கதை கவிதைகள் அனுப்புவோர் கவனத்திற்கு

அறுசுவைக்கு தங்களது படைப்புகளை அனுப்பும் நேயர்களுக்கான அறிவிப்பு இது.

கதை, கவிதை போன்ற உங்களது படைப்புகளை அறுசுவைக்கு அனுப்பும்போது, உங்கள் பெயர் மற்றும் உறுப்பினர் எண் ஆகியவற்றை மறவாமல் குறிப்பிட்டு அனுப்பவும். படைப்புகளை அனுப்புகின்ற சிலர் தங்களது பெயரைக்கூட குறிப்பிடுவதில்லை. யாரிடம் இருந்து வருகின்றது, என்ன பெயரில் வெளியிட வேண்டும் என்று எந்த தகவலும் இல்லாத படைப்புகளை நாங்கள் எடுத்துக் கொள்வதில்லை. ஏன் எங்களது படைப்புகளை வெளியிடவில்லை என்று இவர்கள் உடனே அடுத்த மின்னஞ்சல் அனுப்புகின்றனர். அதற்கும் எங்கள் பக்கமிருந்து பதில் இருப்பதில்லை.

தங்களது படைப்புகளை வெளியிடுங்கள் என்று ஒரு வார்த்தைக்கூட குறிப்பிடாமல், பெயரும் குறிப்பிடாமல் வரும் படைப்புகளை நாங்கள் படித்துப் பார்ப்பதற்காக அனுப்பப்பட்ட படைப்புகளாக எண்ணி, வெறுமனே படித்துவிட்டு விட்டுவிடுவோம். எனவே, தயவுசெய்து உங்கள் பெயர், உறுப்பினர் எண் விபரங்களுடன், இது உங்களது சொந்தப் படைப்பு, வேறு எங்கும் ஏற்கனவே வெளியானதில்லை என்ற உறுதிமொழியையும் சேர்த்து அனுப்பவும். தொடர்ந்து படைப்புகளை வழங்கி வருகின்றவர்கள், அறிமுகமானவர்கள் இவ்வாறு செய்யவேண்டியது இல்லை. புதிதாக படைப்புகளை அனுப்புவோர் மறவாமல் மேற்கண்ட விபரங்களைக் கொடுக்கவும்.

மேலும் சில பதிவுகள்