தினை பொங்கல்

தேதி: June 16, 2014

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 5 (3 votes)

 

தினை - 2 ஆழாக்கு (ஒரு டம்ளர்)
பாசிப்பருப்பு - ஒரு ஆழாக்கு (அரை டம்ளர்)
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மிளகு - ஒரு தேக்கரண்டி
இஞ்சி துருவல் - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
நிலக்கடலை - ஒரு மேசைக்கரண்டி
நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
பால் - ஒரு டம்ளர்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு


 

தேவையான பொருட்களைத் தயாராக எடுத்துக் கொள்ளவும்.
பாசிப்பருப்பை லேசாக வறுத்து, தினையுடன் சேர்த்து நன்கு களைந்து கல் அரித்து குக்கரில் போட்டு, 4 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து 5, 6 விசில் வரும் வரை வேகவிட்டு இறக்கவும். விசில் அடங்கியதும் குக்கரைத் திறந்து பாலைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.
வாணலியில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், மிளகு, நிலக்கடலை, இஞ்சி துருவல் மற்றும் கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும்.
வதக்கியவற்றைப் பொங்கலில் சேர்த்து கலந்துவிடவும்.
அதனுடன் நெய் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்துக் கிளறி 2 நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
சுவையான தினை பொங்கல் தயார். சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.

டயட்டுக்காக செய்ததால் முந்திரி சேர்க்கவில்லை. நெய் குறைவாக சேர்த்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் முந்திரி, நெய் சேர்த்துக் கொள்ளலாம்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

கலக்கல் பொங்கல் அக்கா சூப்பர்.:-)

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

தினை பொங்கல் மிகவும் ருசியாக இருக்கும் போல சூப்பர்.

தினை பொங்கல் செய்முறை மிகவும் ஈசியா இருக்கு, பார்க்கவும் சூப்பர்

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மிக்க‌ நன்றி உமா!

அன்புடன்,
செல்வி.

உண்மையில் சாதா பொங்கலை விட‌ இது ருசி அதிகம் தான். செய்து பாருங்க‌.

அன்புடன்,
செல்வி.

தினை சீக்கிரம் வெந்துடும். விரைவில் செய்துடலாம். நன்றி!

அன்புடன்,
செல்வி.