேஜை சேர்க்கவும்.
பிறகு துருவிய பார்ஸ்லே கீரை மற்றும் துருவிய சீஸ் சேர்த்து, முட்டையை உடைத்து ஊற்றி பேக்கிங் பவுடர் மற்றும் ப்ரெட் தூள் சேர்த்து அனைத்தும் ஒன்றாகச் சேரும்படி கலக்கவும்.
கேக் ட்ரேயில் சிறிது எண்ணெய் தடவி, முட்டை கலவையை ஊற்றி 180 டிகிரியில் 20 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சுவையான துனிசியா ஆம்லெட் கேக் தயார். துண்டுகள் போட்டு பரிமாறவும்.

துனிசியர்கள் செய்யும் பிரபலமான உணவு இது.

ஓவன் இல்லாதவர்கள் இந்த கேக் கலவையை நாண் ஸ்டிக் பாத்திரத்தில் ஊற்றி, சிறு தீயில் வேக வைத்து ஒரு புறம் வெந்ததும் ஒரு தட்டில் தலை கீழாகக் கவிழ்த்து மீண்டும் அதே நாண் ஸ்டிக் பாத்திரத்தில் வைத்து வேக வைத்து துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

ஆம்லெட் கேக் சூப்பர். நல்ல கலர்புல்லா இருக்கு, ப்ரெட் தூள் சேர்த்து வித்தியாசமாக உள்ளது.

அன்பு முசி,
காரம், டைமிங் எல்லாம் ஓகே. மைதா இல்லை என்பது பிளஸ்.
உருளைக்கிழங்கும், சீஸும் அவசியமா? அதற்கு மாற்றுப் பொருட்கள் உண்டா?
அவருக்கு செய்து கொடுக்க‌ ஆசை. சொல்லுங்களேன்.

அன்புடன்,
செல்வி.

குறிப்பை வெளியிட்ட‌ அட்மின் மற்றும் குழுவிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

முதல் பதிவிற்க்கும்,பாராட்டிர்க்கும் மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மெயின் இன்கிரிடியன்ட்டே உருளைகிழங்கும்,சீஸும் தான்.சேர்த்தால் தான் இந்த‌ அளவு மொத்தமாக‌ இருக்கும்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

அன்பு முசி. உங்க ஆம்லேட் கேக் மிகவும் வித்யாசமா இருக்கு மா. அடுத்து அடுத்து நல்ல குறிப்புகள் தந்து அசத்துரிங்க மாஷா அல்லா. வாழ்த்துக்கள்.

வித்தியாசமான கலர்ஃபுல் குறிப்பு. சூப்பர் முசி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நான் மஃபின் செய்திருக்கேன் ஆனா பால் சேர்ப்பேன். இது வித்தியாசமா அருமையாவும் இருக்கு, அவசியம் ட்ரை பண்றேன் முசி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அன்பு முசி,
அப்படியா? கொஞ்சம் யோசிக்கணும். மகன் அனுமதித்தால் செய்துட்டு சொல்றேன்

அன்புடன்,
செல்வி.

பாராட்டிர்க்கு மிக்க‌ நன்றி,நல்ல‌ குறிப்புகள் தர‌ முயர்ச்சி செய்கிரறேன்.இன்ஷா அல்லாஹ்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

மறக்காமல் பதிவிடும் உங்க‌ அன்பிர்க்கு மிக்க‌ நன்றி.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

நன்றி வனி,செய்து பார்த்து சொல்லுங்க.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.