இறால் தொக்கு

தேதி: June 12, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.5 (2 votes)

 

இறால் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
பூண்டு - 6 பல்
தேங்காய்ப் பால் - ஒரு கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
தனியா தூள் - ஒரு தேக்கரண்டி
சீரகத் தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - 6
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி


 

வெங்காயம், தக்காளி மற்றும் பூண்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இறாலைச் சுத்தம் செய்து மஞ்சள் தூள் போட்டு கழுவி வைக்கவும்.
வாணலியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, பூண்டு சேர்த்து லேசாக வதக்கிவிட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
பிறகு தக்காளியைச் சேர்த்து வதக்கிய பிறகு தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் இறாலைச் சேர்த்து வதக்கவும்.
தக்காளி இறாலுடன் சேர்ந்து நன்கு கரைந்து வரும் போது தேங்காய்ப் பால் சேர்க்கவும்.
இறால் வெந்து நன்கு சுருள வரும் போது இறக்கவும்.
சுவையான இறால் தொக்கு தயார். சாதத்துடன் கலந்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். தோசை, இட்லிக்கும் நன்றாக இருக்கும்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

தேங்காய் பால் சேர்த்து வேக வைச்சு இறால் தொக்கு அருமையா செஞ்சுருக்கீங்க.. எப்போ சாப்பிடச் சொன்னாலும் இறால் மட்டும் வேண்டாம் னு சொல்லவே மாட்டேன்.. அவ்ளோ பிடிக்கும்.. சண்டே கண்டிப்பா இந்த இறால் தொக்கு ட்ரை பண்றேன்..

-> ரம்யா

இறால் தொக்கு சூப்பர், எங்க வீட்லேயும் தேங்காய்ப் பால் சேர்த்து செய்தது கிடையாது இனி மேல் தேங்காய்ப் பால் சேர்த்து செய்ய போறேன், இந்த மாதிரி தொக்கு பதத்தில் வைத்தால் சாதத்தில் போட்டும் சாப்பிடலாம்.

என்ன அதிசயம் தேங்காய் பால்? இறால்? நடக்கட்டும் நடக்கட்டும். நல்லா இருக்கு.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் இப்படி தான் செய்வேன்.ஆனால்,தனியா தூள் சேர்க்க‌ மாட்டேன்.பதிலாக‌ கரம் மசாலா பொடி சேர்ப்பேன்.

இறால் ரொம்ப‌ பிடிக்குமோ? இப்படி செய்தால் ரொம்ப‌ டேஸ்டா இருக்குன்னு வீட்டில‌ சொல்வாங்க‌;) பண்ணிட்டு சொல்லுங்க‌.

அன்புடன்,
செல்வி.

சாதத்தில் கலந்து சாப்பிடற‌ மாதிரியும் இருக்கணும்னு கேட்பாங்க‌. அதான் இப்படி செய்வேன். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

எப்படியும் நாம் சாப்பிட‌ போறதில்லை. அதான் தைரியமாக‌ செய்தாச்சு. மகளுக்கு ரொம்ப‌ பிடிக்கும். அதான் அவங்க‌ வந்த‌ போது செய்தேன்:)

அன்புடன்,
செல்வி.

தனியாத்தூள் சேர்த்து செய்தால் சாதத்தில் கலந்து சாப்பிடவும் நல்லா இருக்கும். நன்றி!

அன்புடன்,
செல்வி.