கச்சோடி

தேதி: March 30, 2006

பரிமாறும் அளவு: 70 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 4 (1 vote)

 

மைதா - ஒரு கிலோ
பாசிப்பருப்பு - கால் கிலோ
டால்டா - 300 கிராம்
மிளகாய் தூள் - 50 கிராம்
மல்லித்தூள் - 10 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
கரம்மசாலா பொடி - ஒரு தேக்கரண்டி
சோம்பு பொடி - ஒரு தேக்கரண்டி
மல்லிக்கீரை - சிறு கட்டு
சோடா உப்பு - ஒரு தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
எண்ணெய் - 2 கிலோ


 

பாசிப்பருப்பை தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அதை நன்றாக வடிகட்டி ஒன்று இரண்டாக வரும்படியாக அரைத்து பத்திரத்தில் போட்டு வைத்து கொள்ளவும்.
பத்திரத்திதை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அரைத்த பாசிப்பருப்பைக் கொட்டி அத்துடன் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், கரம்மசாலா தூள், சோம்புத்தூள், உப்பு ஆகிய எல்லாவற்றையும் சேர்த்து 5 நிமிடத்திற்கு இளம் சூட்டில் கிளறவும்.
பத்திரத்திதை இறக்கி மல்லி கீரையை சிறுசிறு துண்டுகளாக வெட்டி போட்டு கிளறி 70 உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ளவும்.
ஒரு தட்டில் மைதாவுடன், டால்டாவை உருக்கி கொட்டி தேய்த்து பிசையவும்.
அத்துடன் ஒரு தேக்கரண்டி உப்பு, சோடா, தண்ணீர் ஆகியவற்றை போட்டு நன்றாக பிசையவும்.
பிசைந்து 70 உருண்டைகளாக உருட்டி வைத்து கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையையையும் வட்டமாக தட்டி அதற்குள் பூரண உருண்டையை வைத்து நன்றாக மூடி உருட்டி, வடை மாதிரி தட்டி வைத்து கொள்ளவும்.
எண்ணெய் சட்டியை அடுப்பில் ஏற்றி எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பாதியை போட்டு பாதாம் நிறம் வரும் வரை வறுத்து எடுத்து கொள்ளவும். மீதி பாதியையும் இதே மாதிரி வறுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்