வெண்டைக்காய் புளி பச்சடி

தேதி: June 11, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (1 vote)

 

வெண்டைக்காய் - அரை கிலோ
வெங்காயம் - 2
தக்காளி - 2
புளி பேஸ்ட் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
சீரகத் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க


 

தேவையானவற்றைத் தயாராக எடுத்து வைக்கவும்.
வெண்டைக்காய், வெங்காயம் மற்றும் தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளித்து, வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
பிறகு தூள் வகைகள் சேர்த்து பிரட்டவும்.
அத்துடன் வெண்டைக்காய் மற்றும் உப்புச் சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேக வைக்கவும்.
பிறகு மூடியைத் திறந்து புளி சேர்த்து இடையிடையே கிளறிவிட்டு, வெந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான வெண்டைக்காய் புளி பச்சடி தயார். பருப்புக்குத் தொட்டுக் கொள்ளச் சுவையாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வெண்டைக்காய் புளி பச்சடி அருமையாக இருக்கும்னு போட்டோஸ் பார்த்தாலே தெரியுது... எனக்கு வெண்டைக்காய் ரொம்ப பிடிக்கும்.. செய்து பார்க்கிறேன்... காய்கறிகளை எல்லாம் (குறிப்பா வெண்டைக்காய்) அழகா ஒன்று போல நறுக்கி வைச்சுருக்கீங்க...

கலை

வெண்டைக்காய் புளி பச்சடி சூப்பர், வெண்டைக்காய் ரொம்ப ப்ரஷ்காக இருக்கு, அது மட்டும் இல்ல ரொம்ப பொடியாக அழகா நறுக்கி இருக்கீங்க. ரொம்ப சூப்பரான இருக்கு தயிர் சாதம், பருப்பு சாதத்திற்கு சூப்பரா சைட் டிஷ்.

பச்சடி சூப்பர் வாணி. ரொம்ப பொறுமையா வெண்டைக்காய் கட் பண்ணிருகீங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

சூப்பர்... புளி, சீரகதூள் எல்லாம் சேர்த்து வித்தியாசமா இருக்கு... கட்டாயம் செய்யறேன். நறுக்கிய வெண்டைக்காய் கூட தயாரா இருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா