மெனஸ்காய்

தேதி: June 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (2 votes)

 

மாங்காய் - ஒன்று
துருவிய வெல்லம் - 3 மேசைக்கரண்டி
எள்ளு - ஒரு தேக்கரண்டி
வெந்தயம் - கால் தேக்கரண்டி
தனியா - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 4
கறிவேப்பிலை - 2 கொத்து
தேங்காய் - கட்டை விரல் அளவில் 4 துண்டுகள்
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி


 

எள்ளை வெறும் கடாயில் போட்டு வாசம் வரும் வரை சிவக்க வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெந்தயத்தைப் போட்டு வறுக்கவும்.
வெந்தயம் சிவந்ததும் தனியா, உளுந்து, மிளகாய் வற்றல் ஆகியவற்றை ஒன்றின்பின் ஒன்றாகச் சேர்த்து வறுக்கவும்.
உளுந்து சிவந்ததும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
வறுத்த எள்ளுடன் எண்ணெயில் வறுத்தவற்றையும், தேங்காய் துண்டுகளையும் சேர்த்து மிக்ஸியில் போட்டு பொடி செய்து, பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும்.
மாங்காயைத் தோல் சீவி சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு, அதனுடன் துருவிய வெல்லத்தைச் சேர்த்து மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.
மாங்காய் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவைச் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, உப்புச் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கவும்.
இனிப்பு, புளிப்பு மற்றும் காரம் கலந்த சுவையான மெனஸ்காய் தயார். இட்லி, தோசை மற்றும் தயிர் சாதத்திற்கு பக்க உணவாகவும், வெறும் சாதத்துடன் பிசைந்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

இது ஒரு கர்நாடக உணவு வகை. முக்கியமாக மங்களூர், உடுப்பி ஸ்பெஷல். பிராமணர்களின் பண்டிகைகள் மற்றும் விசேஷங்களில் நிச்சயமாக பரிமாறப்படும் உணவு இது. இதற்கு அவர்கள் தேங்காய் எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள்.

தேங்காய் எண்ணெயில் வெந்தயம், உளுந்து எல்லாம் வறுபடும் போது வரும் வாசமே அருமையாக இருக்கும். தேங்காய் எண்ணெயை விரும்பாதவர்கள் வழக்கமாக அவர்கள் பயன்படுத்தும் எண்ணெயிலேயே செய்யலாம்.

விரும்பினால் கடைசியாக தாளித்துச் சேர்க்கலாம். தாளிக்காமலேயே நன்றாக இருக்கும். மாங்காயின் புளிப்புக்கு ஏற்ப சுவை பார்த்து காரம் மற்றும் இனிப்பின் அளவை மாற்றிக் கொள்ளவும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

பார்த்ததும் நாவூறுது... நம்ம ஊர் பச்சடி மாதிரியா? நான் தான் ஃபர்ஸ்ட்.. அதனால எனக்கு கொடுத்துடுங்க...

கலை

உங்க ரெசிபி பெயரை பார்த்தவுடனேயே நினைத்தேன் கண்டிப்பா இது வனிதா வோட தான் இருக்கும். ஏன்னா உங்க ரெசிபி பெயரே வித்தியாசமாகத்தான் இருக்கும். மெனஸ்காய் பெயரே சாஃப்டா இருக்கு. பச்சடி மாதிரிதான் இருக்கு சூப்பர்.

குறிப்பு சூப்பர் வனி. இதை நான் பைனாப்பிள் வச்சு ட்ரை பண்ணிருக்கேன். (டிவில பாத்துட்டு) அதுவும் ரொம்ப நல்லாருந்தது.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

வனி அக்கா,
மெனஸ் காய் ஈஸி டிப் போல‌ ,
மாங்காய் பச்சடி அடிக்கடி சாப்பிடுபவோம், இது புதுசா இருக்கு.

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

குறிப்பை வெளியிட்ட அட்மின் குழுவினருக்கு மிக்க நன்றி :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்படியே எடுத்துங்க... :) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹஹஹா... நான் போகும் ஊரில் எல்லாம் பேரு எக்குத்தப்பா வைக்கிறாங்க பாரதி ;) மிக்க நன்றி.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நன்றி உமா :) பைனாப்பிளும் செய்யலாம்... கொஞ்சம் வித்தியாசமா செய்வாங்க அதை, அதுவும் அனுப்பியிருக்கேன், லைனா வருவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மிக்க நன்றி :) பச்சடியில் இருந்து சுவை கொஞ்சம் மாறுபடும். ட்ரை பண்ணிப்பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா