க்ரிஸ்ப்பி ஃபிஷ் பால்ஸ்

தேதி: May 29, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

சாளை மீன் - 3
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
கொத்தமல்லித் தழை - கால் கைப்பிடி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
சீரகத் தூள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
முட்டையின் வெள்ளைக் கரு - பாதி


 

தேவையான அனைத்துப் பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும். வெங்காயம், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
சாளை மீனை சுத்தம் செய்து ஆவியில் வேக வைத்து முட்களை நீக்கி வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் மீனுடன் தூள் வகைகள், பொடியாக நறுக்கிய வைத்திருப்பவை, உப்பு மற்றும் முட்டையின் வெள்ளை கரு சேர்த்து கையால் நன்கு பிசைந்து கொள்ளவும்.
பிறகு அவற்றை உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
உருட்டிய உருண்டைகளை சூடான எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
நிறம் மாறி நன்கு கிரிஸ்பியாக வந்ததும் எண்ணெய் வடியவிட்டு எடுக்கவும்.
சுவையான க்ரிஸ்பி ஃபிஷ் பால்ஸ் தயார்.

எண்ணெயில் பொரித்தெடுக்க விரும்பாதவர்கள் அவனில் வைத்து பேக் செய்து எடுக்கலாம்.

இதை வாளை மீன் மற்றும் அயிலை மீன்களிலும் செய்யலாம்.

ரசம், சாம்பார் மற்றும் தயிர் போன்ற அனைத்து வகையான உணவுகளுக்கும் பொருந்தும்.

முள் நீக்கி செய்வதால் பார்ட்டிகளுக்கும் ஏற்றது.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

சூப்பர். இது போல மாலேவில் செய்வாங்க டூனா மீனில். நல்லா இருக்குங்க :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ரொம்ப அருமையான க்ரிஸ்ப்பியான ஃபிஸ் பால், பார்ப்பதற்கு போண்டா போல் உள்ளது, குறிப்பும் எளிமையாக உள்ளது, படங்களும் தெளிவாக உள்ளது.

யம்மி ஃபிஷ் பால்ஸ் வாணி. பார்க்கும்போதே ஆசையா இருக்கு.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

உருண்டை பார்க்க‌ அழகா கண்ணைக் கவருது. மீன் என்ப‌தால் வழக்கம் போல‌:)

அன்புடன்,
செல்வி.

வனி, பால பாரதி, உமா, செல்வி மேடம் அனைவரின் வருகைக்கும் பதிவிற்க்கும் மிக்க நன்றி.

குறிப்பு ரொம்ப...ரொம்ப‌... பிடிச்சிருக்கு!படங்களும் ரொம்ப‌ அழகு!
அவசியம் முயற்சிக்கிறேன்.
பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க‌ நன்றி.

குழந்தை பிறந்தாச்சுன்னு எங்கேயோ படிச்சேன். என்ன‌ குழந்தை வாணி, எப்ப‌ பிறந்தது?
குழந்தையும், நீங்களும் நலமா?

குழந்தைக்கும், உங்களுக்கும் எனது அன்பான‌ வாழ்த்துக்கள்!
எங்கே கேட்கிறதுன்னு புரியலை அதான் இங்க‌ பதிவு:)

அன்புடன்,
செல்வி.