முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு

தேதி: May 27, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

முருங்கைக்காய் - 2
சின்ன வெங்காயம் - 15
தேங்காய் - ஒரு மூடி
வறுத்த வேர்க்கடலை - 2 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - அரை மேசைக்கரண்டி
கடுகு - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10


 

வாணலியில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்த்து முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி போட்டு வேக வைக்கவும்.
மிக்ஸியில் வறுத்த வேர்க்கடலை மற்றும் தேங்காய் சேர்த்து நைசாக அரைக்கவும்.
அரைத்த தேங்காய் விழுதை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்த முருங்கைக்காயுடன் ஊற்றி கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றை குழம்பில் சேர்த்து கலக்கவும்.
காரம் அதிகமில்லாத, தேங்காய் எண்ணெய் மணத்துடன் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

நானும் இது போல வேர்கடலை சேர்த்து அரைச்சு நிறைய குழம்பு வகையில் சேர்ப்பேன், சுவை பிடிக்கும். நல்ல குறிப்பு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு சூப்பர், காரம் அதிகமில்லாதால் குழந்தைகளும் பிரியமாக சாப்பிடுவார்கள்.

பொரிச்ச குழம்பு உங்க செய்முறை கொஞ்சம் வித்தியாசமா இருக்கு செல்வி மேடம் இது போலவும் செய்து பார்க்கறேன் பொரிச்ச குழம்பு ரொம்ப பிடிக்கும்.

அன்பு வனி,
ஆமாம் வனி வேர்க்கடலை சேர்த்தாலே அதன் சுவையும், மணமும் தனி தான். எனக்கும் பிடிக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு பாலபாரதி,
நிச்சயம் குழந்தைகளுக்கு பிடிக்கும். நல்ல‌ மணமாக‌ இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

அன்பு காயத்ரி,
இது ஒரு மலையாள‌ நண்பி சொல்லிக் கொடுத்தது. வேர்க்கடலை சேர்ப்பது நான் கண்டுபிடிச்சது:) எப்படியோ சுவை நல்லா இருக்கும். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

குழம்பு சூப்பர் அக்கா. கடைசி படத்தை பார்க்கிறப்போ அப்டியே எடுத்து சாப்டனும் போல இருக்கு. அவசியம் ட்ரை பண்ணி பாக்குறேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

ஆஹா பொரிச்ச குழம்புல வேர்க்கடலையா சூப்பரா இருக்கே கண்டிப்பா செய்து பார்க்கிறேன் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

அன்பு உமா,
செய்து பார்த்துட்டு சொல்லுங்க‌. அதுக்கென்ன‌? எடுத்துக்கோங்க‌:)

அன்புடன்,
செல்வி.

அன்பு சுவர்ணா,
செய்து பாத்துட்டு சொல்லுங்க‌. நல்லா இருக்கும்.

அன்புடன்,
செல்வி.

இன்று உங்கள் குழம்புதான் செய்தேன்....சுவை மிக‌ நன்றாக‌ இருக்கிறது.ஃபோட்டோவை பிறகு முகநூலில் போடுகிறேன்.நன்றி புது குழம்பிற்கு...:‍)