மாங்காய்த்தொக்கு

தேதி: December 19, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மாங்காய் - 2
மிளகாய்த்தூள் - 5 டீஸ்பூன்
மஞ்சள்தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1 டீஸ்பூன்
பொடித்த வெல்லம் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுந்து - 1/4 டீஸ்பூன்
நல்லெணெய் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 

மாங்காயைத் தோல் சீவி மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெந்தயத்தை வாணலியில் லேசாக வறுத்து பின் பொடித்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் மாங்காயை போட்டு நன்கு வதக்கவும்.
மாங்காய் சிறிது வெந்த பின் மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்பு,பெருங்காயத்தூள் போட்டு சிறிது நேரம் வதக்கவும்.
தொக்கு சட்டியில் ஒட்டாத பதம் வந்தவுடன் வெல்லம், வெந்தயத்தூள் போட்டு சிறிது நேரம் களித்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்