உருளை வறுவல்

தேதி: June 5, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

உருளைக்கிழங்கு - 3 (பெரியது)
இஞ்சி, பூண்டு விழுது - கால் தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கடலை மாவு - அரை தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு - கால் தேக்கரண்டி
எண்ணெய் - முக்கால் தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு


 

தேவையானப் பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதனுடன் உருளைக்கிழங்கைப் போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்புச் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கிய உருளைக்கிழங்குடன் கடலை மாவு சேர்த்து பிரட்டி இறக்கி வைக்கவும்.
சுவையான உருளைக்கிழங்கு வறுவல் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

மீனா உருளைக்கிழங்கு வறுவல் சூப்பர், அப்படியே கூடவே தயிர் சாதம், எலுமிச்சை சாதம் வைச்சீங்கனா இப்பவே சாப்பிடுவோம். பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு.

எனக்கு பிடித்த‌ டிஸ்.சூப்பரா இருக்கு

ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்!

உருளை வறுவல் எங்க வீட்டில் எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது அப்படியே சாப்பிடுவோம் தயிர் சாதம் போட்டு உருளை வறுவல் கூட சாப்பிட்டா ஆஹா. பசங்க அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவாங்க அவ்வளோ பிடிக்கும் இதைப் போல் செய்து பார்க்கிறேன் மீனா

வறுவல் ஈசியா இருக்கு மீன்ஸ். நாளைக்கு செய்துட்டு சொல்றேன்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர். ஒரு கப் புளி சாதமும் சேர்த்து பார்சல் ப்ளீஸ் ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

உருளை வறுவல் சூப்பருங்கோ...
படங்கள் அழகோ அழகு...!
வாழ்துக‌ள்!

செய்தாச்சு இன்னைக்கு மதியம் லன்ச்கு. ரொம்ப சுவையா இருந்தது. ஆனா உங்களை போல கலர் வரல... நான் பயன்படுத்தும் தூள் அப்படி ;) சுவை அருமை. நன்றி மீனாள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஐய். ... எனக்கு பிடிச்ச சைட்டிஷ். சூப்பர்.

Be simple be sample

சூப்பர்.ஈசியாகவும் இருக்கு.

அறுசுவை அட்மின் மற்றும் டீமிற்கு மிக்க‌ நன்றி.

Expectation lead to Disappointment

வாழ்த்து தெரிவித்த‌ அனைத்து தோழிகளுக்கும் எனது நன்றியினை மனமார‌ தெரிவித்து கொள்கிறேன். மிகவும் தாமதமாக‌ சொல்வதற்கு மன்னிக்கவும்.

Expectation lead to Disappointment

லெமன் ரைஸ்க்கு காம்பினேஷன் சூப்பரா இருக்கும்.

நீ வெற்றியடைவதை உன்னைத் தவிர, வேறு யாராலும் தடுக்க முடியாது..

அன்புடன்
Sheela