பலாக்கொட்டை மாங்காய் அவியல்

தேதி: May 28, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

பலாக்கொட்டை - 10 - 15
மாங்காய் - பாதி
சின்ன வெங்காயம் - 5 - 7
பூண்டு - 5 பல்
கறிவேப்பிலை - சிறிது
மிளகாய் வற்றல் - 2
பச்சை மிளகாய் - 4
எண்ணெய், கடுகு, சீரகம், உளுந்து, கடலைப்பருப்பு - தாளிக்க
மஞ்சள் தூள், உப்பு - தேவையான அளவு
அரைக்க:
தேங்காய் துருவல் - அரை கப்
சீரகம் - அரை தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 2


 

பலாக்கொட்டையை தோல் நீக்கி நீளவாக்கில் 4 ஆக நறுக்கி வைக்கவும். மாங்காயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோல் உரித்துப் பொடியாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கி வைக்கவும். பலாக்கொட்டையில் சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும்.
பலாக்கொட்டையை 5 - 10 நிமிடங்கள் வேக வைத்து, அத்துடன் மாங்காய், பச்சை மிளகாய் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும்.
மிக்ஸியில் தேங்காய் துருவலுடன், சீரகம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு நைசாக அரைத்தெடுக்கவும்.
வேகவைத்த மாங்காய் பலாக்கொட்டை கலவையில் அரைத்த தேங்காய் விழுது மற்றும் உப்புச் சேர்த்து கொதிக்க விடவும்.
பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்தவற்றை தாளித்து, அதனுடன் மிளகாய் வற்றல் சேர்த்து சிவந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
தாளித்து வதக்கிய கலவையை கொதிக்கும் மாங்காய் கலவையில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்.
சுவையான பலாக்கொட்டை மாங்காய் அவியல் தயார்.

மாங்காயின் புளிப்புக்கு ஏற்றாற்போல் அளவை கூடுதலாகவோ அல்லது குறைக்கவோ செய்யவும். இது ரசம் சாதம் மற்றும் தயிர் சாதத்துடன் சாப்பிட நன்றாக இருக்கும். சூடான வெள்ளை சாதத்தில் பிசைந்து சாப்பிடவும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வனி அட்டகாசமான குறிப்பு மாங்காய்,பலாக்கொட்டை இரண்டுமே எனக்கு பிடிக்கும் சூப்பரான குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ரொம்ப சுவையான சூப்பர் குறிப்பு அக்கா சீம்பிளாவும் இருக்கு ட்ரை
பண்ணிட்டு எப்படி இருந்ததுன்னு சொல்லுறேன் அக்கா வாழ்த்துக்கள்
by Elaya.G

குறிப்பு அருமையா இருக்கு வனிங்க

மாங்காய் என்றாலே நாவூறுது,சூப்பர் + பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

குறிப்பை வெளியிட்ட அட்மின் மக்களுக்கு தேன்க்யூ தேன்க்யூ ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேன்க்யூ சுவா... ஹேப்பி ரொம்ப நாளைக்கு பின் மீண்டும் உங்களை இங்கே காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் ஹாய் ஹாய்... எப்படி இருக்கீங்க? பார்த்து ரொம்ப நாளாகுது :) மிக்க நன்றி இளையா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அருமையான அவியல் வனி. கடைசி படம் கண்ணை பறிக்குது. // ஹலசினஹன்னு அப்பா// உங்க பலாப்பழ போண்டா பேர் ஏன் மாறி இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

மிக்க நன்றி முசி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி உமா. :)

போண்டா... ஹலசினஹன்னு அப்பா. ஹலசின ஹன்னு என்பது பலாபழத்துக்கு மங்களுர் பக்கம் சொல்லும் பேர். இந்த இனிப்புக்கு இது தான் சரியான பேர். எனக்கு சரியான உச்சரிப்பு தெரியாம முதல்ல ஒரு பேரை போட்டேன், அப்பறம் சண்டே ஒரு ஆண்டி வீட்டுக்கு போயிருந்தேன், அவங்க தான் சரியான பேர் சொன்னாங்க. உடனே அட்மினில் சொல்லி மாத்திட்டேன். இந்த ஊர் குறிப்பு, இங்க சொல்லும் பேரிலேயே இருந்தால் நல்லா இருக்கும் தானே :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஒரே பலா ரெசிபி யா இருக்கு. ஈசியான சுவையான குறீப்பு

Be simple be sample

மிக்க நன்றி ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி, என்ன‌ ஒரே பலா குறிப்பா இருக்கு. ஒரு பழமா வாங்கியாச்சா? இங்கே கொஞ்சம் பார்சல் அனுப்ப‌ வேண்டியது தானே?

கடைசி படம் நல்லா இருக்கு.

அன்புடன்,
செல்வி.

முழு பழமா??! ச ச... தினம் மாலை நேரம் பலாச்சுளைகள் வாங்கி வருவது வழக்கம். :) அதுவே சேர்ந்து போகுதுன்னு எதாவது சமைப்பேன். நன்றி செல்வி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்று செய்தேன் வனி. சூப்பர். சும்மாவே அரைவாசியை சாப்ட்டு முடிச்சிட்டேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

செய்து பார்த்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி :) இவரும் பாதிக்கு மேல் சும்மாவே தான் சாப்பிட்டார். சாப்பிட்டு முடிச்ச பின் சாதத்தில் சேர்த்து சாப்பிட்டா நல்லா இருக்கும்னார்... எங்க முட்டிக்க ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா